வெள்ளி, ஜூன் 10, 2011

ஆனி மாதம்


.ஆனி மாதத்தில் சூரியனின் நிலை.
 
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி

ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும்.

சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு

வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி

கொண்ட கால அளவே இம் மாதமாகும்.

வசதிக்காக இந்த மாதம் 32 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

இது, ஆங்கில மாதம் ஜூன் 16 லிருந்து
 
ஜூலை 16 வரை உள்ள 31 நாட்களாகும். [16 -06 -2011 ----16 -07 -2011 ]

 சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு

மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார்.

இதை உத்தராயண காலம் என்பார்கள்.

 ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி. பயணிக்கிறார்.
இதை தட்சிணாயணம் என்பார்கள்


ம் மாதத்தில் பிறந்த அடியார்கள், இம்மாத கோவில் உற்சவங்கள்

   பற்றி   காணலாம்


சிவாம்சமே  ஆதிசங்கரராக அவதரித்து மீண்டும்

ஈசனுடன் கலந்தது என்பர்.  

அந்த சிவாம்சமே முருகனின் வேண்டுகோளுக்கிணங்க

திருவண்ணாமலையில் ஆனி மாதம், மூல நட்சத்திரம்,

பௌர்ணமி திதியில் அருணகிரியாகப் பிறந்தது என்பர்



ஆனி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்  விஷ்ணு சித்தர் எனும்  பெரியாழ்வார்.

ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை ஆவார்.


ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர். நாதமுனிகள்

ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த

இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர்

இந்த நாதமுனிகள் தான்!

தொலைந்த  பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!

பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில்

தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்!

திவ்யப் பிரபந்தங்களை ராகதாளங்களுடன் பாடி,

ஆடும் முறையை அரையர் சேவை என்ற பெயரின்

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி வைத்தார்.

இன்றும் இப்பெயரில் அரையர் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


"திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்! "என

சிவபெருமானிடமே பட்டம் பெற்றவர்
 இவரது குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் இறைவனுடன் கலந்தார்

மாணிக்கவாசகர்

அந்த நாளில் ஆவுடையார் கோவிலிலும் (புதுக் கோட்டை மாவட்டம்),

 திருவாதவூர் திருமறைநாதர் கோவிலிலும்,

 மாணிக்கவாசகர் கோவிலிலும்,

 தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவிலிலும்

குருபூஜை நடத்தப்படும்.


அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை-

ஊஞ்சல் உற்சவம்.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி

வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில்

சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட,

கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள்,

மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட

ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது

ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே

பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது.

சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும்,

 ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும்,

தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது.

சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும்

 ஸ்ரீமகாலட்சுமியும் இவளே,

அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும்

சரஸ்வதி என்பவளும் இவளே!

அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச்

சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே.

அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.

ஸ்ரீவித்யா வழிபாடு என்னும் சாக்த வழிபாட்டு முறையில்

அம்பிகையை வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி

கொண்டாடுவதன் மூலம் வழிபடுகிறார்கள்.

அவை

சாரதா நவராத்திரி- தமிழ் புரட்டாசி மாதம்,

வசந்த நவராத்திரி-தமிழ் பங்குனி மாதம்

ஆஷாட நவராத்திரி ஆனி மாதம்

சியாமளா நவராத்திரி தை மாதம்

சாரதா நவராத்திரி ஸ்ரீ சரஸ்வதிக்கும்,

வசந்த நவராத்திரி ஸ்ரீராஜ மாதங்கிக்கும்,

ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வாராஹிக்கும்.,

சியாமளா நவராத்திரி ஸ்ரீ ராஜச்யாமளைக்கும் கொண்டாடப் படுகிறது



சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில்

சிறப்பான விழாக்கள் இரண்டு.

ஒன்று மார்கழித்திருவாதிரை.

மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்.

இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.


ஆனித்திருமஞ்சனம் :

பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது

ஆனி உத்திரத்திருவிழா.

ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்

அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும்

ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர்


 ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்திற்கு பத்து நாள் முன் கொடி ஏற்றுவர்.

முதல் நாள் முதல் எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகள் ஒவ்வொரு

நாளும், தங்க வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருவார்கள்.

ஒன்பதாம் நாள் தேர் திருவிழா. இதில் மூலவரான நடராஜர், சிவகாமி,

விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள்

தேர்களில் உலா வருவர். 

. நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில்

உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும்

ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார்.

ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன

அபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

 பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம்

செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர்.

பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து

சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும்.

அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில்

கடாபிஷேகம் நடைபெறும்
 


ஆனித் திருமஞ்சணம்,ஆனி மாதத்தில் பவுர்ணமி

கேட்டை நட்சத்திரத்தில் வரும்.போது சிவன் கோயில்களில்

சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள்.

.

அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், பாண்டிச்சேரி-

ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு

மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.


சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார்.

அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில்

மாங்கனிகளை வீசுவர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது

 சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.

மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில்

கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது.

அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார்.

அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும்.

 பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு,

 சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும்,

 காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும்.

அம்மையார் கோயில் தீப்பந்தத்தை,

சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர்.

அம்மையார், ஜோதி வடிவில் இறைவனோடு ஐக்கியமாவதாக ஐதீகம்.


ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர்.

பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

 பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி

பூஜை செய்வது ஆகும்.

எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு

செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.

 வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.

ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

 ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்படும்.

இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால்

ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும்,

கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும்,

 பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும்

சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.


 அருள்மிகு கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,

கம்பம் ,தேனீ மாவட்டம்- திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன்,

தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு

உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து,

அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி

அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.

அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள்,

திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.

அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி,

"திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார்.

திருமங்கை யாழ்வாரின் பக்தியையும்,

அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக,

 இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில்,

"திருமங்கையாழ்வார் திருடிய வைபவம்' நடத்துகின்றனர்.

அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து,

காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர்.

அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும்,

இதை "பட்டோலை வாசித்தல்' என்பர்.

அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக