ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

சிறு குறிப்பு

கோவிலில்   செய்ய வேண்டியது-

கோவிலுக்குள் சென்றவுடன்

கொடிமரம் முன்பு வணங்க வேண்டும்.

பின், உள்ளே சென்று ஒரு முறை வலம் வந்து

மூலவரை தரிசிக்க வேண்டும்.    

பின், அம்பாள் சந்நிதி சென்று தரிசிக்க வேண்டும்.


இப்பொழுது இரெண்டாம் முறை வலம் வர வேண்டும்.

அப்போதுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

பின் மூன்றாம் முறை வலம் வரும் போது தான்

சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை வலம் வரும் போதும்

மூலவரை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

மூன்று முறை ப்ரதக்ஷிணமும் [வலம் வருதல்]


ஐந்து முறை நமஸ்காரமும் செய்ய வேண்டும்.



மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில்

மகாலச்சுமி நம் வீட்டுக்கு வருகிறாள்.


 அதனால் மாலையில் விளக்கேற்றியதும்

வெளி வாயில் கதவை திறந்து வைக்க வேண்டும்.

கொல்லைப்புற கதவை சாத்தி வைக்க வேண்டும்.


சுவாமி சன்னிதியில் தீபம் ஏற்றினால்

நாம் செய்த பாவங்கள் நீங்கி

புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இது விளக்கு ஏற்றுவதின் பலனே அன்றி

எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை.

அதனால் ஒருவர் ஏற்றிய விளக்கில்

நாம் மீண்டும் விளக்கேற்றினால்

அவரது பாவம் நமக்கு வராது.

நமது புண்ணியம் அவருக்கு போகாது.


சன்னிதியில் விளக்கேற்றுகிறோம் 


என்ற தூய சிந்தனையுடன் ஏற்றுவது தான்

மிகவும் முக்கியம்.

நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் .

 நன்றி- தினமலர் 







 


காசி- வாரணாசி



துண்டிவிநாயகர்
விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார்


சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே 


விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில்


 காட்சி அளிக்கிறார். 


செந்தூர வர்ணத்தில்குங்கும அபிஷேகம் செய்கிறார்கள்.
.துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை 


மிகுந்த மரியாதையுடன்அழைத்துவழிபடுகிறார்கள்.


காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் 


போகக்கூடாது என்பது சம்பிரதாயம்.
இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் 


பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.


காசி விஸ்வநாதர் திருக்கோயில்-

கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. 

இந்தூர் ராணி அகல்யாபாய் 

இக்கோயிலைக் கட்டினார்.

ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. 

வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், 

தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார்.

இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். 

குறுகலான பாதையில் சென்று 

கோயிலை அடைய வேண்டும்.

 பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே 

ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.

அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் 

என்ற அவசியம் இல்லை. 


காசிவிஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம்;

அபிஷேகமும் செய்யலாம் .

கோவிலின் உள்ளே நேபாள அரசரால் 

வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. 

இந்த மணியின் நாதம் 

வெகு தொலைவிற்கு ஒலிக்கும். 

ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் 

பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம்


கோவில் காலை 3.00 மணி முதல் 

இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் 

 இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. 

வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் 

காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து 

எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில்

அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள்.


காசியாத்திரை செல்வது எப்படி?

காசிக்கு புனிதயாத்திரை செல்வதற்கு முன்பு,

இராமேஸ்வரம் வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி 

பின்னர் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

அக்னி தீர்த்தக் கடலில் மணல் எடுக்க வேண்டும். 

அதை சேது மாதவர் சன்னதியில் 

அந்தணர் மூலம் மூன்று பிரிவாக பிரித்து 

பூஜை செய்ய வேண்டும்.

ஒரு பிரிவை சேது மாதவர் சன்னதியில் 

விட்டுவிட வேண்டும்.

மற்றொரு பிரிவை அந்தணருக்கு 

தானமாக வழங்க வேண்டும்.

மூன்றாவது பிரிவை தன்னுடன் எடுத்துக் கொண்டு 

காசிக்குச் செல்ல வேண்டும்.

இந்த மூன்றாவது பிரிவு மணலை 

கங்கையில் சேர்த்திட வேண்டும்

.காசியில் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும்.

அதன்பிறகு கங்கையில் நீர் எடுத்துக்கொண்டு 

இராமேஸ்வரம் திரும்ப வேண்டும்.

கொண்டு வந்த கங்கை நீரால் 

ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

.இவ்வாறு செய்வதே முறையான காசி யாத்திரை ஆகும்.

சரஸ்வதி பூஜை








சரஸ்வதி பூஜை அன்று பாட வேண்டிய பாடல்கள்-


பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.
                                                                                                   
                                                                                                  வில்லிபாரதம்.


ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும்  என்னம்மை -தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பாள் இங்கு வாராதிடர்.

                                                                                    கம்பர்


வெள்ளத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறுபாவலர்    உள்ளத் திருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும்  வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்


கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்.

                                                                                  பாரதியார்


வெள்ளை கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக்  கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை

அறியா சனத்தில் அரசரோடு என்னை

சரியா சனம்வைத் தாய்.

                                                                                  காள மேகப் புலவர்


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுது எளிதெய்த நல்காயெழு   தாமறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும்  வெங்காலும் அன்பர்


கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே.

                                                                                          குமரகுருபரர்