திங்கள், டிசம்பர் 19, 2011

சனிதோஷ பரிகாரத் தலங்கள்--1



சனி பரிகார தலங்களில் குச்சனூரும் ஒன்று.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 


சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் 


சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் 


முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் 


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலும் அமைந்திருக்கிறது. 


[Gal1]


சனீஸ்வர பகவான் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்.

அரூபி வடிவ லிங்கம், பூமியில் இருந்து

வளர்ந்து கொண்டு இருக்கிறது.

இதை கட்டுப் படுத்த மஞ்சன காப்பு பூசப் பட்டுள்ளது.


[kuchanur.jpg]



தினகரன் என்னும் மன்னன் குழந்தை பாக்கியம்

பெற இறைவனிடம் வேண்டினான்.

"உன்னிடம் வரும் ஒரு பிராமண சிறுவனை மகனாக

ஏற்று கொள்; பின் உனக்கும் குழந்தை பிறக்கும்"

என்ற அசிரீரி வாக்குப்படி,

அவனிடம் வந்த அந்தண சிறுவனை

'சந்திர வதனன்' என பெயரிட்டு வளர்த்தான்.

அரசிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

உரிய வயதில் சந்திர வதனன் ஆட்சி பொறுப்பை ஏற்றான்.

மன்னன் தினகரனை ஏழரை சனி பிடித்தது.

சந்திர வதனன் சுரபி நதிகரையில்

இரும்பால் சனியின் வடிவத்தை

செய்து வணங்கி வந்தான்.

'வளர்ப்பு பிள்ளை என்னை மன்னன் ஆக்கிய

என் தந்தைக்கு துன்பத்தை தராமல்

எனக்கு அத்துன்பத்தை தா' என்று

சனிபகவானை வணங்கி நின்றான்.

அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து

சனீஸ்வரனும் அதை ஏற்றுக் கொண்டார்.

ஏழரை நாழிகை மட்டும் பிடித்து

பல துன்பங்களை தந்தார்.

" உன் போன்ற நியாஸ்தர்களை   பிடிக்க மாட்டேன்;

உன் முன் வினைப் பயனாலே இப்போது பிடித்தேன்"

எனக் கூறி மறைந்தார்.

இங்கு சந்திர வதனன் குச்சிப் புல்லால்

கூரை வேய்ந்த கோயில் கட்டினான்;

அதுவே இவ்வூரின் பெயராயிற்று என்பர்.

சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.





எள்  விளக்கு போடுவது,

காக்கைக்கு அன்னமிடுவது,

பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது

போன்ற பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.


முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் 


இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால் 


(ஐக்கியமாகி இருப்பதால்) 


மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

 சனீஸ்வர பகவானுக்கு பிரம்மகதி தோசம் பிடித்து 


நீங்கிய வரலாற்றுத் தலம்.


முக்கிய திருவிழாக்கள் 

5 வார ஆடிப் பெருந்திருவிழா.

2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா 



ஊர்களிலிருந்து தூரம்:

தேனி 30 கி.மீ.


மதுரை 100 கி.மீ.

தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் 



தேனி நகரில் தங்கிக் கொண்டு 


கோயிலுக்கு சென்று வரலாம்.


தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம்: ரூ.200 லிருந்து ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி:

 தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.

 அருகில் உள்ள ரயில் நிலையம்: 



தேனி,திண்டுக்கல்,மதுரை


 அருகில் உள்ள விமான நிலையம்: 


மதுரை ஏர்ப்போர்ட்.


 ரிசன நேரம் : காலை 6 - 12  மாலை 4 - 8.30

சனி, டிசம்பர் 17, 2011

சனி பகவான்

சனிபகவான் நவகிரகங்களில்    ஒன்று.

இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார். 

சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள். 

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப 

நன்மைகளையும், தீமைகளையும் தருவார். 

ஒரு ராசியில்  21/2   ஆண்டுகள் இருப்பார். 

அதாவது சனீஸ்வர பகவான் 


ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு 


இரண்டரை ஆண்டுகள் ஆகும். 

இவர், சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்.

தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.

சிறந்த சிவ பக்தன். 

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்

தந்தை - சூரிய பகவான்

தாயார் - உஷா, சாயாதேவி

மனைவிகள் - நீலாதேவி,சேஸ்டா தேவி 

புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி

நண்பர்கள் - புதன், சுக்கிரன்

சின்னம் - தராசு

மொழி - அந்நிய பாஷை

ஆசனம் - வில்வ வடிவம்

உணவு- எள்ளு சாதம் 

வர்ணம்-    கருப்பு.

தானியம் --- எள் 

வாகனம்---  காகம்.

அதி தேவதை -யமன் 


சமித்து-வன்னி


திசை - மேற்கு  


ரத்தினம்- நீலமணி 


சுவை - கசப்பு


பிணி - வாதம் ,நரம்பு நோய், 


கிழமை- சனிக்கிழமை 


பூஜிக்கும் தேவதை- துர்க்கா, சாஸ்தா 


உலோகம்- இரும்பு 


வீடு- மகரம், கும்பம் 


உச்ச வீடு- துலாம் 


நீ ச்ச வீடு- மேஷம் 


நட்பு வீடுகள்- ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு , மீனம் 


சம வீடு - விருச்சிகம்


பகை வீடுகள் - கடகம், சிம்மம்  


பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன் 


நண்பர்கள்- புதன், சுக்கிரன் , ராகு, கேது 


தலம்- திருநள்ளாறு  


பரிகாரத் தலங்கள்- திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு 


சனி பகவான் 12 ராசியை சுற்றிவர


 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்


கோட்சார ரீதியாக ,ஒவ்வொரு கிரகங்களின் 


நிலையை ஆராயும் போது


ஒரு கிரகத்தில் அதிக நாட்கள் தங்குவது சனிபகவனே.


ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். 


சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு 


ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். 


சோதனைக் காலங்களில் 


மனமுருகி சனியை வழிபட்டால் 


தேவையான பரிகாரங்கள் செய்தால் 


சோதனையின் அளவு குறையும். 


சிவ பூஜை செய்பவரை 


சனி அவ்வளவு பாதிப்பது இல்லை.


 பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.


சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும்


 கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.


 சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய 


மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் 


கால அளவு 21/2+21/2+21/2=7 ஆண்டுகள் ஆகும். 


இதனையே ஏழரைச்சனி என்பர். 


ஒருவரது வாழ்வில், ஏழரை சனி 


மூன்று முறை வரும்.


அதாவது 22 1/2 ஆண்டுகள் 


ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார் 


முதல் முறை வருவது மங்கு சனி.


இரண்டாம் முறை வருவது பொங்கு சனி.  


மூன்றாம் முறை வருவது 


மாரகம் என்னும் மரண சனி.


இரண்டாம் முறை வரும் போது கவலைப் பட தேவையில்லை.


மற்றவர்களுக்கு அவரவர் சுய ஜாதகத்தில் 


தசா புத்தியின் அடிப்படையில் அமையும். 


12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் 


சஞ்சரிக்கும் நிலையே ஏழரை சனி ஆகும்.


ஏழரைச்சனி காலங்களில் 

உடல் நிலை பாதிப்பு, 

நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடு,

குடும்பத்தில் பிரச்சனை,

உத்தியோகத்தில் அவப்பெயர்,

தேவையற்ற விரைய செலவுகள் ,

பொருளாதார  நெருக்கடிகள் உண்டாகும்.

ஜென்ம ராசிக்கு 12 ல் சஞ்சரிக்கும் காலம் 


விரைய சனி என்பர்.


இதற்கு சனிக்கிழமை தவறாது 

சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். 

எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். 

தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.


இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று 

சொல்லாமல் தன்னால் இயன்ற

 தான தர்மங்களை செய்து வருவதும் நலம்

1  ல் சஞ்சரிக்கும் காலம் 

ஜென்ம சனி என்பர்.


இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் 


முக்கூட்டுஎண்ணெய்(நல்லெண்ணெய்,நெய்,இலுப்பைஎண்ணெய்) 


விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.

இந்த காலத்தில்  பசுவின் பாலை 

சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். 

ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். 

இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது 

ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.


உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து 

நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. 

அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு. 

2  ல் சஞ்சரிக்கும் காலம் 

குடும்ப சனி , பாத சனி என்பர்.

 இதற்கு சனிக்கிழமையில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, 


சனிபகவானை வழிபட்டு 


எள் அன்னம், நைவேத்தியம் செய்து ஆராதித்து, 


அதனை ஏழைகளுக்கு வழங்கி, 


அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு


 சில்லரைகளையும் தான தர்மங்களையும் செய்யலாம்.


வீட்டிலும் தினசரி சமைத்த உணவை 

உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து 

அது உண்ட பின்பு உண்பது நலம். 

ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து 

ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும்.

 வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் 

நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை 

நடத்தினால் நல்லது.


4 ல் சஞ்சரிக்கும் காலம் 


அர்த்தாஷ்டம சனி என்பர்.


இக்காலங்களில் 


அலைச்சல்  , டென்சன், 


சுக வாழ்வில் பதிப்பு உண்டாகும்.


7 ல் சஞ்சரிக்கும் காலம் 


கண்ட சனி  என்பர்.


இக்காலங்களில் 


உடல் நிலை பாதிப்பு,


கணவன் மனைவிக்கு கருத்து வேற்றுமை,


கூட்டு தொழில் பிரச்சனை,உண்டாகும்.


8  ல் சஞ்சரிக்கும் காலம் 


அஷ்டம சனி என்பர்.


அதிகப்படியான சோதனைகள், 


உடல்நிலையில் பாதிப்பு, 


நெருங்கியவர்களால் மருத்துவ செலவு உண்டாகும். 


ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய 


மகரம், கும்பம்,துலாம் ஆகிய ராசிகளில் இருந்தாலும், 


சனியின் நட்சத்திரங்களான 


பூசம், அனுஷம், உத்தரட்டாதி நட்சத்திரங்களில் 


பிறந்தவர்களுக்கும் சனி பகவானால்


அதிகப்படியான பாதிப்பு நேராது. 


