புதன், நவம்பர் 23, 2011

துலுக்க நாச்சியார்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளைப் போலவே

அரங்கனிடம் தெய்வீக   அன்பு கொண்டவள்

துலுக்க நாச்சியார் எனப்படும் முகலாய இளவரசி சுரதாணி.

சிலை வடிவிலிருந்த அரங்கனை பக்தியால் பாராட்டி,

பிரேமையால் சீராட்டி, இறுதியில்

'அரங்கன் இன்றி தான் இல்லை' என

அரங்கனோடு ஒன்றியவள் துலுக்க நாச்சியார்.

முகலாயத் தளபதி மாலிக்கபூர் [1311 ] தெற்கில் படை எடுத்துச் சென்று,

காஞ்சிபுரம், திருவரங்கம், கண்ணனூர் போன்ற

 பல நகரங்களை வென்று, சூறையாடினார்  .

அதனால் மகிழ்ந்த சுல்தான் அலாவுதீன்,

 மாலிகபூர், பிற தானைத் தலைவர்கள், குறுநில மன்னர்களுக்கு

நிறைய திரவியங்கள் கொடுத்து கௌரவித்தார்.

அப்துல்லா உசேன் கசன்பி என்ற குறுநில மன்னருக்கு

திருவரங்கத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 

அரங்கன் திருவுருவ சிலை கொடுக்கப் பட்டது.


கசன்பி பாதுஷாவின் மகள் சுரதாணி ,


அழகும், அறிவும் நிறைந்தவள்.


 சுரதாணி, அரங்கன் விக்ரகம் தனக்கு   வேண்டும்


என்று எடுத்துக் கொண்டாள். 

அரங்கனைப் பார்த்த கணத்திலேயே

அவள் வாழ்க்கை மாறியது.

ஒரு கணமும் பிரியாது

அந்தபுரத்தில் இரவு, பகல் எந்த நேரமும்

அரங்கனுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தாள்.

ஸ்ரீ ரங்கத்தில் அரங்கன் இல்லாததால்

திருவிழாக்கள் ஏதும் நடை பெற வில்லை.

உத்தமர் கோவில் எனும் ஊரில்

எம்பெருமான் அடியாள் ஒருவள் இருந்தாள். 

அரங்கனைப் பாராமல் தினமும்

உணவு சாப்பிட மாட்டேன் எனும் விரதம் பூண்டவள்.

மாலிக்கபூர் படைகளைப் பின்தொடர்ந்து சென்றவள்

விக்ரகம் யாரிடம் போய்ச் சேர்ந்தது என்பதை அறிந்தாள்.

கோவில் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினாள்.

எப்படி மீட்பது என ஆலோசித்தனர்.

கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல்

என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர்.

அதில் சிறந்தவர்களில் 60 பேர்

பாதுஷாவின் மாளிகைக்குச் சென்றனர்.

புகழ் பெற்ற 'ஜக்கிந்தி' நடனம் ஆடினார்கள்.

மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார்.

அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர்

'எங்கள் அரங்கன் சிலையை பரிசாகத் தாருங்கள்'

என்று கேட்டார்கள்.

வெறும் சிலை மட்டும் கேட்கிறார்களே என வியந்த

பாதுஷா, அந்தபுரத்திலிருந்து எடுத்துக்கொள்ள கூறினார்.

அந்தபுரத்தில் அரங்கன் முன் , சுரதாணி தன்னை

மறந்த நிலையில் இருப்பதை பார்த்தார்கள்.

அவள் விக்ரகத்தை தர மாட்டாள் என்பதை உணர்ந்தார்கள்.

அவளுடன் பேச்சுக் கொடுத்து , பிரசாதத்தில் மயக்க

மருந்து கலந்து கொடுத்து விட்டார்கள்.

அவள் மயங்கியதும், நாட்டியக்காரிகள்

அரங்கன் சிலையைத் தூக்கி கொண்டு

திருவரங்கம் நோக்கி விரைவாக சென்றார்கள்.

மயக்கம் தெளிந்து எழுந்த சுரதாணி

அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள்.

அவள் நிலை கண்ட பாதுஷா,

அரங்கனை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார்.

அரங்கனைக் காண வேண்டும் எனும் ஆசையில்

சுரதாணியும் படைகளோடு சென்றாள்.

படைகள் வருவதை அறிந்த நாட்டியக் குழு

திருவரங்கம் செல்லாமல்

ஒன்றாக சென்றால் அகப்பட்டு கொள்வோம் என

மூவர் மட்டும் பிரிந்து

அரங்கனை எடுத்துக் கொண்டு

திருமலை சென்றார்கள்.

அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில்

இலை , தழைகளில்  மறைத்து வைத்தார்கள்.

வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுரதாணி

அரங்கனைக் காணாமல், மிகுந்த துயரம் அடைந்தாள்.

துக்கம் தாங்காமல், கோவிலின்   முன்

மயங்கி விழுந்து உயிர் துறந்தாள்.

அப்போது அங்கு அரங்கனின்

விஸ்வரூபம் தோன்றியது.

சுரதாணியின்   உடலில் இருந்து ஒரு ஒளி

கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.


பல்லாண்டு காலம் திருமலையில் மறைந்து

இருந்த அரங்கன், ஒரு சோழ மன்னனால்

திருவரங்கம் கொண்டு வரப்பட்டு

மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

சோழமன்னனின் கனவில் தோன்றி

சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும் படி

அரங்கன் கூறினான்.

அதன்படி சோழ மன்னன்

அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில்

ஒரு சன்னதி அமைத்து,

அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை

தீட்டச் செய்தான்.

இன்றும் கோவில் இரெண்டாம் பிரகார

வடகீழ் மூலையில்

சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார்.

அன்று முதல் பெருமாளுக்கும், சுரதாணிக்கும்

முகமதியர் வழக்கப்படி காலையில்

ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத    பால் அமுது

நிவேதனம் செய்யப்படுகிறது.

திருமஞ்சன காலங்களில் பெருமாளுக்கு

லுங்கி அணிவிக்கப்படுகிறது


வைகுண்ட ஏகாதசி திருவிழாவில்  

பகல் பத்தின் போது

சுரதாணியின் சன்னதிக்கு முன்

அரங்கன் எழுந்தருளும் போது

சுரதாணிக்கு நன்றாக காட்சி கொடுக்கும் நோக்கில்


திருப்பாதம் தாங்கிகள் 

அரங்கன் வீற்றுள்ள தோளுக்கினியானை

உயரத் தூக்கிப் பிடித்து


படியேற்ற சேவை சாதித்து

அங்குள்ள 'அர்ஜுனமண்டபத்தில்'

அரங்கனை எழுந்தருளச் செய்கிறார்கள்.

துலுக்க நாச்சியார் மண்டபத்தில்

முகமதியர் வழக்கப்படி அகில், சந்தன பொடி தூவி

தூப புகை போடப்படுகிறது.

'இறைவன் முன் அனைவரும் சமம்;

ஜாதி, மத, இன, மொழிக்கு இங்கு இடமில்லை;

உண்மையான பக்தி ஒன்றே

உயர்வுக்கும், உய்விக்கும்   வழி'

என்பதை 'துலுக்க நாச்சியார்' மூலம்

நமக்கு விளக்குகிறார் பெருமாள்.

.

ஞாயிறு, நவம்பர் 20, 2011

கார்த்திகைதீபம்



அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். 


அதனால் ருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள்


 என்று ஏற்றுக்கொண்டனர். .


 அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை 


எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று


 விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று 


ஜோதிப்பிழம்பாக காட்டிச்சியருளினார்.


 இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.


ஒருசமயம் பிரும்மா, "நான் தானே 


எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன்.


 நான் சிருஷ்டி செய்யாவிட்டால் 


இந்த பிரும்மாண்டமான உலகமே இருக்காது, 


அதனால் நான் தான் பெரியவன்" என்று கர்வம் பிடித்து 


எதற்கும் மஹாவிஷ்ணுவிடம் இதைப் பற்றிக் கேட்போம் 


என்று விஷ்ணுவிடம் சென்றார், 


விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார்.


 பிரும்மாவைப் பார்த்து வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டார்,


 பிரும்மா விஷயத்தைச் சொல்லி, "இப்போது சொல்,


 நான் தானே, படைக்கிறேன்,


 நான் தானே உயர்ந்தவன்?" என்றார்.

அதற்கு விஷ்ணு பகவான், "ஒ பிரும்மா, படைத்தால் மட்டும் போதாது,

 காக்கவும் வேண்டும்.

நான் எல்லோரையும் காக்கிறேன்,

அதனால் நான் தான் பெரியவன்." என்றார்.

வாக்குவாதம் அதிகமாக,

இருவரும் சிவனிடம் கேட்போம் என்று முடிவு செய்து

சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தனர்,

இரு தரப்பிலிருந்தும் எல்லாம் கேட்ட பிறகு ஒரு பரீட்சை வைத்தார்.

