செவ்வாய், மே 17, 2011

ராகு ஸ்தலம்-






ராகு ஸ்தலம்-

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம்

தஞ்சாவூர் மாவட்டம்.


கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம்

இருக்கிறது.

கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன்

கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.

இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.

நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர்

பெற்றது

ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர்,

நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்


காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம்,


 நண்பகலில் திருநாகேச்சுரம்,

மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம்

என்பர்


புராண கூறுவது

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர்.

 இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம்

வேண்டி கடும் தவம் புரிந்தாள்.

பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி

கொடுத்து உமையொருவரானார்.

அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும்

என வேண்டினாள்.

அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி

காட்சியளிக்கின்றனர்.

மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 அம்மன் பிறையணி வானுதலாள்.



சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின்

வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு

தீண்டியது.

இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார்.

 தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார்.

சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை

கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து

வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர்.

அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான்.

 சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

இவரே இத்தலத்தில் அருளுகிறார்.

நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர்

பெற்றார்


  1. நிறம்----- கருப்பு
2. குணம்----- குரூரம்

3. மலர்----- மந்தாரை

4. ரத்தினம்----- கோமேதகம்
5. சமித்து----- அறுகு

6. தேசம்----- பர்ப்பரா தேசம்

7. தேவதை----- பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,

8. ப்ரத்தியதி தேவதை----- ஸர்பம்
9. திசை----- தென்மேற்கு

10. வடிவம்----- முச்சில் (முறம்)

11. வாகனம்----- ஆடு
12. தானியம்----- உளுந்து
13. உலோகம்---- கருங்கல்
14. காலம்----- ராகுகாலம்
15. கிழமை----- சனிக்கிழமை
16. பிணி----- பித்தம்

17. சுவை----- புளிப்பு

18. நட்பு கிரகங்கள்----- சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் ----- சூரியன், சந்திரன்,  செவ்வாய்
20. சம கிரகங்கள்----- புதன், குரு

21 காரகம்----- பிதாமகன் (பாட்டனார்)

22. தேக உறுப்பு----- முழங்கால்

23. நட்சத்திரங்கள்----- திருவாதிரை, சுவாதி, அசுவதி

24. தசை வருடம்----- 18 ஆண்டுகள்
25. மனைவி----- சிம்ஹிகை

26. உப கிரகம்----- வியதீபாதன்

27. உருவம்----- அசுரத்தலை, பாம்பு உடல்

 28.  வஸ்திரம் - நீலம்

 29.  நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம்

 30.   நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம்

  31. பகைவீடு - கடகம், சிம்மம்

 ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்

இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி

ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது.

இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான

சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல

நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.

 நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில்

ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார்.

தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி

விட்டார்.

பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.

 இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து

பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம்.

பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார்.

ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.

 ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம்



ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க

இறைவனை பிரார்த்திக்கலாம்.

 இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.

நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்

கொள்கிறார்கள்.

 இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது


ராகு ஸ்தோத்திரம்


அர்த்தகாயம் மகாவீர்யம்
.
 .சந்த்ராதித்ய விமர்தனம்

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம் யஹம்.




ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ: ராகு ப்ரசோதயாத்.



ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப்

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

கேது ஸ்தலம்

 

கேது ஸ்தலம்


அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,    கீழ்ப்பெரும்பள்ளம் -

தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

மயிலாடுதுறை அல்லது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும்

சாலையில் தர்மகுளம் பேருந்துநிலையத்தில் இருந்து 2கி.மீ.,தொலைவில்

இக்கோயில் உள்ளது.

தர்மகுளம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து செல்லலாம்

சிற்றுந்து வசதியும் உண்டு. மயிலடுதுறையில் இருந்து வாணகிரி செல்லும்

நகரப்பேருந்தில் சென்றால் கோயில் அருகிலேயே இறங்கலாம்




புராணம் கூறுவது-

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி

என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர்.

தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது.

ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது.

 பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார்.

தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி

வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன்

தியாக உணர்வை பாராட்டினார்.

அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி

கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது.

அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்'

என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.

 

கேதுபகவான்

இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார்.

பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு

கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

கிரகத்தன்மை-------கேது

1. நிறம்------ சிவப்பு

2. குணம்-----  குரூரம்

3. மலர்-----  செவ்வல்லி

4. ரத்தினம்-----  வைடூரியம்

5. சமித்து-----  தர்ப்பை

6. தேசம்----- அந்தர்வேதி

7. தேவதை----- சித்திரகுப்தன், விநாயகர்

8. ப்ரத்தியதி தேவதை ----- நான்முகன்

9. திசை-----  வடமேற்கு

10. வடிவம்-----  கொடி வடிவம்

11. வாகனம்-----  சிங்கம்

12. தானியம் -----  கொள்ளு

13. உலோகம் ----- துருக்கல்

14. காலம் ----- எமகண்டம்

15. கிழமை-----  செவ்வாய்க்கிழமை

16. பிணி ----- பித்தம்

17. சுவை ----- புளிப்பு

18. நட்பு கிரகங்கள் ----- சனி , சுக்கிரன்

19. பகை கிரகங்கள்-----  சூரியன், சந்திரன், செவ்வாய்
20. சம கிரகங்கள்----- புதன், குரு

