வியாழன், நவம்பர் 03, 2011

காரைக்கால் அம்மையார்.








சைவம் வளர்த்த 63 நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு.


அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.


பொது யுகத்திற்குப் பின் 300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர்


இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.


தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும்


இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.




நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர்.


இறைவனால் ''அம்மையே'' என்று அழைக்கப் பெற்ற


பெருமை உடையவர் என்பர்.


இவர் இயற்றிய பாடல்கள் -


அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள்,


திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்),


திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள்.


தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட


இவரது பதிக முறையைப்பின்பற்றி,

  பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன.




இவரது சரிதம்




காரைக்காலில் தனதத்தன் எனும் வணிகர் குலத்தலைவனுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு புனிதவதி
என்று பெயர் சூட்டினார்கள்.
இவர் இளவயதிலேயே சிவபெருமானிடம் பக்தி கொண்டிருந்தார்.
சிவனடியார்களை வணங்கி உபசரிப்பார்.
இவருக்கு திருமண வயது எட்டியது.
நாகப்பட்டினத்தில் நிதிபதி எனும் வணிகத்தலைவன்,
தன் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியைத் திருமணம் செய்ய
விரும்பினான்.
அதன்படி தனதத்தனுடன் பேச,
புனிதவதியார்-பரமதத்தன் திருமணம் நடந்தேறியது.
தனதத்தன் தன் மகளைப் பிரியாமல் இருப்பதற்காக,
காரைக்காலிலே அவர்களை குடியமர்த்தினான்.
பரமதத்தன், வாணிபத் துறையை பெருக்கி
புனிதவதியாருடன் இல்லறத்தை இனிது நடத்தினான்.
ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர்கள்,
அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர்.
பரமதத்தன் அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான்.
அப்பழங்களை புனிதவதியார் வாங்கி வைக்கும்போது
ஒரு சிவனடியார் பசியுடன் வந்தார்.
அவருக்கு புனிதவதியார், அமுது படைத்தார்.
அப்போது தன் கணவர் கொடுத்த இரு மாங்கனிகளுள் ஒன்றை
சிவனடியாருக்கு படைத்தார்.
சிவனடியார், புனிதவதியாரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
பரமதத்தன் மதியம் உணவருந்த விட்டிற்கு வந்தான்.
புனிதவதியார் அவருக்கு அமுது பரிமாறி,
மீதமுள்ள ஒரு மாங்கனியையும் வைத்தார்.
பரமதத்தன் மாங்கனியை ரசித்து சாப்பிட்டான்.
கனியின் சுவையால் கவரப்பட்டு
'மற்றுமொரு கனியையும் கொண்டு வா' என்றான்.
உடனே சமையலறை சென்ற புனிதவதியார்,
உற்றவிடத்து உதவும் பெருமானே என சிவபெருமானை வேண்ட,
உடனே புனிதவதியாரின் கையில் ஒரு மாங்கனி வந்தது.
அந்தக் கனியை பரமதத்தனுக்கு படைத்தார்.
முன்சாப்பிட்ட கனியைவிட மிகச் சுவையாய் இருப்பதைக் கண்டு
ஆச்சரியமடைந்தான் பரமதத்தன்.
உடனே தன் மனைவியிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான்.
புனிதவதியாரோ, கணவனிடம் உண்மையை மறைத்தல்
தவறென்று நடந்தது அனைத்தையும் கூறினார்.
பரமதத்தனுக்கோ ஆச்சரியம். 
'சிவனருளா! அப்படியாயின் இன்னொரு கனி
கொண்டுவா பார்ப்போம்!' என்றான்.
உடனே புனிதவதியார் மீண்டும் இறைவனை வேண்
, இறைவன் மேலும் ஒரு மாங்கனியை அருளினார்.
இதனைக் கண்ட பரமதத்தன், 'இவள் தெய்வம்.
இவளை விட்டு நீங்குதல் வேண்டும்' என அஞ்சி,
புனிதவதியாரோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தான்.
சில நாட்கள் கழித்து வாணிபத்திற்காக பாண்டிய நாடு சென்றான்.
அங்கு வாணிப குலப்பெண்ணை மணந்து,
ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தான்.
அந்தப் பெண் குழந்தைக்கு, புனிதவதி எனப் பெயரிட்டு வளர்த்தான்.
பரமதத்தன் பாண்டிய நாட்டிலிருப்பதை அறிந்த உறவினர்கள்
பரமதத்தனுடன் புனிதவதியாரை சேர்த்து வைக்க 


