புதன், ஜனவரி 22, 2014

திருஷ்டி பரிகாரங்கள்

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பார்கள், 

அந்த கண்ணடிதான் திருஷ்டி அல்லது கண்ணேறு  என்பது.

பிறரோட பார்வையின் தாக்கம் பட்டு, பாதிப்பு ஏற்படுவது தான்  திருஷ்டி.

பிறரோட பார்வை மட்டும் அல்ல,

நம்ம பார்வையே கூடபாதிப்பு ஏற்படுத்தும் என்பார்கள்,

பொதுவா "திருஷ்டி" என்பது பார்வை.

தீய பார்வை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

சின்ன சின்ன பரிகாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

குழந்தை என்றாலே அழகுதான்.அதில் வருவது தான்  திருஷ்டி.

திருஷ்டி போட்டு வைப்பதுதான் ஆரம்பம்.

பொதுவாக கண் மை, கொட்டாங்குச்சி மை, கருப்பு சாந்தால் 

கன்னத்திலும், பாதத்திலும்  திருஷ்டி போட்டு வைப்பார்கள்.

கூடுதல் பலன் பெற, கோவில்களில் நடக்கும் ஹோமத்தின் 

பஸ்மத்தை [சாம்பல்] நீரில் குழைத்து வைக்கவும்.

குழந்தை பிறந்த நாளில் இருந்து ,பெயர் சூட்டும் நாள் வரை 

குழந்தைக்கு  திருஷ்டி சுற்றுவார்கள்.

கருப்பு வளையலை போட்டு, அடுத்த நாள் அதை கழட்டி 

வேறு கருப்பு வளையலை போட்டு விட்டு, 

கழட்டிய  கருப்பு வளையலை குழந்தையின் 

தலைக்கு மேல் இடமிருந்து வலமாக 

மூன்று முறை சுற்றி மற்ற திருஷ்டி பொருளோடு 

வீட்டு வாசலில் கொட்டி விடணும்.

தினமும் மாலை சுமார் 6மணிக்கு செய்ய வேண்டும்.

குழந்தையை வளைய வரக்கூடிய திருஷ்டி 

வளையலை கழட்டுவது போல் கழண்டு ஓடி விடும் என்பது ஐதீகம்.

குழந்தை சரியாக பால் குடிக்க வில்லை என்றால்:-

அம்மாவை கிழக்கு பார்த்து உக்கார வைத்து,

குழந்தையை மடியில் உக்கார வைக்கவும்.

ஒரு கைபிடி உப்பை எடுத்துக்கொண்டு 

கையை இறுக்க மூடிக் கொண்டு 

குழந்தை தலைக்கு மேல் 

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

சுற்றியவுடன், உட்கார்ந்த இடத்தில் இருந்து 

அம்மாவை நகர்ந்து போக சொல்லவும்.

உப்பை, கிணறு இருந்தால் அதில் போடவும்.

இல்லாத போது ஒரு பாத்திரத்தில் நீர் 

எடுத்து அதில் கரைத்து, வெளியில் ஊற்றவும்.

கையை கழுவ வேண்டும்.

குழந்தை சரியாக சாப்பிடா விட்டால் :-

1. சாதத்தில் அஞ்சு சிறு உருண்டைகள் ஆக்கவும்.

ஒரு உருண்டையை வெள்ளையாகவும், 

மீதி 4 உருண்டைகளை வண்ண உருண்டைகளாக்கவும்.

[மஞ்சத்தூள், குங்குமம், கரித்தூள், ஆரஞ்சுதூள்]

மதியம் 12மணிக்கு கிழக்குப் பார்த்து 

நடுவாசலில் குழந்தையை நிற்க வைத்து 

ஒவ்வொரு வண்ண சாத உருண்டைகளை 

எடுத்து தலையை சுற்றி 

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி 

ஒவ்வொரு உருண்டைகளையும் நான்காக பிரித்து,

நான்கு திசைகளிலும் வீசவும்.

அங்கேயே  குழந்தையின் பாதங்களை நன்கு கழுவி விட்டு 

வீட்டுக்கு செல்ல சொல்லவும்.

நீங்களும்  பாதங்களை நன்கு கழுவி விட்டு 

வீட்டுக்கு செல்லவும்.

2. குழந்தை சாப்பிட தட்டில் வைத்துள்ள சாதத்தில் 

ஒரு சிறு உருண்டையை எடுத்து 

தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.

குழந்தை சாப்பிட்டு முடித்ததும் அந்த உருண்டையை எடுத்து 

குழந்தை தலைக்கு மேல் 

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

அதை தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.

குழந்தையை தட்டில் கை அலம்ப சொல்லவும். 

அந்த நீரில் சுற்றி வைத்த சாதத்தை கரைத்து 

வீட்டு வாசலில் யார் காலிலும் மிதிபடாமல் 

ஓரமாக கொட்டவும்.

வீட்டின் வாசலிலேயே தட்டையும், 

கையையும் கழுவி விட்டு உள்ளே வரவும்.

அதன் பின் தொடர்ந்து ஆறு  நாட்கள் 

இது போல் செய்யவும்.

ஆனால் இரண்டாவது நாள் முதல் 

சாத உருண்டையை காகத்திற்குப் போடவும்.
   
ஏழு நாட்களுக்குப் பிறகு நல்ல பலன் தெரியும்.

3. பாலையும், உப்பையும் மந்திரித்து வரலாம்.

4. யார் முன்பும் உணவை ஊட்டக் கூடாது.

வேடிக்கை காட்டி ஊட்டும் போது 

யாரும் பார்க்காதவாறு 

ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கவும்.


வார வாரம்  திருஷ்டி சுற்ற வேண்டும்.

சனி அல் ஞாயிற்று கிழமைகளில் செய்யவும்.

குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,

 அருகில் ஒரு பாத்திரத்தில் நீர்  வைத்து வைக்கவும்.

தாய் அல் ஒரு முதிய பெண்மணி 

குழந்தைக்கு எதிரில் நின்று கொண்டு 

வலது கையால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை 

வருடிக்கொடுத்தா படியே , மூன்று முறை 

"ஓம்  உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா 

எவ்வகை திருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா" 

சொல்லி ,அந்த நீரை  வாசலில் கொட்டிவிட்டு 

கையை கழுவி விட்டு உள்ளே வரவும்.


அடிக்கடி தர்க்காவிற்குப் போய் 

தொழுகை முடிந்து வருவர்களிடம் ஓதுவது,

பக்கீர்கள் மயில் தோகையால் தடவுவது 

அனைவரும் அறிந்த திருஷ்டி பரிகாரங்கள்.

 தர்க்காவிற்குப் போக முடியாத போது 

தோகையை சுவாமி படத்தின் முன் வைத்து வணங்கி விட்டு 

குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,

 குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை தடவவும்.

"கண்ணேறு கழிந்து குழந்தை முன்னேற வேண்டும்"

என்று சொல்லியபடியே 7 அல் 11 முறை தடவவும்.

முடிந்ததும் குழந்தையை அங்கிருந்து போக சொல்லிவிட்டு 

தோகையை மூன்று முறை ஊதவும்.

கை,காலை கழுவி விட்டு  தோகையை 

பூஜை அறையில் வைக்கவும்.

இந்த பரிகாரம் திடீர் என்று குழந்தை

சுணங்கி,சோர்ந்து இருக்கும் போது செய்ய வேண்டும்.


பொதுவாக அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில் 

ஏதோ ஒரு திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.

ஒரு தட்டில் ஆரத்தி கரைத்துக் கொள்ள வேண்டும்.

[மஞ்சள்தூள், சிறிது சுண்ணாம்பு - நீர் விட்டு கரைத்து 

அதில், இருந்தால் ஒரு வெற்றிலையை பிய்த்துப் போடுவது 

ஒரு வர மிளகாயை போடலாம் ]

அருகில் ஒரு சொம்பில் அல்  சிறிய பாத்திரத்தில் நீர் வைக்கவும்.

தாயும் சேயும் அல்  குழந்தை மட்டும் 

கிழக்கு நோக்கி நிற்க வைத்து,முதலில் 

ஆரத்தியால் தலைக்கு மேல் 

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

பின் நீர் பாத்திரத்தால் இதே போல் செய்யவும்.

அவர்களை அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக சொல்லவும்.