21 காரகம் ----- மாதாமகி(பாட்டி)

22. தேக உறுப்பு ----- உள்ளங்கால்

23. நட்சத்திரங்கள்-----  மகம், மூலம் சதயம்

24. தசை வருடம்----- 7 ஆண்டுகள்

25. மனைவி ----- சித்ரலேகா

26. உப கிரகம்-----  தூமகேது

27. உருவம் ----- ஐந்து பாம்புத் தலை, அசுர உடல்

கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகிய

. நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் கேது திசை

தொடங்கும்.

கேதுவிற்கு கதிர்ப்பகை , சிகி, செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உண்ரு.

கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேன்டும்.

இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

 தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார்.

படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம்

வேண்டிக்கொள்ளலாம்.

ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின்

கேதுவையும் வழிபட வேண்டும்.

கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து,

கொள்ளு சாத நைவேத்யம் படைத்து,

ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.

இரட்டை சூரியன்:

கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை.

 கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர்

சிலையும் உள்ளன.

உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும்,

தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு

சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.

 

ராகுகாலம் எமகண்டம் வழிபாடு

இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில்

விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.

அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,

கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும்,

பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்

வழிபடுகிறார்கள்.

கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும்.

வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது.

 இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள்.

இதற்கு ரூ.75 கட்டணம்.

சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது

விசேஷம்.

அபிஷேகத்திற்கு ரூ.450,

தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக

வசூலிக்கின்றனர்

மேலும் சில பரிகாரத் தலங்கள்-

கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி

லுக்குச் சென்று வழிபட வேண்டும்.

அன்று அவருடைய (கேதுவினுடைய)நட்சத்திரங்களான அஸ்வினி, மகம்,

மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்நாட்களில் ஒன்றாக இருந்தால்

நல்லது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்


காளஹஸ்திஎன்கின்ற திருத்தலமும்,

ராமேஸ்வரமும்தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட

வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று

வழிபடுவது அதி முக்கியம்.



கேது ஸ்தோத்திரம்

பலாச புஷப ஸங்காசம்

தாரகா கிரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராத் மகம்

கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்.


கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ: கேது ப்ரசோதயாத்


கேது துதி

பொன்னையன் உரத்திற் கொண்டோன் புலவர் தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற

பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்

என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

ராகு கேது

16.5.11 முதல் 15.11.12 வரை:

கர வருடம், வைகாசி மாதம் 2-ஆம் தேதி (16-5-2011) திங்கட்கிழமை, சூரிய

உதயாதி நாழிகை 9- 34 விநாடிக்கு, காலை 9.45 மணி அளவில் தனுசு

ராசியில் இருக்கும் ராகு விருச்சிக ராசிக்கும்;

 அதேநாள் அதே நேரத்தில் மிதுன ராசியில் இருக்கும்

கேது பகவான் ரிஷப ராசிக்கும்;பெயர்ச்சியாகின்றனர்.

இவர்கள் இந்த ராசிகளில் ஒன்றரை ஆண்டு சஞ்சரிப்பர்.


ராகு, கேது பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

 ராகு, கேது கிரகங்கள் மிக வலிமையான கிரகங்கள்,

வேதியியல்படி பார்த்தால் கிரியா ஊக்கி என்று சொல்வார்கள்.

 சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் அவைகள் வராது.

கிரியா ஊக்கிகள் போல்தான் ராகு, கேது.


எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதன் குணத்தைப் பிரதிபலிக்கும்.

 நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலன்களும், கெட்ட கிரகங்களுடன்

சேர்ந்தால் கெட்ட பலன்களும் அதாவது மிகப் பயங்கரமான

விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.


தற்கொலை செய்து கொள்வது எல்லாம் பார்த்தால் இந்த கேது

புக்தியில்தான்.


அறிவியில் பூர்வமாகப் பார்த்தால் ஆஸ்ட்ரைட்கள் என்று இவைகளைக்

கூறலாம்,

மற்ற கிரகங்களுடன் சுற்றுப் பாதையில் ஏற்படக் கூடிய துகள்களின்

தொகுப்புதான் ராகு, கேது என்றழைக்கப்படும் தூசு மண்டலம்.


குரு என்றால் மின்னணுக் கதிர்களால் ஆனது.

காந்தப் புலன் அதிகம்.

காந்தப் புலன் கொண்ட கோள் சுழலும்போது அதில் இருந்து துகள்கள்

வெளிவரும்.

 அவை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கிரகமாக உருவாகிறது.


சூரியனுக்கு சுற்றுப்பாதை உண்டு.

ராகு, கேதுவிற்கு சுற்றுப் பாதை இல்லை.

அதனால்தான் இவற்றை நிழல் கிரகம் என்று சொல்கிறார்கள்.


ராகு, கேது ‌எதிர்திசையில் பயணிக்கும் என்பது?


ராகு, கேது கிரகங்களுக்கென்று தனியாக ஒரு பாதை இல்லை.

 இவை ஏதோ ஒரு பாதையில் சுழலும், ஒரு முறை எதிர்படும் இந்த

கிரகங்கள், ஒரு சமயம் ஒரே பாதையிலும் செல்லும்.


இதனைத்தான் எதிர்திசையில் பயணிக்கின்றன என்று சொல்கிறார்கள்.


அதாவது ஒரு சூறாவளி வரும்போது காற்றில் ஏற்படும் தூசுகள் அந்த

சூறாவளியில் சூழல ஆரம்பிக்கும்.

அப்போது பூமியி‌ல் ஒரு பகுதி தூசும்,

வானத்தில் ஒரு பகு‌தி தூசும் சுழன்று கொண்டிருக்கும்.

இதே தான் ராகு, கேது வாகும்.


கிரகணம் -இவைகள் பாம்பாக சித்தரிக்கப்பட்டு சூரியனை விழுங்கி

விட்டது என்று சொல்லப்படுகிறது.

அதாவது ஆதி காலத்தில் கிரகங்கள் தோன்றும்போது பாம்பு வடிவில்

தோன்றியிருக்கின்றன.

கிரகணம் என்பது மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது

பூமியின் நிழல் சந்திரன் மீதோ அல்லது சூரியன் மீதோ விழும்போது

கிரகணம் ஏற்படுகிறது.


வால் நட்சத்திரங்கள் உருவாவதெல்லாமும் தூசுப் படலங்களின்

தொகுப்புதான்.

 கார்பன், கார்பன் மோனாக்சைடு போன்றவை இருக்கும்.

அதன் மீது ஒளிக் கற்றைகள் படும்போது அவை மின்னும்.


மின்னுதல் என்பது நிரந்தரமான மின்னுதல் அல்ல.

தோன்றி மறையக் கூடியதுதான்.


எனவே வால் நட்சத்திரங்களும் ராகு, கேது பிரிவைச் சேர்ந்தவைதான்.


குருவிற்கு 19, சனிக்கு 23 துணைக்கோள்கள்.

ராகு, கேதுவிற்கு துணைக் கோள்களாக இந்த வால் நட்சத்திரங்களை

வைத்துக் கொள்ளலாம்.

ராகுவுக்கும், கேதுவுக்கும் இருவேறு குணங்கள்.

ராகு எதுவாக இருந்தாலும் அனுபவிக்கணும்.

இந்த காலத்தில்தான் மது பானம் அருந்துதல், பிறர் மனை நோக்குதல்

போன்றவை இருக்கும்.

வேலை செய்த கம்பெனியையே வாங்குவதும் இந்த காலத்தில்தான்.


நல்ல இடத்தில் எல்லாம் ராகு இருந்துவிட்டால் போதும் ராஜ

யோகம்தான்.

வலிமையான ராகு நல்ல கிரகமாக அமைந்துவிட்டால் சுகபோக

வாழ்க்கை, உயர்தர வாகனம் கிடைக்கும்.


கேது என்று பார்த்தால் அது பெரும்பாலும் கெடுதல் தான் செய்யும்.

குருவுடன், சுக்கிரனுடன், சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டும்

தன்னுடைய தசையில் கெடுதலைக் குறைத்து நல்ல பலன்களை

அளிக்கும்.

பாம்பென்றால் படையும் நடுங்கும். அரவம் ஆடேல் என அவ்வையாரும்

கூறியுள்ளார்.

அதனால்தான் ராகு, கேதுவின் நிழலால் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர

கிரகணம் என்றால் அனைவரும் அஞ்சுகின்றனர்.

குரு, சுக்கிரன், சனி உள்ளிட்ட பல பெரிய கோள்களை எல்லாம் ஆட்டிப்


படைப்பவர்கள் இந்த ராகுவும், கேதுவும். வலியவனை எளியவனாக்குவதும்,

நல்லவனை, பொல்லாதவனாக்குவதும், தரமில்லாதவர்களை திறமை

உள்ளவர்களாக்குவதும் இவர்கள் வேலைதான்.

ஷேர், ரேஸ், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது

ராகுவின் வேலையென்றால், பணத்தை பறித்து பரதேசியாக்கி

மெய்ஞானத்தை தருவது, கேதுவின் செயலாகும்.

காலப் பிரகாசிகை, சுக்கிர நீதி போன்ற பழம் பெரும் நூல்கள் ராகுவும்,

கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் என

கூறுகின்றன

ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது

இடம்பெறும்.

 மற்ற 7 கிரகங்கள் போல ராகுக்கும், கேதுக்கும் சொந்த வீடு, உச்ச வீடு,

நீச்ச வீடு போன்றவை கிடையாது.

 ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை

தருவார்கள்.

மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2

கிரகங்களுக்கும் உண்டு.

பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,

கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,

யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.

திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்

முக்கிய பங்கு வகிக்கின்றன.

 பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு

செய்வது மிக அவசியம்.  

ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய

ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது

சேர்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ்,

அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும்

அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கங்கள் இருந்தும் குவியும்.