 ஒருவருது  வாழ்நாளில், சனி பகவான் 


மூன்று  முறை வலம் வருகிறார். 


முதல் 30 வருடத்துக்குள் ஒரு முறை


 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை 


90 வருடத்துக்குள் மூன்றாவது முறை  நிகழ்கிறது. 


முதல் வலத்தை மங்கு சனி, 


அடுத்ததை பொங்கு சனி, 


மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.


இப்படி முன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், 

முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். 

அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். 

அடுத்து, யௌவன  என்னும் இளமைப்  பருவம் 

எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு 

அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை அறிந்து 

செயல்பட்டு வாழும் காலம் அது.


துன்பங்களைத் தாங்கி, அதனை  அலட்சியப்படுத்தி, 

மனோபலமும், சிந்தனைத் தெளிவும் கொண்டு 

செழிப்புடன் விளங்குகிற பருவம் இது. 

மூன்றாவது, முதுமை பருவம். 

தேக ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி. 

சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் 

சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது,   

சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.


மனதில் பதிந்த எண்ணங்கள், 

முழு வளர்ச்சியை எட்டாத  நிலையில், 

சனியின் தாக்கம் முடங்கிவிடும். 

ஆகவே, மங்கு சனி  என்பர். 

இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி,

 கிரகிப்பதிலும் வளர்ந்து  

சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை 

அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது. 

ஆகவே, பொங்கு  சனி என்கின்றனர்.


இன்ப- தன்பம் நிறைந்த வாழ்வில்,

 துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று  

மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் . 

இளமையில் கற்ற கல்வியுடன் 

விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, 

சனி பகவானின் தாக்கத்தை, 

திருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  திசை திருப்ப முடியும்.


ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் .

முதுமையில் சோர்வைச் சந்தித்த  

உடலும் உள்ளமும் கொண்டிருக்க, 

சனியின் தாக்கத்தை எதிர் கொள்ள  முடியாமல் போகிறது. 

சனியின் விருப்பப்படி 

தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், 

வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க 

அவன் செயல்பாடு உதவும். 

ஆகவே,  போக்கு சனி என்றனர்.


ஆக, முதல் பகுதி வளரும் பருவம்,

 2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, 

இன்பத்தை அனுபவிக்கிற பருவம் 

இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம்.

 இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, 

சனி பகவானின் செயல்பாடு இருப்பதை 

ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. 

ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது 

அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ 

அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். 

அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.


முடிவில் அதனை வட்டியும் முதலுமாக 

உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். 

இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை 

சனி பகவான் மேற்கொள்கிறார்.

  சனீஸ்வர தீபம்

முக்கூட்டு எண்ணெய்யினால் 

நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்

ஓர் இரும்புச் சட்டியில் 

வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் 

திரியாக இட்டு 

மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். 

இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.


இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.

 இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், 

வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து

 சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். 

இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத 

சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து

 சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

சனி பகவான் பூஜை


சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.


சனிக்கிழமை காலை குளித்து 

சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். 

எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், 

கசப்பு பதார்த்தகங்கள் படைத்து

 பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும்.

 எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் 

சிறிது போட்டு கட்டி, 

திரி போல் திரித்து விளக்கில் போட்டு 

எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும்.

 பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் 

சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து 

காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.

பொதுவாக 

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது,

ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு 

சனிக்கு பரிகாரம் செய்யலாம். 

முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும் 

சென்று பரிகாரம் செய்யலாம்.

சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை 

தலை, கை, கால் மூட்டுகள், 

தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, 

சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். 

இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் 

மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். 

சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் 

அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் 

இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது.

 ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால்

 மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும்.

சனியனே, முண்டமே  என்றுதிட்டாமல்இருப்பதுஅவசியம். 

இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். 

மேலும் சனிக் கிழமைகளில் 

எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். 

ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், 

விதவைகளுக்கும்முடவர்களுக்கும்

முதியவர்களுக்கும் உதவி வேண்டும். 

நள புராணத்தைப் படிக்கலாம் 

அல்லது கேட்கலாம். 

சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும்

 சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.




சனி பகவான் காயத்ரி! 

""காகத்வஜாய வித்மஹே 


கட்க ஹஸ்தாய தீமஹி

தந்னோ மந்தப்ரசோ தயாத்''




வாக்கிய பஞ்சாங்கப்படி மார்கழி மாதம் 4 ந் தேதி, 


57  நாழிகை, 26  விநாடி அதாவது 


21-12-2011 [புதன்] காலை 5  மணி 20  நிமிடத்திற்கு 


கன்னி ராசியிலிருந்து    துலா ராசிக்கு 


இடப் பெயர்ச்சி அடைகிறார்  . 


சனிப் பெயர்ச்சிப் பலன்களை 


www .kanavugal -amirtham .blogspot .com  ல் பார்க்கவும்.