ஆரத்தியையும், நீரையும் வாசலில் போய் கொட்டவும்.

கையைக் கழுவிக்கொண்டு வரவும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்யலாம். 

 அம்மாவாசையன்று இது போல் செய்வது நல்லது.

ஒரு பெரிய சிகிச்சைக்குப்பிறகு மருத்துவமனையிலிருந்து 

வீ ட்டிற்கு வரும்போதும் ,

குழந்தையை முதன் முதலாக வீ ட்டிற்கு எடுத்து வரும்போதும் 

வீட்டில் ஒரு சுப காரியம் நடந்து முடிந்ததும் வீட்டோர் அனைவருக்கும்,

மணமக்கள் முதன் முதலாக வீ ட்டிற்கு வரும்போதும் 

இந்த முறையில் திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.


தேங்காய் மீது கற்பூரம் ஏற்றி தலையை சுற்றி வாசலில் உடைப்பதும் 

இந்த முறையில் வாகனங்களுக்கு  திருஷ்டி கழிப்பதும்  தெரிந்த விஷயம்.


ஒரு எழுமிச்சை பழத்தை நான்காக கீறி 

உள்ளே குங்குமம் பூசி  தலையை சுற்றி 

நாற் சந்தியில் பழத்தை நான்காக பிரித்து 

நான்கு திசைகளிலும் வீசி எறிந்து விட வேண்டும். 


மிக எளிதாக பெரியவர்கள் திருஷ்டி கழிப்பது உண்டு.

ஒரு படியில் கொஞ்சம் வரமிளகாய், கடுகு,உப்பு எடுத்துக் கொண்டு

 எப்பவும் செய்வது போல் தலையை சுற்றி 

விறகடுப்பில் போடுவார்கள்'

அது எவ்வளவு சடசட சப்தம் கொடுக்கிறதோ 

அவ்வளவு திருஷ்டி இருப்பதாக சொல்வார்கள்.


குழந்தை பெற்ற தாய், பட்சி கூடு அடையும் நேரம் 

[அதாவது மாலை 6 மணிக்கு மேல் ]

வெளியில் வரக் கூடாது 

அவர் இருக்கும் அறை  வாசலில் 6 மணிக்கு

சாம்பலால் மூன்று கோடு போடுவார்கள்.

[நான் அப்படித்தான் இருந்தேன்].

அடுத்த நாள் காலையில் தான் வெளியில் வர வேண்டும்.

இது பெயர் வைக்கும் நாள் வரை செய்வார்கள்.


குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகும் வரை 

அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில் 

 திரி சுற்றி ஆரத்தி சுற்றுவார்கள்.

மூன்று துணி திரி திரிப்பார்கள்.

வழக்கம் போல் ஆரத்தி கரைப்பார்கள்.

 ஒரு சொம்பில் அல்  சிறிய பாத்திரத்தில் நீர் இருக்கும்.

ஒருஒரு திரியாய் பற்ற வைத்து 

வழக்கம் போல் தலையை சுற்றி 

ஆரத்தி தட்டில் போட்டு .

பின் வழக்கம் போல் ஆரத்தி சுற்றி 

நீர் பாத்திரத்தால் இதே போல் செய்து 

வாசலில் கொட்டி விடுவார்கள்.


பாடம் போடுவது பரவலான பரிகாரம்.

பாடம் போடுபவரிடம் குழந்தையை காட்டி 

அவர் பாடம் போட்டு வீபூதி பூசி விடுவார்.


மிக சிறிய குழந்தையை தாயின் மடியில் அமர்த்தி,

பூந்துடைப்பக் குச்சிகள் எட்டினை எடுத்து 

அதில் பெருக்கும் பகுதியை கையால் பிடித்துக் கொண்டு 

மறு முனையால் குழந்தையின் தலைக்கு மேல் 

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

பின் தலை முதல் கால் வரை தொடுவது போல் 

மெதுவாக மூன்று முறை தடவவும்.

அக்குச்சிகளை வீட்டின் பின் புறம் 

தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்தவும்.

பட்பட் என்ற சப்தத்துடன் எரிந்து சாம்பல் ஆவது போல் 

குழந்தைக்கு பயத்தால் வந்த திருஷ்டி 

பட்  என்று போய்விடும் என்பார்கள்.