பரிகார ஸ்தலங்கள்:


ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய

தெய்வங்களை வழிபடலாம்.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகுக்கு கூறிய

ஸ்தலமாகும்.

சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள்

தினமும் நடத்தப்படுகின்றன.

விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.

சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு
'
காலத்திலும்,பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை

புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது மிகவும் நல்லது.

புற்று இருக்கும் அனைத்து அம்மன் மற்றும் காளி கோயில்களிலும் ராகு

பரிகார பூஜைகள் செய்யலாம்.

கேது தலம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,கீழ்ப்பெரும்பள்ளம்

தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.



புராணம் கூறுவது

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது.

அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது.

இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.

 அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார்

தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச்

செய்தார்.

ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த

மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து

கொண்டே வந்தது.

அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை

வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம்

என்பதைக் கண்டறிந்தார்கள்.

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை

மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி

தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று

தெரிந்துகொண்டார்கள்.

இது மிகப் பெரிய முயற்சி.

மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள்.

 மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத்

தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக்

கடைந்தார்கள்.

அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக

இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக

இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை

நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள்.

அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம்

வெளிப்பட்டது.

அதை சர்வேஸ்வரன், அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும்

பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார்.

அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக,

கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி

தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில்

விஷம் தங்கிவிட்டது.

அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது.

அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு.

 நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று

ஒரு ஐதீகம் உண்டு.

பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான

காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும்

ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும்

தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள்.

 கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார்.

அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று

அசுரர்கள் தகராறு செய்தார்கள்.

மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி

அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும்

பின் வரிசையில் அசுரர்களயும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால்

பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார்.

தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை

மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு

அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து

அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான்.

இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல;

அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த

மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை

அறுத்துவிட்டார்.

அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை.

தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன்.

 விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான

இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான்

இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில்

வந்து விழுந்தது.

அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன்

மனைவியுடன் சென்று கொண்டிருந்தான்.

இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன்

அரண்மனைக்குச் சென்று வளர்த்தான்.

அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது.

தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத்

தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து

ராகு பகவான்

ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று

போற்றுகிறோம்.

இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற

பகுதியில் விழுந்தது.

அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில்

விழுந்தது.

அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி

வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார்.

 மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து

தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது

பகவான் என்று பெயர் பெற்றார்.

மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன்,

சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி

அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர்.

இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக்

கூறுவதற்கில்லை.

வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி

வீடுகளும் அமைக்கப்படவில்லை.


சொந்த வீடுகளில்லா கிரகங்கள்!


கரும்பாம்பு என்கிற ஸ்ரீராகு பகவானும்,

செம்பாம்பு என்கிற ஸ்ரீகேது பகவானும் 'சாயா (நிழல்) கிரகங்கள்" என்று

அழைக்கப்படுகின்றன.

 அவர்களுக்கு மற்ற 7 கிரகங்களுக்கு இருப்பது போல் சொந்த வீடுகள்

கிடையாது.

அதே நேரம் அவர்கள் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கின்றார்களோ அந்த

வீட்டையே தங்கள் வீடாக (ராசி) எண்ணிப் பலன் தருவார்கள்.

 எந்தக் கிரகத்தால் பார்க்கப்படுகிறார்களோ, எந்தக் கிரகத்துடன் சேர்க்கை

பெற்றிருக்கிறார்களோ, எந்தக் கிரக நட்சத்திர சாரத்தில்

அமர்ந்திருக்கிறார்களோ அவர்களின் பலத்தையே கிரகித்துக் கொண்டு

பலன் தருவார்கள்.

''சனிவத் ராகு, குஜவத் கேது""

ஸ்ரீராகு பகவான் சனி பகவானின் குணத்தையும்,

ஸ்ரீகேது பகவான் ஸ்ரீகுஜன் (செவ்வாய்) பகவானின் குணத்தையும்

பிரதிபலிக்கிறார்கள்.

ஜாதகத்தில் ஸ்ரீசனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானின் சுப அசுப

பலன்களை ஸ்ரீராகு பகவானும் ஸ்ரீகேது பகவானும் அளிக்கவல்லவர்கள்

என்பதை மேற்குறிப்பிட்ட வடமொழி வழக்கு உணர்த்துகிறது.


அனைத்து நாட்களிலும் ஸ்ரீராகு-ஸ்ரீகேது பகவான்கள்



நாட்கள் ----      கிரகங்கள்

ஞாயிறு  ---    சூரியன்  

திங்கள்    ---     சந்திரன்   

செவ்வாய் ---     செவ்வாய்

 புதன்     -------   புதன்

வியாழன்  ----     குரு  

 வெள்ளி  -----      சுக்கிரன்

சனி -----------       சனி

ஆகிய 7 நாட்கள் முறையே  7  கிரகங்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது

 ராகு-கேது பகவான்கள் பரமேஸ்வரனின் அனுக்கிரகத்தால் நவக்கிரக

அந்தஸ்தை அடைந்தன.