"யார் என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து

என்னிடம் சொல்லுகிறாரோ அவர்தான் பெரியவர் உயர்ந்தவர்" என்றார்.

இதைப் பற்றி அறிய இருவருமே ஆவலாக இருந்தனர்.

மிகவும் எளிதான காரியம் என்று எண்ணி ஒத்துக் கொண்டனர்.

அப்போது சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்

லிங்க வடிவில் தோன்றினார்.

பிரும்மா அன்னப் பறவையாக மாறினார்.

விஷ்ணு வராக, அதாவது பன்றி உருவம் எடுத்துக் கொண்டார்.

அன்னப் பறவையான பிரும்மா ஆகாயத்தில்

உயரப் பறந்து முடியைத் தேடித் தேடி அலைந்தார்,

 பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்துக் களைத்துப் போனார்.

அப்போது அங்கு சிவபெருமானின் சடாமுடியிலிருந்து

 கீழே விழுந்துகொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.

 "தாழம்பூவே, எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும்,

 நான் சிவனது முடியைப் பார்த்ததாக

ஒரு சின்னப் பொய் சொல்ல வேண்டும்." என்றார்.

 தாழம்பூவும் சரி என்று ஒத்துக் கொண்டது.

விஷ்ணுவோ பன்றி ரூபத்தில் பூமியைக் குடைந்து

 மிகவும் ஆழமாகச் சென்று அடியைத் தேடினார்.

அவருக்கும் அடி தென்படவில்லை.

 இனித் தேட முடியாது என்று களைத்து

அவரும் திரும்பி வந்து விட்டார்.

இருவரும் சிவனிடம் திரும்பி வந்தனர்.

விஷ்னு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

ஆனால் பிரம்மா சிவன் முடியைக் கண்டதாகப் பொய்யுரைக்க,

தாழம்பூவும் பொய்சாட்சி சொன்னது.

அபோது சிவன் தன் உன்மையான ரூபத்தைச்

சூரிய சந்தரனுடன், மூன்று கண்களுடன்,

அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன்

திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். "

நாம் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற

 மூன்று காரியங்களுக்காக என்னால் உண்டாக்கப்பட்டோம்.

 நாம் மூவரும் உலகத்திற்கு முக்கியமானவர்கள் தான்." என்றார்.

பின்னர் பொய் சொன்னதால்

 பிரும்மாவுக்கு ஒரு கோவிலும் இருக்கக்கூடாது என்றும்

 தாழம்பூவை சிவபூஜைக்கு சேர்ப்பதில்லை

என்றும் கோபத்தில் கூறினார். 

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. 


அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி


 எனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. 


ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக 


ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். 


கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு 


கடைசி நாள் வரை தினமும் மாலையில் 


வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி 


வைத்துக் கொண்டாடுவர்.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள்


 துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது


 தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். 


கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் 


கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் 


திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். 


சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய 


ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி 


ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க 


அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் 


பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு 


எழுந்தருளி உமாதேவியார் 


அக்குழந்தைகளை வாரி அணைக்க, 


ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்-


 தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.


 அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் 


சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.
சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி"


 உங்களுக்கு மங்களம் உண்டாகுக! 


உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு


 கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.


 உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளி


ல் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு 


அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று 


திருவாய் மலர்ந்தருளினார்.


 இறைவனை விளக்கேற்றி வழிபடுவது 


தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், 


அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. 
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் 


என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர். 


அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும்


 அறம், பொருள். இன்பம், வீடு என்ற 


தத்துவங்களை உணர்துவது போலாகும். 


பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் 


கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது 


தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் 


அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக்


 கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி 


விரதம் இருந்து பெருமானின் பேரருளால் 


தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது. 


கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:
கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா 


ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா 


த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.


இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் 


இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து 


எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம். 
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். 


இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். 


கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து 


நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். 


திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.


கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் 


பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய 


திருக்கார்த்திகை நாளில் 


கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் 


சிறப்பான தீபத் திருவிழாவாகும்.


 இத் திருநாள் இந்த வருடம் 08.12.2011--வியாழக் கிழமை 


அன்று அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.
கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் 


கார்த்திகை நட்சத்திரம் வருவதால் 


இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது.


 கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி 


எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. 


இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் 


சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. 


அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், 


அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும்.


 [அருணம், சோணம் - சிகப்பு நிறம்]
"
ஆடிப்பாடி அண்ணாமலை தொழ 


ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். 


திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான 


புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது. 
திருவண்ணாமலை புண்ணிய பூமி. 


ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,  


தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. 


தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் 


அருள் வழங்கும் மலை. 


ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி 


அனைவருக்கும் முக்தி தரும் மலை.


 உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், 


பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும். 

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில்


 இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். 


ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். 


இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். 


அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் 


எழுந்தருளுவதாக ஐதீகம். 
இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் 


பல நாட்கள் ஒளிவீசும். 


இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் 


செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.  


ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை 


ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில்


 கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, 


உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி 




மெய்ஞான ஒளியைப் பரப்பும் 




சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்











சனி, நவம்பர் 19, 2011

சபரி மலை யாத்திரை



வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து 



பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். 


அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி 


தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 


28 கி.மீ தூரத்தில் உள்ளது. 


கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் 


இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.


அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. 


பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் 


தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. 


ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும்


 பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. 


கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து 


அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். 


மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும்.


 ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது


 சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். 


அச்சன்கோவிலில் நடக்கும்விழாவில் 9வதுநாளன்று 


தேரோட்டம் நடத்தப்படும். 


மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. 


இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. 


விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் 


நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள 


சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் 


என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 


இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.


படிப்பு தரும் குட்டி சாஸ்தா


கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது.


 இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். 


கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு 


உயரம் குறைந்து உள்ளது. 


செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. 


விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' 


எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. 


இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் 


குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். 


குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட 


"குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.


குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. 


கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும்ஆறும்ஓடுகிறது. 


குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன் 


சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா 


கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். 


செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.


 இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் 


மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார்.


 சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின்


 இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். 


அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை 


ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். 


மதம் கொண்ட யானையை அடக்கி 


அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால்


 "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. 


இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் 


விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்: 


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள 


சொரிமுத்தய்யனார் கோயிலில், 


தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் 


என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.


 இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. 


பொதிகை மலைக்காடுகளில், 


வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில்


தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது 


 ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் 


லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.


தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் 


எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். 


இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி


ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது .


 புஷ்கலையை   மணம் முடித்த சாஸ்தா 


தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது 

என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். 

இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக

 "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்


சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் 

திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் 

இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம்.

 பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது

.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான 

திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. 

மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் 

தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது

மகர சங்கிரம தினத்தில் 

ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே 

சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், 

அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், 

மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் 

மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். 

தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி 

சபரிபீடம் வந்தடையும்போது, 

வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு,

 திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி 

கண்கொள்ள அதிசய காட்சி.

சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் 

ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.

அப்படி இருந்தும் மகர விளக்கின் போது 

பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் 

வருவதும் அதை அணிவதும் 

அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.

ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் 

பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது 

எல்லாரிடமும் தனித்தனியாக விடைபெற்றுக் கொண்டுவந்தார். 

அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.

அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக 

என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.

குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு 

இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே 

எனக்கு குருதட்சனை என்றார். 

அவருடைய மனைவியோ ஊமையாகவும்,

 குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் 

குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.

குரு பத்தினியின் கோரிக்கைப்படி 

அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன்.

அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து 

நெகிழ்ச்சியுற்ற நிலையில் 

அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க

 மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.

எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு

 ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு 

அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. 

னினும் குருவின் ஆசி ஆசிதானே.

அது பொய்ந்து விடக் கூடாதே 

அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை (மகர விளக்கு விழாவின் போது 

தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை) 

சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் 

ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க, ரத்ன ஆபரணங்களை 

அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.



ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது

காலம் காலமாய் இருந்து வருகிறது. 

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் 

ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. 

ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா,                        

நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய்.

 அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். 

அவை சாதாரண மலையல்ல. 

வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.   

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும்.

 அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு 

வந்து விடலாம் என அருள்பாலித்தார். 

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண 

பந்தளராஜா மலைக்குச் செல்வார்.

மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். 

அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? 

என்ன கொண்டு செல்வது என யோசித்தார். 

நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.  

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். 

மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் 

இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும்.

ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? 

இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! 

எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். 

மலையை அடைய பல நாட்களாகும்.

எனவே கெட்டுப் போகாத நெய்யை 

எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. 

இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். 

அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது 

அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம்

 நாளடைவில் உருவானது. 

அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். 

வயதான அவர் மலை ஏற முடியாமல் 

ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் 

உட்கார்ந்தும் விடுவார். 

இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் 

சொல்லப்படுவதுண்டு.