ஒரு புதிய மண் சட்டியில் ஊமத்தங்காய் ஒன்று,

படிகாரம் ஒரு கட்டி,தெருமண்  கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும்.

பயந்து வந்த பெரிய குழந்தையை 

கிழக்கு நோக்கி நிற்க வைத்து

மண் சட்டியை வழக்கம் போல் தலையை சுற்றவும்.

பின்   குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை

மூன்று முறை இடம், வலமாக சுற்றவும்.

அச்சட்டியை மூன்று தெருக்கள் கூடும் 

முச்சந்தியில் போட்டு உடைக்கவும்.

பின் ஓரமாக தள்ளி விடவும்.

வீட்டு வாசலிலேயே காலை கழுவி  விட்டு 

தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு 

வீட்டுக்குள் போக வேண்டும்.


குழந்தையை குளிப்பாட்டும் போது 

காலில் படுக்க வைத்து தான்  குளிப்போம்.

காலுக்கு அடியில் ஒரு சொம்பில் 

குழந்தை உடலில் இருந்து வடியும் நீரை பிடித்து 

அதை தலையை சுற்றி கிழே  ஊற்றி விட்டு 

சொம்பை தலை கீழாக கவிழ்த்து விட்டு 

அதன் மேல் கையை வைத்து நெட்டி முறிப்பதும் 

பாலாடையில் பால் புகட்டி விட்டு 

பாலாடையை தலையை சுற்றி விட்டு 

கவிழ்த்து வைப்பதும் திருஷ்டி பரிகாரம்தான்.

தாய்க்கு பிள்ளைகள் எத்தனை வயதானாலும் 

குழந்தை போல் தான் தெரிகிறார்கள்.

அதனால் இந்த  திருஷ்டி பரிகாரங்கள் 

நடந்து கொண்டே தான் இருக்கும்.

அதுவும் நம்பிக்கை உடன்.

நானும் ஒரு தாய்தான். 

திங்கள், ஜனவரி 20, 2014

நாக சதுர்த்தி

நாக சதுர்த்தி
இந்துக்களின்   கலாசாரம், பண்பாடு, வழிபாடுகள், 

விரதங்கள், பண்டிகைகள் எல்லாமே 

இயற்கையை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. 

பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்,

மற்றும் மலைகள், மரங்கள், விலங்குகள், 

பட்சிகளையும் தெய்வமாகவும், 

யானை, கருடன், குதிரை என்று பல மிருகங்கள், 

பட்சிகள் கடவுளின் வாகனமாக இருக்கின்றன. 

இந்து மதத் தோடும், இந்துக் கடவுள்களோடும் 

நாகங்கள் கொண்டுள்ள தொடர்புகள் ஏராளம்.

பறவைகளில் கருடனையும் மற்றும்  நாகப் பாம்பையும் 

போற்றி வழிபடுவதற்கென்று ஏற்பட்டுள்ள பண்டிகையாக

நாக சதுர்த் தியும் கருட பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், 

நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் 

ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.

சதுர்த்தி என்றால் நான்கு. 

இந்த நான்கு என்ற அலைவரிசை எண் 

கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். 

எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று 

வழிபடுவது மிகவும் விசேஷமாகும். 

ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய

 சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தியையும், 

ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் 

நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.

அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு.

நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து


புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம் !


நாகதோஷம் உள்ளவர்களும்

ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும்

ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து

நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம்.

ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும்


 பஞ்சமி திதியன்றுஇந்த விரதத்தை மேற்கொண்டு 


12ம் மாதமானஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று 


இவ்விரதத்தை முடிப்பர்.


புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்குகுழந்தைப்பேறும்

குழந்தைப்பேறு உடையவர்கள் குழந்தைகளுக்கு

ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி

வழிபட்டு மணப்பேறும், மகப்பேறும் பெறுகிறார்கள்.

மகாராஷ்டிரா ஷிராலா கிராமத்தில் கோலாகலமாக

ஆண்டுதோறும் நடைபெறும் நாக பஞ்சமி விழா

[கோலாப்பூரிலிருந்து ஐம்பது கி.மீ. தொலைவிலும்,

மும்பையிலிருந்து நானூறு கி.மீ. தூரத்திலும் உள்ளது ].