 எனவே அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு தினத்தில் இருந்தும் ஒன்றரை

மணிகளாக இரண்டு பாகங்கள் பிரிக்கப்பட்டு,

 ராகுவுக்கு ராகு காலமும்.

கேதுவுக்கு எம கண்டமும் வழங்கப்பட்டது.

அதனால் அனைத்து நவக்கிரகங்களுக்கும் 21 மணிகள் என்று ஆயிற்று.

இந்த ராகு காலம் மற்றும் எம கண்ட காலங்களில் சுபங்கள் விலக்கப்பட

வேண்டும்.



ஸ்ரீராகு பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்!

ஒருவருக்கு வைராக்கியம் உண்டாகவும், ஒருவர் நினைத்ததை முடிக்கவும்

ஸ்ரீராகு பகவானே காரணம். உலகம் முழுவதும் சுற்றுவதற்கும், பல

மொழிகளை அறிவற்கும், அரசாங்கத்தில் உயர் பதவியை வகிப்பதற்கும்,

ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரும் பணம் சேர்ப்பதற்கும் இவரே

காரணம் ஆவார்.

ஸ்ரீராகு பகவானை யோககாரகன் மற்றும் பயணகாரகன் என்பார்கள்.

அதே சமயம், கடவுள் நம்பிக்கைக் குறைவு, மத விஷயங்களில்

பற்றில்லாமை, வக்கிர குணங்கள், பாப கர்மாவின் வெளிப்பாடு.

மனோவியாதி போன்றவைகளையும் அசுபத் தன்மை பெற்று அமர்ந்துள்ள

ராகு பகவான் கொடுப்பார்.

ஸ்ரீராகு பகவான், தந்தை வழி பாட்டனாரைக் குறிப்பார்.


ஸ்ரீகேது பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்

ஒருவருக்கு பாபவிமோசனம் கிடைக்கவும்.

மோட்சம்  அதாவது வீடு பேறு உண்டாகவும் ஸ்ரீகேது பகவானே காரணம்,

வேத வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் அவர் அறிவை வளர்ப்பார்.

 எந்த ஒரு பிரச்சினைக்கும் விவேகமான தீர்ப்பை வழங்கும் அறிவைக்

கொடுப்பார்.

அதேநேரம் ராசியில் ஸ்ரீகேது பகவானின் பலம் குறைந்தவர்கள் அடிக்கடி

விபத்துகளைச் சந்திக்க நேரிடும்.

தீயோர்களின் சகவாசத்தையும் உண்டாக்குவார்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குவார்.

 மேலும் உடலில் தோன்றும் புண், தீக்காயம் இவைகளுக்கும் கேது

பகவானே காரணமாவார்.

 இவர் தாய் வழி பாட்டனாரைக் குறிப்பார்.


ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார்

கோவிலும் ஆகும்.

 ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ் வரம், பரமக்குடி அருகில்

நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று

பல தலங்கள் உண்டு.

கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி,

திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், திருவானைக் காவல்,

பழூர் போன்ற தலங்கள் உண்டு.

ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளியையும்  துர்க்கையையும்;

கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும்

ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.


திங்கள், மே 16, 2011

ராகு பெயர்ச்சி விழா



திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் 16ந்தேதி ராகுபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராகு தலம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோவிலில் நாகநாதசுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.





கோவிலின் வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார். இத்தலத்தில் உள்ள ராகுவை வழிபடுவோருக்கு காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும் போது, அவருடைய மேனியில் ஊற்றப்படும் பால் நீல நிறமாக மாறும் என்பது தனிச்சிறப்பாகும்.

ராகு பெயர்ச்சி விழா

ராகுதோஷம் நீக்கக்கூடிய ராகு தலமாக விளங்கும் இக்கோவிலில் 16ந் தேதி (திங்கட்கிழமை) ராகு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. இதையட்டி, ராகு பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நேரமான காலை 9.48 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.

ராகு பெயர்ச்சி விழாவையட்டி, நாகநாதர் கோவிலில் இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்கியது. ஞாயிறு காலை 2ம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது . விழா நடைபெறும் 16ந் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவினையட்டி சிறப்பு ஹோமங்கள், தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தோஷ பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ரூ.150ஐ நேரிலோ, வரைவோலை மூலமாகவோ கோவில் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அனுப்புபவர்களுக்கு தோஷ பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

. விருச்சிகம், தனுசு, கும்பம், ரிஷபம், துலாம், மீனம், சிம்மம் ஆகிய ராசி உடையவர்கள் இத்தலத்தில் ராகு பெயர்ச்சி தினத்தன்று பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

ராகு-கேது பகவான்கள்

 




தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கிடைத்த


அமுதத்தை மும்மூர்த்திகளில் ஒருவரான விஸ்ணு, மோகினி


வடிவெடுத்து, தேவர்களிற்கு மட்டும் அமுதம் கிடைக்கும் விதமாக


அமுதத்தை பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார்.


இந்த சூழ்ச்சியினை யூகித்துக் கொண்ட சுவர்பானு என்ற அசுர


குமாரன் தானும் தேவர்கள் போல் உருமாறி மோகினியிடம் அமுதம்


பெற்று உண்டான்.


