வெள்ளி, ஏப்ரல் 08, 2011

சாணம்,பரங்கிபூ

சாணம் ஒரு விஷ நாசக்கிருமி என்பது நாம் அறிவோம்.

அதனை கரைத்து வீட்டில் பூசும் போதும் - வீட்டின் முன் தெளிக்கும்
பாம்பு, பூராண், பூச்சிகள்  போன்ற விஷ ஜந்துக்கள் வராது இருப்பதுடன்,
காற்றினையும் தூய்மைப் படுத்துகிறது.
நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான, விஞ்ஞான அறிவினைப்
பெற்று இருக்கிறார்கள் என்பதும் - அதனை சமயத்தோடு பூவினுள்
மணம் போல் இணைத்திருப்பதுங் கண்டு வியந்தேன்.
பரங்கி பூவில் ஒரு மருத்துவ குணமுண்டு.
அதனை தூர வைத்து முகர்ந்தால் - அதன் மகரந்தம் கற்றோடு கலந்து
சுவாசிக்கும் போது நம் உடலில் ஓர் ஆண்டுக்கான நோய் எதிர்ப்பு
சக்தி ஏற்படுகிறது.[அதாவது Antibiotic தன்மை]
 விஞ்ஞானம் இப்போதுதான் நோய்த் தடுப்பு மாத்திரைனை கண்டு பிடித்தது.
ஆனால், நமது மெய்ஞானம்எப்போதோ நடைமுறையில் கொண்டுவந்துவிட்டது.
இன்றும் கூட கிராமங்களில் குடிசை மீது பரங்கி கொடியினை பரவ விடுவதை நாம் காணலாம்.
நமது வாழ்க்கை இயற்கையோடு இணைந்த , இயைந்த வாழ்க்கை.
நாம் நமது சமயத்தை, அதன் தத்துவத்தை , உள்ளார்ந்த நோக்கதைபுரிந்துக்கொண்டால் வாழ்க்கை நமக்கு இன்பமும்,
பயனும் அளிக்கும்.
முடிந்தவரை முயற்று பலன் பெறுவோம்.

தாலி மகிமை

தாலி மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம்
என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள்
நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்
பாலகிருஷ்ணசாஸ்திரிகள்.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி
இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில்
புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த
பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.
நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக
மாறியிருக்கிறது.
பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.
மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக்
குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு,


தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை


உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும்

ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு
அணியப்படுகிறது

நன்றி- ஆன்மிகம்

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.
உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.
 "ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.
ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.
 ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.
ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.

வியாழன், ஏப்ரல் 07, 2011

முக்தி பெற எளிய வழி

இணைய தளத்தில் தேடிக்கொண்டு இருந்த போது இந்த அரிய செய்தியைப் பார்க்க நேரிட்டது. தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசியமாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்; மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.அதனால் தான் பல மஹான்கள் இந்த மனிதப்பிறவியை உயர்வாகக் கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட மனிதப்பிறவியில் நாம் முக்தி பெற மிக எளிமையாக நான்கு வழிகளை மஹான்கள் கூறியுள்ளனர்.அவை தர்சனாத் அப்ர சதஸி ஜனனாத் கமலாலயே காச்யாம் து மரணாந் முக்தி: அதவா புத்ரஸந்நிதௌ அந்த நான்கு வழிகளில் முதலாவதாக தர்சனாத் அப்ரஸதஸி அதாவது மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஆகாய க்ஷேத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி க்ஷேத்ரம். இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம் பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு வழி. அடுத்ததாக ஜனனாத் கமலாலயே" என்பதாக கமலாலயம் என்னும் ஸ்ரீதியாகராஜரின் அருட்கடாக்ஷத்தில் ப்ரகாசிக்கும் தமிழகத்திலுள்ள திருவாரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தல்.திருவாரூரில் பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை தந்து விடுகிறார் என்பதால் திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி, அடுத்து மூன்றாவது வழி. காச்யாம் து மரணான் முக்தி:" என்பதாக பூமியிலிருந்து சில அடி தூரம் மேலெழுந்து பூமிக்கு சம்பந்தமில்லாமல் எங்கும் சிவலிங்கமாகக்காட்சிதருவதும்,ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதங்களில் தோன்றி சிவனின் தலையிலிருந்து பகீரதனால் பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புண்ணியம்மிக்க கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும், கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் ஸ்ரீவிச்வநாதராக அன்னபூரணி மாதாவுடன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அவிமுக்த க்ஷேத்திரமாகிய வாராணசி என்னும் காசி நகரத்தில் இறத்தல். இந்த காசி க்ஷேத்திரத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக ப்ரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில் ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வாரி வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி. கடைசி வழி அதவா புத்ர சந்நிதௌ" என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன்,இறப்பவரின் அருகில் இருந்து,தேவையான பணிவிடைகளைச் செய்து இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது நமது சாஸ்திரம். இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது? முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான். ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும் நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும். நன்றி -ஆகமக்கடல்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்