ஆசியாவிலேயே நாக பஞ்சமியன்று,

நாகங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக

மிகப் பெரிய பாம்புக் கண்காட்சி நடைபெறும் .

அயல்நாட்டு யாத்ரீகர்கள் பலரும் இதைக் காண 

மிகுந்தஆவலுடன் கூடுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட

நாக மண்டலி’கள்இருக்கின்றன.

இவற்றில் கொடிய விஷமுடைய பாம்புகள் பலவும்

வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாக பஞ்சமிக்கு ஒரு வாரம் முன்னதாகவே,

மண்டலியைச் சேர்ந்த பாம்புப் பிடாரன்கள் ஊரெல்லாம் சுற்றி

பல புதிய கருநாகங்களைப் பிடித்து


 மண்பாண்டத்தில் வைத்து,

எலிகளை ஆகாரமாகத் தந்து பராமரிக்கின்றனர்.

அதன் விஷப்பற்களைப் பிடுங்குவது

தெய்வ குற்றமாகும்எனக் கருதுகிறார்கள்.

நாக பஞ்சமியன்று, பாம்புகள் வைத்துள்ள

மண்பாண்டத்தைத் தலைமேல் சுமந்துகொண்டு

நாக தேவதை அம்பாவின் கோயிலுக்கு

ஊர்வலமாகச் செல்வார்கள்.

கருவறை முன் மண்டபத்தில்


 நாகங்களைப் பிடித்துக் காட்டியபடி,

‘நாகோபா-லா, தூத் தே மாயீ!’ 


(நாகராஜா வந்திருக்கிறார்,

பால் அளிக்க வாருங்கள், தாயீ!’) என்று கூவுவார்கள்.


அவற்றின் முன், கூழாங்கற்கள் நிறைந்த

வெண்ணிறக் கிண்ணத்தைக்குலுக்கி, 


அங்குமிங்கும் ஆட்டுவார்கள்.

அப்போது படமெடுத்துச் சீறும் பாம்புகளைக்

காணவே குலை நடுங்கும்!

பெண்கள் அவற்றின்மீது மஞ்சள், குங்குமம்,

மலர்கள் தூவி, வழிபடுவர்.

பாத்திரங்களில் வைக்கப்படும் பாலை அவை கொத்தும்.

பிடாரன்களுக்குப் பணமும் துணிமணிகளும் அளிக்கப்படும்.

பின்பு, தேவி அம்பாவுக்கு ஆராதனை நடந்தேறும்.

ஒவ்வொரு மண்டலியும் பாம்புகள் உள்ள பானையை

மாட்டு வண்டியில் ஏற்றி, ஷிராலா கிராமத்தைச் சேர்ந்த

முப்பத்திரண்டு குக்கிராமங்களுக்கும் 


ஊர்வலமாகச் சென்று

‘நாக தரிசனம்‘ செய்து வைப்பார்கள்.

முடிவில், எந்த மண்டலியின் கருநாகம்

நடுவர்களால் சிறப்பானதாகக்

கருதப்படுகிறதோ, அதற்குப் பரிசுகள் வழங்கி

மரியாதை செலுத்துவர்.

"பூவாளூர்' திருத்தலம்.

இவ்வாலயத்தில், தனிச் சிறப்புடைய

"வெள்ளை விநாயகர் சந்நிதி' உள்ளது.

இவர் வலம்புரி விநாயகர்.


நாகதோஷம் உள்ளவர்கள்  

இந்த விநாயகருக்கு அர்ச்சனை செய்து,

"மோதகம் நிவேதனம்' செய்தால்

 நாகதோஷம் நீங்கும்

என்கின்றனர் பெரியோர்கள்.

திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து

இங்கு வருவதற்குநேரடி பேருந்து வசதி உண்டு.

இல்லையேல் லால்குடி வந்து,

அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள


 இந்த ஊருக்குவேறு பேருந்துகளில் வரலாம்.


விரத நாளன்று 

வீட்டு வாசற்படிக்கு அருகில் நாகத்தைப் போல்

வரைந்து பூஜை செய்யலாம். 