இதைக் கண்ட சூரியனும், சந்திரனும் மோகினிக்கு அசுரகுமாரனை


அடையாளம் காட்டினர்.


மோகினியும் தன் கையிலிருந்த அகப்பையினால் சுவர்பானுவின்


தலையில் அடிக்க தலை வேறு உடல் வேறு ஆகிப் போனது.


அமுதம் உண்ட காரணத்தினால் சுவர்பானுவிற்கு மரணம்


சம்பவிக்கவில்லை.


மாறாக தலையுள்ள பகுதியின் கீழ் பாம்பு உடல் வந்தது.


அசுர உடலின் மேல் ஐந்து தலை பாம்பின் தலை வந்தது.


இவர்கள் பிரம்ம தேவரை வேண்டித் தவமிருந்து நவக்கிரக அந்தஸ்து


பெற்று முறையே ராகு, கேது ஆனார்கள்.




பிரம்ம தேவரினால் ராகு கேதுக்களிற்கு அளிக்கப்பட்ட வரங்கள்:-


அறுபட்ட இரண்டு உடற்கூறுகளையும் சமஇடையில் வைத்து


என்றென்றும், எக்காலத்திலும், எக்காரணத்தினாலும் பிரிந்தோ அல்லது


இடம் விட்டு இடம் விலகிப் போகாமலும் இருக்கவும்,
 

சூரிய சந்திரர்களிற்கு நிகராக நவக்கிரக அந்தஸ்து பெற்று அவர்கள்


வலம் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது அப்பிரத்சணமாக


அவர்கள் கண்ணெதிரிலேயே சஞ்சாரம் செய்யவும்,


சிரசு உள்ள பகுதி ராகு என்றும்


உடல் உள்ள பகுதி கேது என்றும் பெயர் பெறவும்,


சொந்த வீடு மற்றும் ஆட்சி பலம் இல்லாவிட்டாலும் எந்த ராசி


வீட்டிலிருந்தாலும் அந்த வீட்டிற்கேற்ப உங்கள் செயலிருக்கவும்,


அனைத்து கிரகங்களின் இயல்புகளையும் கவர்ந்து, உங்கள்


இயல்பிற்கேற்ப பலன் தரக்கூடிய வல்லமையையும்,
 

நிழல் போல் தொடர்ந்து சென்று அவரவர் பாவ புண்ணியங்களிற்கு


ஏற்ப பலன் தரும் தன்மையையும், கிரகணங்கள் மூலம் பிடித்து


பழிவாங்குகின்றனர்.


 அதாவது ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய சந்திரர்கள் சுமார்


ஒன்றரை மணிநேரம் சர்ப்ப தோசத்தினால் தங்கள் ஒளியை இழந்து


மங்கிப்போகின்றனர்.


 சூரிய சந்திரர்களிற்கே இந்த நிலையென்றால் சாதாரண மனிதர்கள்


ஆகிய எமக்கு சர்ப்ப தோசத்தின் பாதிப்பு எப்படியிருக்கம் என்று


யோசித்துப் பாருங்கள்.


 நவக்கிரகங்களில் ராகு கேதுக்கள் மட்டுமே அசுரர்கள்.


மற்றய ஏழுபேரும் தேவர்கள்.


எனவே இவர்கள் குணம் மிகக் கொடியதாக இருப்பது இயல்பே.


ஜோதிடத்தில் வக்கிர கதி அல்லது வக்கிரம் எனச் சொல்லப்படும்


அனேகமாக தீய பலனைத் தரக்கூடிய அமைப்பு இவர்களிற்கும் சூரிய


சந்திரர்களிற்கும் மட்டுமே கிடையாது.


சூரியனினால் ஏற்படும் அஸ்தங்க தோசம் இவர்களிற்கு கிடையாது.


அஸ்தங்க தோசம் அடையும் கிரகம் தனது செயலை செய்ய தனது


செயலை செய்ய முடியாத நிலையாகும்.


அஸ்தாங்கத தோஷம் இல்லை

நவக்கிரகங்களில் இயற்கையான ஒளியுடைய கிரகமான சூரிய


பகவானைச் சுற்றியே மற்ற கிரகங்கள் செல்லுகின்றன.

 ராகு-கேது பகவான்களைத் தவிர மற்ற கிரகங்கள், சூரிய பகவானுக்கு

அருகில் செல்லும் போது அஸ்தாங்கத தோஷம் (கருகிக் போதல்)

அடைகிறார்கள். அதே நேரம் ராகு-கேது பகவான்கள் சூரிய பகவானுக்கு

அருகில் சென்றாலும் அஸ்தாங்கத தோஷம் அடைவதில்லை மாறாக

சூரிய பகவானையே பலமிழக்கச் செய்கின்றார்கள். அப்படி நேரும்

காலங்களில் கிரகணங்கள் உண்டாகின்றன.

இவற்றிலிருந்து ராகு கேதுக்களின் வலிமை என்ன என்பது


புரிந்திருக்கும்.