பொங்கல்
இந்து மதம் இயற்கை மதம்.
தைப் பொங்கல் என்பது பூமியில் விளைந்த இயற்கையான காய்கறிகள் ,
 நவதானியங்கள் , பொங்கல் ,  கரும்பு மற்றும் பலவற்றை
சூரியபகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
சூரியன் என்பது இயற்கை.
அதனால் இயற்கையில் விளைந்த பொருள்களை வழிபடுபது என்பது பொருள்.
தீபாவளி
தீபாவளி என்பது நரகாசூரனை வதம் செய்வது.
 அதாவது கெட்ட சக்தியினை அழிப்பது என்பது தான் உண்மை.
அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி
நன்மை வர வேண்டும் என்று மனதில் நினைத்து
 தீபத்தை ஒளியேற்றி வணங்குவது ஆகும்.
ஆயுதப்பூஜை
செய்யும் தொழில் நல்ல முறையில் இருக்கனும் என்று நினைத்து
 நேர்மையான முறையில் தொழில் செய்யனும் என்பது தான் பொருள். 
நாம் அவ்வாறு வேலை செய்யும் இயந்திரங்கள் ,
மற்றும் பொருள்களை வைத்து வழிபடுவது தான் ஆயுதப்பூஜை ஆகும்.
கார்த்திகை தீபம்
“ கார்த்திகைப் பொழுது கால் பொழுது “ எனறு முன்னோர்கள் சொல்வார்கள். 
ஏனென்றால் இதன் விளக்கத்தினை கீழே பார்க்கலாம். 
சூரியன் ஐப்பசி மாதம் நீசமாகி
கார்த்திகை மாதம் பிரபலிக்கிறார் என்பது ஜோதிடத்தின் உண்மை.
இதனால் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி
சூரியனை வரவேற்கின்றோம் என்பது தான் உலக உண்மை ஆகும்.- 
ஸ்ரீ கிருஷ்ணா கால்ரேகை ஜோதிடம்
காலின் பெருவிரல் ரேகையை வைத்து கணித்து சொல்லப்படும்
. இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு தௌளத்தெளிவாக தெரியும்.
 திருமணவாழ்க்கை தடை வாழ்க்கையின் பிரச்சனைகள்
போன்ற தீர்க்கமுடியாத பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இந்த கால்ரேகை ஜோதிடம் கிருஷ்ணருடைய பாதத்தை மையமாக வைத்து சொல்லப்படும்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது

தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு.

தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்.

தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.


ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,

மருத்துவர்,சந்நியாசி முதலியவர்களுக்கு

அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.

 மிகவும் புண்ணியமாகும்.


சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்

அவர்களுக்கு உதவ வேண்டும்.

.
  அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்


பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம்,

அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால்

வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.


குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது.

 ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.

துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

 சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.


கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.

மழை பெய்யும் போது ஓடக்கூடாது

தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.


நெருப்பை வாயால் ஊதக்கூடாது


மலஜலம் கழிக்கும் போது ,

இரவில் தெற்கு முகமாகவும் ,

 மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும்.

 கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது.


பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,

தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ ,

 புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.


குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் ,

திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் ,

 மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.


சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு

 பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.


சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.


பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது.

கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும்.

திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்.


கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.


இருட்டில் சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,

சூரியனை தியானம் செய்துவிட்டு

மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .


சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது

வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் ,

 நரம்பில் பு
த்திக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும்.


சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ ,

 வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது.

வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும்.


மனைவி, கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர ,

 கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது.


குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம்

இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.


ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது


தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும்.

இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது.


இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது


வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.


தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.


வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது


மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு , உமி, ஒட்டாஞ்சில்லி

இவற்றின் மீது நிற்கக் கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.

ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.


வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது

.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.


ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது


சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது


பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் , கெட்டவன் , பிறர் மனைவி

இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.


பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல்

இவை மூன்றுமே பிராயச்சித்
தமேயில்லாமல்

அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.


அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் ,

 முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை

குத்திக் காட்டிக் பேசக்கூடாது.


ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,

மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை இவற்றை பற்றி

வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,

அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.


பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ஆசனம்

இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.


பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.


பசுமாட்டினை காலால் உதைப்பது,

அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.


பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி

சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு

அம்மாட்டுக்கு புல்,தவிடு,தண்ணீர் ,

பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.


தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.


பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.


தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.


அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் ,

கணவன் - மனைவி, குழந்தை - தாய் , பசுவும் - கன்று

இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது.


நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.


வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.


கையால் மோரைக் குழப்பக்கூடாது.


தாம்பத்ய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிரமற்ற நேரங்களில்

 மனைவியுடைய மர்ம உறுப்பையும் பிற பெண்களுடையதையும் பார்க்கக்கூடாது.


நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது

மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை

பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு எழவேண்டும்.


சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து ,

 முற்றத்தில் பெருக்கி சாணந் தெளித்துகோலமிட வேண்டும்.


கோலமிடுவதற்கு , மஞ்சள் கலந்த அரிசிமாவு , பச்சிலைப்பொடி ,

குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்.


சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் ,

அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.


பூஜையறை , சமையலறை , சாப்பிடுமிடத்தை நாள் தோறும் கழுவுதல் வேண்டும்


அமாவசை , பௌர்ணமி , கார்த்திகை , மாதப்பிறப்பு ,

வெள்ளிக்கிழமை , பிறவிசேஷதினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்.


மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.


தாமிரப் பாத்திரங்களை புளியினாலும் ,

வெங்கலம், பித்தளைப் பாத்திரங்களை சாம்பலாலும்

 ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும் ,

எவர்சில்வர் , பீங்கான் பாத்திரத்தை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும்.


குளித்த பினபு தான் குடிநீர் எடுக்க வேண்டும்.


தண்ணீர்குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும். 

தோளிலும், தலையிலும் சுமக்கக்கூடாது.


சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் ,

கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும்.


உரல் , அம்மி , முறம் , வாசற்படி , உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது.


வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்டாது.

4 வது நாளில் கணவனை வணங்கிவிட்டு ,

5ம் நாள் குளித்து விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம். 

அன்று கணவனோடு சேர்வது சிறப்பு
வாழை, புன்னை, மா, பலா இலைகள் சிறந்ததாயினும்,

உணவு படைப்பதற்கு வாழையிலையே மிகச்சிறந்தது.


வாழையிலையில் அடியில் சிறிது அறிந்துரிட்டு,

கழுவிவிட்டு இலையை போட வேண்டும்.

சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும்,

இடக்கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி போடவேண்டும்.


எதையும் கையால் படைக்கக்கூடாது.

அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும்.


சோறு, கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது

அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.


வீட்டுக்கு வந்த புது மருமகளையும், நோயாளிகளையும்

 கர்ப்பிணிப் பெண்களையும். குழந்தைகளையும் வயதானவர்களையும்

 முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும்.


சாப்பிடும் போது நீர் குடிக்கக்கூடாது.உண்ட பின்பு குடிக்க வேண்டும்.


உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது. 

மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை கழித்து(2மணி நேரம்) குளிக்கலாம்.


ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.


தலையில் சூடிய மலரை தானே எடுத்தெறிய கூடாது.


பெண்கள் விரதமிருக்க வேண்டும்.

கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும்.

தீபம் ஏற்றும் நேரம்
தீபம் ஏற்றும் நேரம் : பிரம்ம முகூர்த்தம்

காலையில் உஷத் காலத்திலும் ,

மாலையிலும் சூரிய அஸ்தமனத்தக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்

எவர்சில்வர் விளக்கு ஆகாது.

2 திரியை சேர்த்த முறுக்கி, ஏற்றுவது உத்தமம்.

தீபத்தை கிழக்கு திசையிலும் , மேற்குத்திசை நோக்கயும்,

வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும்.

