வியாழன், ஜனவரி 16, 2014

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.

நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.

ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன்.

உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

1. ஞாயிறு ---  சூரியன் 

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன் 

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், 

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய் 

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

4. புதன் ---  புதன் 

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு 

சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன் 

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,

ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,

கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும். 

7. சனி --- சனி 

ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,

எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,

மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,

பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

இதை சொன்னவரும் ஜோதிட கலையில்

முனைவர் பட்டம் பெற்றவர்.

ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

அதனால் இதன் நண்பகத்தன்மையும் இருக்கலாம்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது.

கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் 

அடிப்படை பொருட்களைப்  பார்த்தால், அவை எல்லமே

அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக

ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி

நமக்கு ஒரு அழகான, நலமான  வாழ்வியல் முறையை

 அமைத்து  கொடுத்துள்ளார்கள்???????

ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு

  பழக்கங்கள் நம்மை கவலைப் பட வைக்கிறது,
.
அவர்களையும் முழுமையாக குறை சொல்ல முடியாது.

இன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கை

அதற்குரிய   வாழ்வியல் முறையை,தெரிந்தோ தெரியாமலோ,

விரும்பியோ,  விரும்பாமலோ பின்பற்ற வேண்டிய

கட்டாயத்தில் கொண்டு விட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு

எடுத்துச் சொல்லி , அவர்களால் எந்த அளவிற்கு

 பின்பற்ற முடியுமோ   அந்த அளவிற்கு எடுத்துக்

கொள்ள செய்வதாகும். வாழ்க நலமுடன்.

புதன், ஜனவரி 15, 2014

எளிய பரிகாரங்கள்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.

அதற்கு  ஒரு பரிகாரமும் இருக்கும். நான் தெரிந்து கொண்ட சிலவற்றை

உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்

கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி  வழிபட,

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள்  நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்

நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]

இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,

செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .

நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்

தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,

மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் 

தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,

மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்

வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்

கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,

திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்

குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு

எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ,ஏதும் பூதகண

சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி

12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட  தொழில், வழக்கு

சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.

21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்

தொடர்ந்து 8  செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,

திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,

பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்

தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்

நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.

சிவன் கோவிலில் கால பைரவரையும்,

விஷ்ணு   கோவிலில்  சக்கரத்தாழ்வாரையும்

வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை

21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,

நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும்.

இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும்

சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய்,

மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத

யாகங்களை செய்த பலனை பெறுவார்கள்.

அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு

காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால்

எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு

தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால்,

விரைவில் திருமணம் நடை பெறும்.

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு

அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது.

இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான

அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.

நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.

ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள்

துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட

நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில்

துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு

ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம்   நீங்கும்.

ஹஸ்த நட்சத்திரத்தன்று  துர்க்கைக்கு

சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து

27 எண்ணிக்கை கொண்ட   எலுமிச்சை பழ மாலை சாற்றி,

குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில்

வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை

சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும்.

சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு

எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட

பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று

சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு

செவ்வாய் தோறும்  நெய்விளக்கு ஏற்றி வழிபட

மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று

முருகனுக்கு வேலில்  எலுமிச்சை சொருகி 

அர்ச்சனை செய்யவும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள

இடத்தில் இருந்து சுமார் 10கி.மி  தூரத்திற்கு செய்வினை அணுகாது.

பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில்

தெளிக்க  ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில்

காலபைரவருக்கு  சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால்

விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து

மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து

நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில்

கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை

சுற்றி வந்து நெய்விளக்கு  ஏற்றி வழிபட

சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல்,

பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில்

பூஜை  நடக்க உதவுதல்,

அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்-

ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம்

செய்ததற்குச் சமம்.

தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க ,

வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி

வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற

பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா

பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

எத்தகைய  கிரக தோசமானாலும்  தினமும்

சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம்

செய்வது மிக, மிக நன்மை தரும்.

வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால்

குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.

உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி

நிவர்த்திப் பரிகாரங்கள் -

மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது

ஸ்ரீ வாஞ்சியம்  சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது,

லட்சுமி நரசிம்மர் ,யோக நரசிம்மரை  வழிபடுவது,

ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.

தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து,

அதற்குரிய மந்திரங்களை சொல்லி வந்தால்

நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் மக  நட்சத்திரத்தன்று

அகத்தியரிடம் ஆசி பெற்று, அகத்திக்கீரையை

எருமை மாடுகளுக்கு கொடுக்க மரண பயம் நீங்கும்.

இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில்

தீர்த்தமாட இயலாதவர்கள் ,கடல் நீரின் ஒரு பகுதியாக

இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய

கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள்,

தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.

அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும்

பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமிஹயகிரீவர்

ஆகியோரை தரிசித்து ,கேசரி, பாயாசம் நைவேத்தியம்

செய்ய தொழில்,வியாபார விருத்தி, நிரந்தர வேலை,

மற்றும்  லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி,

எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள்

உண்டு மகிழும் போது அவற்றின் வயிறு வாழ்த்த

அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.

ஞாயிறு, மே 12, 2013

செய்யவேண்டியவை


1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.

 (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது.

 தும்பைபில்வம்கொன்றை முதலியன விசேஷம். 

ஊமத்தைவெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே

 துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். 

 சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். 

இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போனஅழுகிப்போனபூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து

மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. 

வில்வம்துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரைநீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை 

 எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்தவேண்டும் என்பதில்லை.  

14. வாசனை இல்லாதது,  வாடியது, நுகரப்பட்டது,

முடிபுழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, 

தகாதவர்களால் தொடப்பட்டது

 ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. 

காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை 

அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிரவேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது.

 வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லைகிளுவைநொச்சிவில்வம்விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். 

இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசிமுகிழ் (மகிழம்) செண்பகம்தாமரைவில்வம்செங்கழுநீர்மருக்கொழுந்து

மருதாணிதர்பம்அருகுநாயுரவிவிஷ்ணுக்ராந்திநெல்லி 

ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம்மாதுளைஎலுமிச்சைபுளியம்பழம்

கொய்யாவாழைநெல்லிஇலந்தைமாம்பழம்பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும்வீதிவலம் வரும் போதும்

பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும்

மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம்ஆடை அணிவிப்பதுசந்தன அலங்காரம்நைவேத்யம் முதலிய 

முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும்.

 திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துகுடுமியை நீக்கிவிட்டு

 நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும்.

 மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில்பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற 

பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும்கணபதி பூஜையின் போதும்

தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் 

கை மணியை அடிக்க வேண்டும். 

மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

பொதுவான கடமைகள்

 வாரத்துக்கு ஒரு நாளேனும்குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

 தியானம் பழக வேண்டும்.

 பஜனைசத்சங்கம்கதாகாலட்சேபம்சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.

 வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.

புராணஇதிஹாஸதேவாரதிவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக 

ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

 இந்து பண்டிகைகளைவெறும் விழாக்களாகக் கருதாமல்

 தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.

அருகிலுள்ள அனாதை இல்லம்முதியோர் இல்லம்கண் பார்வையற்றோர்

செவிகேளாதோர் சேவை இல்லங்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

 பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.

 வீட்டில்தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. 

பாலுணர்வுவன்முறைபழிக்குப்பழிபேராசை ஆகிய 

தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.

இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.

2. காலையில் எழுந்தவுடனும்நீராடிய பின்னும்

உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.

3. நெற்றியில் இந்து சமயச் சின்னம்

 (திருநீறுகுங்குமம்சந்தனம்திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.

4. இறைவழிபாட்டுக்கு எனதனியே இடம் ஒதுக்கித்

 தவறாது வழிபாடு செய்யவும். 

காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.

6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.