ஒரு பல்லக்கில் ஏற்றிபாண்டிய நாட்டுக்கு அனுப்பினார்கள்.
புனிதவதியாரின் வரவை அறிந்த பரமதத்தன்
தன் மனைவி, மகளுடன் வந்து வணங்கி,
உம் திருவருளால் இனிது வாழ்கிறேன்.
இக்குழந்தைக்கு உமது திருநாமத்தையே சூட்டியுள்ளேன்
என்று கூறி அம்மையார் காலில் விழுந்து எழுந்தான்.
இதனைக் கண்ட அவர் சுற்றத்தினர், 'என்ன இது?
உன் மனைவியை ஏன் வணங்கினாய்?' என கேட்க, '
இவள் தெய்வம். இவர் மானிடரே அல்ல' என நடந்தது
அனைத்தையும் க்ப்ப்ரினான் பரமதத்தன்.
புனிதவதியார் உடனே இறைவனிடம், 


''ஈசனே, இவருக்காக தாங்கிய
மனித உடலை எடுத்துக் கொண்டு,
பேய் வடிவை அருள்வாயாக!'' என வேண்டி, 


பேய் உருவம் பெற்றார்.
இவருக்கு திருக்கயிலாயத்தைக் காண வேண்டும்
எனும் ஆவல் உண்டானது.
அதனால் கயிலையை நோக்கி, 


காலால் நடப்பதைத் தவிர்த்து,
தலையால் கயிலை மலை மீது ஏறினார்.
இதைக் கண்ட உமாதேவியார் சிவனிடம் கேட்க,
இவள் நம்மைத் துதிக்கும் பொருட்டு 


இப்பேய் உருவைவேண்டி பெற்றார் என்று கூறினார்.
பின்னர் புனிதவதியாரைப் பார்த்து. ''அம்மையே வா'' என்றழைத்தார்.
இறைவனின் திருவடியின் கீழ் எப்போதும் இருக்க வேண்டும்
வேண்டினார் புனிதவதியார். '
'அம்மையே, தென்திசையில் திருவாலங்காடு எனும் ஊரில்
நாம் நடனம் புரிவோம்.
அதைக் கண்டு இன்புற்று நம்மைப் பாடிக்கொண்டு இருப்பாயாக!''
என்று அருளினார்.
உடனே திருக்கயிலையை விட்டு,
தலையினால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார்.
அங்கு ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு வணங்கி,
‘கொங்கை திரங்கி’, ‘எட்டி இல்லம்’ எனும்


இரண்டு மூத்ததிருப்பதிகங்களைப் பாடினார்.
பின்னர் இறைவன் திருவடியின் கீழ் என்றும்
சிவ ஆனந்தத்தை நுகரும் பேறு பெற்றார்.
அன்றுமுதல் இவர் ‘காரைக்காலம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.
.காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான


புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரை,


சிவபெருமான் அம்மையே என்று அழைத்தாராம்.


இறைவனால் பெருமை தரப்பட்ட அம்மையாருக்கு


காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது.


அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி


ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

புதன், நவம்பர் 02, 2011

வேத வித்துக்கள்



மும்மூர்த்திகள்

1) பிரம்மா
2) விஷ்ணு
3) சிவன்


நால்வேதங்கள்

1) ரிக் வேதம்
2) யஜுர் வேதம்
3) சாம வேதம்
4) அதர்வண வேதம்


பஞ்சகன்யா

1) அகல்யா
2) தாரா
3) த்ரௌபதி
4) சீதா
5) மண்டோதரி


சப்தரிஷிகள்

1) காஸ்யபர்
2) கௌதமர்
3) பாரத்வாஜர்
4) விஸ்வாமித்திரர்
5) வசிஷ்டர்
6) ஜமதக்னி
7) அத்ரி


யோகங்கள்

1) ஸ்பர்ச யோகம்
2) பாவ யோகம்
3) ஞான யோகம்
4) மஹா யோகம்


நவவித பக்தி

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்



1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
    செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
    அற்பணித்தல்


பதினாறு பேறுகள்
1) புகழ்
2) கல்வி
3) ஆற்றல்
4) வெற்றி 5) நன்மைகள்
6) பொன்
7) தானியம்
8) அழகு
9) இளமை
10) நல்வாழ்வு
11) அறிவு
12) பெருமை
13) துணிவு
14) நீண்ட வாழ்வு
15) நோயின்மை
16) நுகர்ச்சி


பதினெட்டு சித்தர்கள்
குடி கொண்டுள்ள இடம்

1) திருமூலர் - சிதம்பரம்
2) ராமதேவர் - அழகர்மலை
3) கும்பமுனி - திருவனந்தபுரம்
4) இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை
5) தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்
6) வால்மீகர் - எட்டுக்குடி
7) பாம்பாட்டி சித்தர் - திருமுதுகுன்றம் என்ற
    விருத்தாசலம்
8) குதம்பை சித்தர் - மயிலாடுதுரை
9) கமலமுனி - திருவாரூர்
10) போகர் - பழனி
11) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
12) கொங்கணவர் - திருப்பதி
13) பதஞ்சலி - ராமேஸ்வரம்
14) நந்தி - காசி
15) காங்கேயர் - கரூர்
16) கோரக்கர் - பொய்யூர்
17) சட்டைமுனி - திருவரங்கம்
18) சுந்தரானந்தர் - மதுரை