விரத நாளன்று ஆற்றக்கூடிய கருமங்கள்--

அன்றைய தினம் நாகர்களான

அனந்தன், வாசுகி, குக்ஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன்,

கங்கு பாலன், கார்க் கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின்

திருப்பெயர்களைச் சொல்லிக்கொண்டே

புற்றிற்கு பால் விட்டு வழிபடுவது ஒரு முறையாகும்.

நாகபஞ்சமியை விரதமாகக் கடைப்பிடித்து

நாக பூஜை செய்ய முடியாதவர்கள்

நாகராஜனின் சுலோகத்தை கூறி பலன் பெறலாம்

நாகராஜனுக்கு உரிய சுலோகம்

"நாகராஜ மஹாபாகு ஸர்வா 


பீஷ்ட பலப்ரத நமஸ்கரோமி

தேவேச த்ராஹிமாம் கருணாநிதே

உமா கோமள ஹஸ்தாப்ய ஸம்பாவித லலாடகம்

ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்'.



ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதியே

கருட மற்றும் நாக பஞ்சமி என அழைக்கப்படுகிறது.

ஆவணி மாத சுக்லபட்ச பஞ்சமியிலும் 


இந்தப் பண்டிகைகொண்டாடப்படுகிறது.

தென் மாநிலங்களில் பாம்புப் புற்றுகள் மற்றும்

வட மாநிலங்களில் நாகராஜர், ஆதிசேஷன் மற்றும்

நாக குல அரசியான மானசா தேவியையும்

இவ்விழாவன்று வழிபடுகிறாரகள்.


வட மாநிலங்கள் பலவற்றில் மானசா தேவிக்கு

 தனிக் கோவில்கள் உள்ளன. 

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களில் 

காடுகளிலிருந்து உயிருள்ள நாகப்பாம்புகளைப் பிடித்துவந்து 

அவற்றிற்கு பாலாபிஷேகம், பூஜைகள் செய்து, 

பின்னர் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடும்

 வழக்கமும் உள்ளது.

தென்னிந்தியாவில் நாக சதுர்த்தி 

கார்த்திகை மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப் படுகிறது.

 மேலும் அதற்கு அடுத்த நாள் நாக பஞ்சமி 

மற்றும் கருட பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.

 கந்த சஷ்டி நாளான ஐப்பசி மாத சுக்ல பட்ச சஷ்டி நாளும்

 நாகத்தை வழிபடக்கூடிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

கர்நாடகம் மற்றும் ஆந்திராவில்

 நாகுல சவிதி என்ற பெயரில் ஆண்டிற்கு இருமுறை 

ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் அனுஷ்டிக்கப் படுகிறது.

 பொதுவாக சைவர்கள் கார்த்திகை மாதத்திலும்

 வைணவர்கள் ஆவணி மாதத்திலும் கொண்டாடுவது மரபாக உள்ளது. 

தேவர்களும் அசுரர் களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது 

முதலில் வெளிப் பட்ட ஆலகால விஷத்திலிருந்து


 மக்களைக் காப்பாற்ற சிவபெருமான் 


விஷத்தை அருந்திய போது கீழே சிந்திய துளிகள் 


நாகங்களுக்கு விஷத்தை அளித்ததாகவும், 


அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாக சதுர்த்தி அன்று 


நாகங்கள் வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.


யமுனை நதியில் வாழ்ந்துவந்த காளிந்தீ என்ற நாகத்தினால் 


மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் களுக்கு முடிவு கட்ட 


கிருஷ்ணர் அந்தப் பாம்பினை அடக்கி, 


அதன் மீது நர்த்தனம் ஆடிக் களித்தாராம். 


அவ்வாறு காளிந்தீ நர்த்தனம் செய்த நாளே 


நாக பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.

காஸ்யபருக்கும், கத்ரு என்பவளுக்கும் பிறந்தவர் நாகர். 

தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார்,

இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து,

தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து 

இறந்து போகும்படிமகனுக்கு சாபம் கொடுத்தாள். 

ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் நிறைவேறியது.

பரீட்சித் மகாராஜாவின் புதல்வன் ஜனமேஜயன்,

தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான



நாகராஜன் தட்சகனைப் பழி தீர்க்கவும்,

பாம்பு இனத்தையே பூண்டோடு ஒழிக்கவும 

சபதமிட்டுசர்ப்ப யாகம் நடத்தினான்.