 தெற்கு எமனுடைய திசையாதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

திங்கள், ஏப்ரல் 04, 2011

உகாதி

உகாதி என்பது தெலுங்கு வருடப் பிறப்பு என்று மட்டுமே தெரியும். அன்று காலையில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வரும்படி அம்மா சொல்வார்கள்.போயிட்டு வருவேன். அம்மா உகாதி பச்சடி செய்து வைத்து இருப்பார்கள். அதன் புளிப்பும், இனிப்பும், கசப்பும் கலந்த சுவை அருமையாக இருக்கும். என்னை பொறுத்தவரையில் இவ்வளவுதான் உகாதி. அது தொடர்புடைய சுவாரசியமான விசியங்கள் கடந்த சில வருடங்களாகத் தான் தெரியும் என்னை போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நான் நினைப்பதால், எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவையும் நான் சில இணைய தளங்களிலிருந்து தான் எடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது நன்றி. இந்திய கணிதமேதையான பாஸ்கரசார்யா அவர்களின் கணக்குப்படி, உகாதி தினத்தன்றுதான் அந்த வருடத்தின் முதல் நாள், மாதம் தொடங்குவதாக கூறுகிறார். தாவரங்கள் துளிர் விடுவதும், செடிகள் பூத்துக் குழுங்குவதும், கனி மரங்கள் காய்ப்பதும், பூக்கள் மலர்வதும் இதுதான் இயற்கை சொல்லித் தருகின்ற பாடம். இப்படி புது உயிர்களின் தொடக்கத்தை உகாதியின் போதுதான் பார்க்க முடிகிறது. உகாதி காலக்கட்டத்தில் மா காய்த்துக் குலுங்கி தனது இன்பமான மணத்தை பரப்பி நிற்கும். வேப்பமரங்களும் இக்கலாக்கட்டத்தில் பூத்து சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை ஆரோக்கியமாக மாற்றும் பணியைச் செய்கிறது. உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும், தோல் பிரச்னை உடையவர்களுக்கும் நன்மை பயக்கும். வெல்லம் இரத்த விருத்தியை ஏற்படுத்தும். மாங்காய் மற்றும் புளி ஆந்திரகாரர்களின் அனைத்து சமையலிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் உகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அன்று காலை கோவில் தங்க வாசல் அருகில் ஏழுமலையான் முன்பு பஞ்சாங்கம் படிக்கப்படும். அதன் பின் உற்சவருக்கு தங்க, வைர நகைகள் அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ பூபால வாகனத்தில் தங்க வாசல் முன்பாக அழைத்து வரப்படுவார். அத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பிரகார சன்னதி மற்றும் வெளிப்பிரகாரம், கொடி மரம், மகா துவாரம், விமான பிரகாரம், கொடிமரம், பலி பீடம், படிகாவலி மற்றும் பல பகுதிகளில் விலை உயர்ந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். எங்கு பார்த்தாலும் மலர்களால் செய்யப்படும் அலங்காரம் கண்களுக்கு விருந்தளிக்கும். அன்றைய தினம் திருப்பதி உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். மாங்காய்காய்க்கும் சீசன் .வேப்பிலை மரம் பூத்துஇருக்கும்நேரம்; அவற்றின் பலனை பயன்படுத்தி கொள்ள நம் மக்கள் கண்டறிந்த சுவையான பச்சடி . பண்டிகைகளும் ஒரு நோக்கத்துடன் நம் நாட்டில் கொண்டாடப் படுகின்றன; அக்காலங்களில் செய்யப்படும் உணவு வகைகளும் அந்தந்த பருவ நிலை, அப்போது கிடைக்கும் காய்கறிகள், பழங்களை கொண்டு செய்தல், என எவ்வளவு திட்டமிட்ட செயல்பாடுகள் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி யுள்ளார்கள். அவற்றை அதன் பாரம்பரியம் அழியாமல் வழிவழியாய் நாமும் கடை பிடித்து, நம் பிள்ளைகளுக்கும் முறையாய் சொல்லிக் கொடுப்பது நமது கடமையாகும்.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

உகாதி

தெலுங்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உகாதி அல்லது யுகாதி ,தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா, எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல்6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி உகாதி சித்திரைமாதத்தின் முதல் நாள் ஆகும் சித்திரை முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது

த‌மிழ‌ர்க‌ள் த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடுவது போலவே இ‌ன்று ஆ‌ந்‌திர, க‌ர்நாடக ம‌க்களு‌ம் த‌ங்களது பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர். இ‌ன்று அதிகாலையில் எழுந்து வாச‌லி‌ல் வ‌ண்ண‌க் கோல‌மி‌ட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வ‌ழிபடுவா‌ர்க‌ள்.


இ‌தி‌ல் ஒரு ‌சிற‌ப்ப‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி எ‌ன்ற ஒரு உணவை தயா‌ரி‌ப்பா‌ர்க‌ள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.