மஹரிஷிகள்

1) நாரதர்
2) பராசரர்
3) வியாசர்
4) வைசம்பாயனர்
5) விபாண்டகர்
6) ரிஷ்யசிருங்கர்
7) துருவாசர்
8) பரசுராமர்
9) கபிலர்
10) கண்வ மஹரிஷி
11) வால்மீகி
12) ஜனகர்
13) லோமசர்

ஆழ்வார்கள்

1) பொய்கையாழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) பெரியாழ்வார்
5) நம்மாழ்வார்
6) ஆண்டாள்
7) திருமழிசையாழ்வார்
8) மதுரகவியாழ்வார்
9) குலசேகராழ்வார்
10) தொண்டரடிப்பொடியாழ்வார்
11) திருப்பாணாழ்வார்
12) திருமங்கையாழ்வார்

நாயன்மார்கள்

1) ஆனாய நாயனார்
2) அதிப்பத்த நாயனார்
3) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4) அமர்நீதி நாயனார்
5) அப்பூதியடிகள் நாயனார்
6) அறிவாட்டய நாயார்
7) சந்தேசுவர நாயனார்
8) தண்டியடிகள் நாயனார்
9) ஏனாதிநாத நாயனார்
10) ஏரிப்பத்த நாயனார்
11) ஏயக்கொங்கலிக்காம நாயனார்
12) ஞானநாத நாயனார்
13) இடங்கழி நாயனார்
14) இளையாங்குடிமாற நாயனார்
15) இசைஞானியார்
16) இயற்பகை நாயனார்
17) காரி நாயனார்
18) கலிக்கம்ப நாயனார்
19) கலிய நாயனார்
20) கணம்புள்ள நாயனார்
21) கண்ணப்ப நாயனார்
22) காரைக்காலம்மையார்
23) கழற்சிங்க நாயனார்
24) கழரீரவிவார் நாயனார்
25) கோச்செங்கட்சோழ நாயனார்
26) கூற்றுவ நாயனார்
27) கொட்புலி நாயனார்
28) குளச்சிறை நாயனார்
29) குங்கிலியக்கலய நாயனார்
30) மணக்கணைச்சார நாயனார்
31) மங்கையர்க்கரசியார்
32) மெய்ப்பொருள் நாயானார்
33) மூர்க்க நாயனார்
34) மூர்த்தி நாயனார்
35) முனையாடுவார் நாயனார்
36) முருக நாயனார்
37) நமிநந்தியடிகள்
38) நரசிங்கமுனையரய நாயனார்
39) நேச நாயனார்
40) நின்றசீர் நெடுமாற நாயனார்
41) பெருமிழலைக்குறும்ப நாயனார்
42) பூசலார் நாயனார்
43) புகழ்ச் சோழ நாயனார்
44) புகழ்த்துணை நாயனார்
45) சாக்கிய நாயனார்
46) சடைய நாயனார்
47) சத்தி நாயனார்
48) செறுத்துணை நாயனார்
49) சிறப்புலி நாயனார்
50) சிறுத்தொண்டா நாயனார்
51) சோமாச்சிமாற நாயனார்
52) சுந்தரமூர்த்தி நாயனார்
53) திருஞானசம்பந்தர்
54) திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
55) திருமூல நாயனார்
56) திருநாளைப்போவார் நாயனார்
      (நந்தனார்)
57) திருநாவுக்கரசர்
58) திருநீலகண்ட நாயனார்
59) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
60) திருநீலனக்க நாயனார்
       61) உருத்திர பசுபதி நாயனார்
62) வாயிலார் நாயனார்
63) விரன்மிண்ட நாயனார்



   

பாராயண துதிப்பாடல்கள்

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் 


விரத காலத்தில் பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் 


முருகப் பெருமானைப் பற்றிய எளிய துதிப்பாடல்கள் 

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார் வினைகள் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகத் தெய்வம்
வேறுபடை தேவையற்ற வேலவனாம் தெய்வம்
யாருமற்ற அடியவரை ஆட்கொள்ளும் தெய்வம்
கூறும் வேதத்து உட்பொருளாய் 

குளிர்ந்து நின்ற தெய்வம்.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள் 
மைந்தா குமரா மறை நாயகனே.

ஆடும் பரிவேல் அணிசேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனி யானை சகோதரனே.

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து 
மைந்தன் என்மீது மனமகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய்.

முருகனே செந்தில் முதல்வனே மாயோன் 
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! "செந்திநகர்ச்
சேவகா' என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் 
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் 
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனைவிளங்கு வள்ளிகாந்தனைக் 
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!