அதற்காக `சர்ப்பயக்ஞம்' என்ற வேள்வியை நடத்தினான்.

பல பாம்புகள் அவன் நடத்திய வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. 

அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி 

நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். 

அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி, 

அது நடந்த இடம் கர்நாடகாவில் அமைந்துள்ளது.

சிக்மகளூர் டவுனிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள

ஹிரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள

கோதண்ட ராமஸ்வாமி கோயில் உள்ள இடம்அது.

சர்ப்ப யாகம் செய்ததன் நினைவாக 

ராஜா ஜனமேஜயனால்

எழுப்பப்பட்ட ஒரு கற்தூண் இங்குள்ளது.

இந்தத் தூணை, முக்கியமாக 

நாக பஞ்சமியன்று தரிசித்தால்

நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

பரசுராமர் இங்கு வாசம் செய்துள்ளதால் 

‘பார்க்கவபுரி’ என்றும்
அழைக்கப்படுகிறது.

பரசுராமரை ராமபிரான் கர்வபங்கம் செய்த இடம் 

பரசுராமரின் வேண்டுகோளின்படி,

கல்யாணக் கோலத்தில்

ராமர், சீதாதேவி வலப் பக்கத்திலும்,

இலக்குவன் இடப் புறமாகவும் 

இருந்து சேவை சாதித்தார்.

இவ்வித கோலத்தை 

வேறு எங்கும் காண இயலாது.

பஞ்சாப்:--

இங்கு நாக பஞ்சமி ‘குக நவமி’ 

என அழைக்கப்-படுகிறது.

அந்நாளில் கோதுமை மாவைப் பிசைந்து

நாக தேவதைச் சிலையை வடிவமைப்பார்கள்.

பிறகு அதை ஒரு பெரிய மூங்கில் முறம் அல்லது

வட்டிலில் அமர்த்தி ஆராதிப்பர்.


பின்னர் ஊர்வலமாக அதை எடுத்துச் சென்று,

நீர்நிலைகளில் கரைக்காமல்,

பூமியில் குழி தோண்டிப் புதைத்துவிடுவது வழக்கம்.

அப்படிச் செய்வது நாக தேவதையைப்

பெரிதும் மகிழ்விக்கும் என நம்புகின்றனர்.

ராகு, யோக போகங்களுக்கும்

கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக இருக்கின்றனர்.

திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும்

 தோஷத்தை ஏற்படுத்துவது ராகு கேதுதான்.

[நாக தோஷம், சர்ப்ப தோஷம்

குழந்தை பிறக்கும்போது கழுத்தில்  கொடி சுற்றிபிறப்பது]

ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில்

மனமுருகி வழிபட்டால்

சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.



பு
ற்றுகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு நாகத்தை வழிபடுவதோடு,

 புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதுண்டு.

 நாக சதுர்த்தி மற்றும் பஞ்சமி நாட்களில் நிலத்தைத் தோண்டுவதோ,

உழுவதோ, மரங் களை வெட்டுவதோ கூடாது என்ற கட்டுப் பாடு உள்ளது.


நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், 

தங்களின் சந்ததிகளையும்

பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள 


பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர்

தனது ''போகர்12000'' நூலில் 
கூறியிருக்கிறார்.

இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட

ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். 


அந்த தினம் ''நாக சதுர்த்தி திதி''

"

நாக சதுர்த்தி திதி'' அன்று, அரச மரம் ஒன்றின் அடியில்

நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து

அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும்

நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து

வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து

நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர். 


பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் 


உருவ அமைப்பையும்,

நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும்

தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் 


போகர் குறிப்பிட்டுள்ளார். 

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து)

உயரத்திற்க்கு குறைவாகவும்,

பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக்

கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று,

பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு 


விரதமிருந்து,பயபக்தியுடன் இந்த கடமையை 

செய்திடல் வேண்டும் என்கிறார். 

நாக வழிபாடு அந்தந்த இடங்களில் 

அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. 

புற்றுக்கு பால் தெளித்து, 

விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, 

செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், 

கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்குவர்.

பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து 

உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி

 பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் 

படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.