நலம் தரும் ராசிகள்

லக்னத்திற்கு கேந்திரங்களான, 3,6,11 ஆம் ராசிகளில் ஸ்ரீராகு-கேது

பகவான்கள் பலம் பெற்றவர்கள். இந்த ராசிகளில் இருக்கும் போது

அவர்கள் நற்பலன்களைச் செய்யக் கடமைப்பட்டவர்கள்.

கால சர்ப்ப யோகம்

ஒரு ஜாதகருக்கு, ராசி கட்டத்தில் அனைத்துக் கிரகங்களும் ஸ்ரீராகு-கேது

பகவான்களுக்கு இடையில் அமைந்து இருந்தால், அதற்கு கால சர்ப்ப

யோகம் என்று பெயர். இவர்கள் ஏழையாகப் பிறந்தாலும் 32 வயதுக்குப்

பிறகு அனைத்துச் சௌகர்யங்களையும் பெற்று, பெரும் சீமானாக

வாழ்வார்கள்.

அஷ்ட மஹா நாக யோகம்

ஸ்ரீராகு-கேது பகவான்கள், ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன்

இணைந்திருந்;தால் இத்தகைய யோகம் உண்டாகிறது. ராகு தசை, கேது

தசையில் சிறப்பான ராஜ யோகங்களை இது பெற்றுக் கொடுக்கும்.

சர்ப்ப தோஷம்

ஸ்ரீராகு-கேது பகவான்கள் லக்னத்திற்கு 1,2,4,5 ஆம் இடங்களில் இருந்தால்

சர்ப்ப தோஷம் உண்டு என அறியலாம். இதற்கான சர்ப்ப சாந்தியை

காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், ராமேஷ்வரம் திருப்புல்லாணி,

திருப்பாம்புரம், நாகர்கோயில், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களில்

செய்யலாம். அல்லது நாகப் பிதிஷ்டையின் மூலம் சர்ப்ப சாந்தி

செய்யலாம்.

பரிகாரம்

ஆதிசேஷனின் அவதாராமே இலக்குவன், அவரை தனது உடன் பிறப்பாகக்

கொண்டு சக்ரவர்த்தி திருமகனின் திருநாமமாகிய 'ராம" நாமத்தை

எப்போதும் ஜபித்து வந்தால் ராகு-கேது பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய

அசுப பலன்கள் அனைத்தும் தூள் தூளாகிவிடும். அதே போல் அஷ்ட

மஹா நாகங்களையும் அடக்கியாள வல்லவர் பரமேஸ்வரன். அவருடைய

திருநாமமாகிய 'நம சிவாய" மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து வந்தால்

இந்தப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சுப பலன்கள் வளரும்! கெட்ட

பலன்கள் நாசமாகிவிடும்

சனி, மே 14, 2011

திருநீறு.

திருநீறு (விபூதி)சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம்.

இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில்

வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை

உணர்த்தி, நாமும் இதுபோல்தான்;

ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு

வாழவேண்டுமென உணர்த்துகிறது.

சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள்

நம்புகின்றனர்.

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது

பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.


திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

கல்பம்

அணுகல்பம்

உபகல்பம்

அகல்பம்

கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை

இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால்

சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு

முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த

சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து

எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால்

எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர்,

திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.

மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.

நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.

அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர்,

அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம்,

குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது.

அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்

அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக

அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்

வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,

அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு

தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை

தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக

செய்துவிடலாம்.

மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும்

இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.

கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள்

ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும்.

அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும்

பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,

ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.

இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது.

தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.

சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்

போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும்,

அதில் நெருப்பு இல்லை.

ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.

அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

சனி, மே 07, 2011

சுப கிரகமான குரு பகவான்

இந்த வருட குருப் பெயர்ச்சி : பஞ்சாங்கப்படி - இந்த மே மாதம்   8 ஆம் தேதி
(08 .05 .2011 )  நள்ளிரவு    மீன ராசியிலிருந்து , மேஷ ராசிக்கு பெயர்ச்சி

ஆகிறார்.
சுமார் 12 மாதங்கள் அங்கு தங்கி - சிம்மம், துலாம், தனுசு ராசிகளை
பார்வையிட விருக்கிறார்.
09-05-2011  முதல்    17-05-2012 ௦ வரை

இந்த மூன்று ராசிகளுக்கும் , ராஜ யோகம் ஆரம்பிக்க விருக்கிறது..
இது நாள் வரை , சனியின் பார்வையில் இருந்ததால் முழுவதும் செயல்பட
முடியாமல் , இருந்த சுப கிரகமான குரு பகவான் - சுமார் ஆறு மாதங்கள் ,
சனிப் பெயர்ச்சி நடக்கும் காலம் வரை , அள்ளி அள்ளி கொடுக்க
விருக்கிறார் என்பது திண்ணம்.


குரு பெயர்ச்சியால் நற்பலன் பெரும் ராசிகள்-
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்
 
சுமாரான பலன் பெரும் ராசிகள்-
ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்


கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்-

மேஷம்  கடகம், கன்னி


ஸ்ரீ குருகவான்

கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார்.
பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.