விழிக்குத் துணை மென்மலர்ப் பாதங்கள் 
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா 
என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சிந்தாமணியே திருமால் மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாய் முருகா தணிகா சலனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

முருகா ----- போற்றி



முருகன் 108 போற்றி!!!

ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி (10)

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி (20)

ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி (30)

ஓம் குகனே போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி (40)

ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)

ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி (60)

ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி (70)

ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி (80)

ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி (90)

ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி
ஓம் மூவாப் பொருளே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி (100)

ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விறலிமலையானே போற்றி
ஓம் வினாயகர் சோதரனே போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேதமுதல்வனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)
முருகனுக்கு அரோகரா!!!

சூரசம்ஹாரம்



வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், 

சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று 

பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் 

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான். 

 இவரை அதிகம் வழிபடுபவர்கள்தமிழர்களே;

இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். 


இவர்  குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.


சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். 

கொடுமைகள் பல புரிந்துவந்த சூரபத்மனை 

அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது.

 முருகனின் அவதார நோக்கமே சூரனை வதைத்ததுதான். 

இதை கொண்டாடும் வகையில் அனைத்து முருகன் கோயில்களிலும் 

கந்த சஷ்டி விழாவும் சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி 

சஷ்டி திதி வரையிலான 6 நாட்கள் விரதம் இருப்பது 

சஷ்டி விரதம் எனப்படுகிறது.

 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் 

சஷ்டி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபடலாம்.

 ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பார்கள். 

இந்த சொற்றொடர் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. 

சஷ்டி விரதம் இருந்தால் சற்புத்திர யோகம் உண்டாகும். 

கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கும் 

குழந்தைகள் பிறப்பார்கள் என்பது இதன் பொருள்.

சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து 

உருவானவன் கந்தப் பெருமான்.

 நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி 

சரவணப் பொய்கையில் 6 பகுதியாக விழுந்தது. 

அவை ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருப்பெற்றது. 

6 கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை 

பார்வதி தேவி இணைத்து ஆறுமுகனாக மாற்றினாள் என்கிறது புராணம். 

தேவர்களை அடக்கி பஞ்ச பூதங்களின் செயல்பாட்டையும் 

தன்வசப்படுத்தியிருந்தனர் 

சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்கள். 

அவர்களை அழிப்பதற்காக தோன்றியவன் முருகப் பெருமான்.

 சூரபத்மனை அழிக்க 6 நாள் போர் நடக்கிறது.

 சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப் பெருமான் 

முதலில் வதம் செய்கிறார். 

6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில்

 மாமரமாக மாறி நிற்கிறான் சூரன்.

 அன்னை பார்வதி தேவி கொடுத்த வேலால் மரத்தை பிளக்கிறார் 

முருகன். பிளவுபட்ட மாமரமானது சேவலாகவும் மயிலாகவும் மாறுகிறது. 

சேவலை தனது கொடியாகவும்

 மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக் கொள்கிறார் முருகப் பெருமான். 

அசுரர்களுக்கு மோட்சம் அளிக்கும் முருகப் பெருமான், 

தேவலோகத்தை தேவேந்திரனிடம் ஒப்படைக்கிறார்.

சூரனை சம்ஹாரம் செய்த கந்தனுக்கு தன் மகள் தெய்வானையை

 மணமுடித்து தருகிறார் தேவேந்திரன். 

 இதை கொண்டாடும் வகையில் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள், 

முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியவை நமக்குள் இருக்கும் 

ஆணவம், கன்மம், மாயை என்னும் 

மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். 

அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர் நிலையை அடையலாம் என்பது

 சூரசம்ஹாரம் காட்டும் நெறியாகும்.

முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய 

மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. 

கிழமைகளில் செவ்வாய்,

 நட்சத்திரத்தில் கிருத்திகை,

 திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை.

 வெறுமனே தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பது,

 பால் மட்டும் குடிப்பது, மவுன விரதம் இருப்பது என 

விரதத்தில் பல வகைகள் இருக்கின்றன. 

அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள்.

 அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்கள் அனைத்திலும் 

கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், 

காவடி எடுத்தல், அலகு குத்துதல்,

 பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடக்கும். 

சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும்

 கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், 

திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

 விரதம் இருந்து, உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி 

மனதார பிரார்த்தித்து வழிபட்டால் நமக்கு எதிராக வரும் 

அனைத்து தடைகள், தடங்கல்கள், பிரச்னைகளையும் 

முருகப் பெருமான் தகர்த்தெறிந்து 

வளமான வாழ்வு அருள்வார் என்பது நம்பிக்கை.


10/31/2011 அன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.