குருவின் ஸ்தலம்: ஆலங்குடி.
தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான்.
 இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ.
தூரத்தில் உள்ளது.

இது ஒரு பரிகாரத் தலமாகும்.
இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி
வரவேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை.
குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது.
இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.

தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள்.

குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது.
பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை
கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.

பசும்பொன் வண்ணம் கொண்டவர்.
பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு.
மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.

வழிபடும் முறை:

குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும்.
குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.

வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு

செய்யலாம்.

வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
 
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை
 
வணங்கி ஆசிபெறலாம்.
 
 குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.
 
விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.
 
அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.
 
குரு பாமாலை:

குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள்.
அவரது பூரண அருள் கிடைக்கும்.

பாமாலை:

வானவர் கரசே வளம் தரும் குருவே

காணா இன்பம் காணவைப் பவனே

பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்

உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்

சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்

கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்

நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்

இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்

உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்

தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்

நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்

தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்

சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்
குரு பகவானை மனதால் நினைத்து குருவுடைய காயத்திரி மந்திரமான

விருஷ த் வஜாய வித்மறே !

க்ருணி ஹஸ்தாய திமஹி !

தந்தோ குரு ப்ரசோயாத்.

என்பதையும் வியாழக்கிழமை தோறும் நினைத்து அவரை வணங்கிவர

வரக்கூடிய கெடுபலன்களைக் கலைந்த நற்பலன்களை நமக்கு நல்குவார்

என்பதில் ஐயமில்லை

குரு பகவானுக்கு மகன் செய்த உதவி:::
 
தேவர்களின் குருவாக  பிரஹஸ்பதியாகிய குருபகவான் திகழ்ந்துபோல
 
அசுரர்களுக்கு   சுக்கரன் குருவாக திகழ்நதார்.
 
 இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை
 
சுக்கிரன் அறிந்து இருந்ததால் தேவாசுரப்போரில் மாண்ட அசுரர்களை
 
அந்த மந்திரத்தை பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார்.
 
இதனால் அசுர பலம் கூடிக்கொண்டே போனது. இதனால் திகைத்துபோன
 
பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனமிடமிருந்து கற்றுவருவதற்காக 
 
தன் மகன் கசனை  அனுப்பி வைத்தார்.
 
கசன் தான் குரு பகவானின் மகன் என்று சிறிதும் காட்டி கொள்ளாமல்
 
சுக்கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான்.
 
எனினும் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவனை கொன்றனர்.
 
எனினும் சுக்கிரன் கசனை  தன்மந்திரத்தை பயன்படுத்தி காப்பாற்றினார்.
 
இவ்வாறு காப்பாற்றவே மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து
 
அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச்சாரியாருக்கு
 
கொடுத்துவிட்டனர்.
 
அவரும் அதை மறந்து குடித்துவிட்டார்
 
சுக்கிரன் மகள் தேவயானி கசனை காதலித்து வந்தாள்.
 
எனவே கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம்
 
முறையிட்டாள்.
 
கசனை வழக்கம் போல தன் சீடர்கள் கொன்றிருப்பார்கள் என்று நினைத்த
 
சுக்கிராச்சாரியார் அவனை உயிர்பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி
 
மந்திரத்தை பிரயோகித்தார்.
 
அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற்றான். கசனை வெளியே
 
கொண்டு வரவேண்டுமானால் சுக்கிரன் மாள வேண்டியிருக்கும்
 
எனவே அந்த மந்திரத்தை கசனிடம் உபதேசித்தார்.
 
கசன் சுக்கிரனின் வயிற்றைப் பிளந்தகொண்டு வெளியே வந்தார்.
 
கீழே இறந்து கிடந்த சுக்கிரனைப் மிருத சஞ்சீவினி மந்திரத்தை
 
பயன்படுத்தி உயிர்த்தெழச் செய்தான்.
 
பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தை கூறினான்.
 
சிவனும் தட்சிணாமூர்த்தியும்::
 
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
 
 
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
 
பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில்
 
பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்,  சனத்
 
குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு
 
கோரிக்கையை வைத்தனர்..
 
 "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர்.
 
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை
 
உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக
 
புராணங்கள் கூறுகின்றன.
 
குரு வழிபாடு தரும் பலன்கள்::
 
குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும்,
 
 அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும்
 
சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும்.
 
 மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும்,
 
 மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால்
 
நீங்கும் என்பது ஐதீகம்.
 
திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
 
எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம்
 
வணங்குவது நல்லது.
 
புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
 
எனவே  குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானடி
 
வழிபட்டு வருவது நல்லது.

     2011-2012   குரு பெயர்ச்சிப் பலன்கள் என்று எல்ல ராசிகளுக்கும்

பலன், சொல்லவேண்டிய பாடல், பரிகாரம் ---- இவை எல்லாம் என்னுடைய

 மற்றொரு இணையதளத்தில் கொடுத்து உள்ளேன்.


http://www.kanavugal-amirtham.blogspot.com/