வெள்ளி, மே 27, 2011

தாலி

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம்.

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது.

தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது

இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது.

அவை  வாழ்கையின் ஒன்பது  தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில்

மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது.


தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும்

ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும்.

தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின்

முக்கிய குறியீடு.

தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே

பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால்

இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

 பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க

உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

 பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில்

செய்வதால் அல்ல.

வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி

கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல்

வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.

விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள்.

 மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.)

 தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி

இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார்

முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம்

செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை

கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக

ஆய்வு சொல்கிறது.

 சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி

என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்

 தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில்

குறித்திருக்க வேண்டும்;

 பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள்

பொன்னாகி இருக்கிறது.

 (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள்

கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.)

மற்றும்  ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]

 புலிப்பல் தாலி, புலிநகத் தாலி  ,அம்மன்   தாலி போன்றவையும்

இருந்து இருக்கிறது. .

அம்மன் தாலி
ஐம்பொன் தாலி  



புதன், மே 25, 2011

விரதங்களும், பலன்களும்

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும்.

முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை,

திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து

சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.


பிரதோஷம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு

மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக

தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.

பகலில் சாப்பிடக்கூடாது.

மாலை 4.30 மணிக்கு நீராடி,

சிவாலயம் சென்று வணங்கி,

பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன்

இணைந்து சாப்பிட வேண்டும்.

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல்,

மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல்,

எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல்,

மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

தெய்வம் : சித்திரகுப்தர்

விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.

காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,

இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு.

கடைசிநாள் முழுமையாக பட்டினி,

சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின்,

மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

பலன் : குழந்தைப்பேறு

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி

ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் : பார்வதி, பரமசிவன்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி

வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட

உணவு சாப்பிடலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்

நாள் : பங்குனி உத்திரம்

தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது,

காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம்.

நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி

வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

தெய்வம் : பார்வதி தேவி

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்

நாள் : தை மாத பூச நட்சத்திரம்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

தெய்வம் : சிவன்

விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

 தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.

முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம்.

உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு

வகைகளை சாப்பிடலாம்.

இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும்

பங்கேற்க வேண்டும்.

பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

தெய்வம் : நடராஜர்

விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை

தரிசித்தல்.

கேதார விரதம்

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி

வரை 21 நாட்கள் அல்லது

தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள்

அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள்.

இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

தெய்வம் : கேதாரநாதர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும்,

பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம்

உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல்

மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும்,

பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு

கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி

மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்ரமணியர்

விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு,

இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி,

 ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது.

தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

தெய்வம் : பார்வதிதேவி

விரதமுறை :

முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.

 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக

 சாப்பிடக் கூடாது.
பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

நன்றி-படுகை

வெள்ளி, மே 20, 2011

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில்

திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த

நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான

பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.

 இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே

திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று

அந்தத் திருமணம்தவிர்க்கப்படுகிறது.

ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப்பொருத்தங்கள்




1. தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட
தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம்
மற்றவை சுபம்.


2. கணப் பொருத்தம்


தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம்,
சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி


மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி,
உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி


ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம்,
 அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர)
இருந்தால் நலம்.
 (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம்
(தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால்  அதமம்-
பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.


3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13,
16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.


4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை
13 க்கு மேல் இருந்தால் சுபம்.
 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.



5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு.
பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும்,
ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம்.
இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.


அசுவினி - ஆண் குதிரை


பரணி - ஆண் யானை

கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை


திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை

பூசம் - ஆண் ஆடு


ஆயில்யம் - ஆண் பூனை

மகம் - ஆண் எலி


பூரம் - பெண் எலி

உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி

சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி

அனுஷம் - பெண் மான்

கேட்டை - கலைமான்

மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பச (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.)

திருவோணம் - பெண் குரங்கு

அவிட்டம் - பெண் சிங்கம்

சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்

உத்திரட்டாதி - பாற்பசு

ரேவதி - பெண் யானை
-
 இவற்றில்


பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்



                                           7. ராசி அதிபதி
கிரகம்
  நட்பு
சமம்
பகை
சூரியன்
சந், செவ், குரு
 புதன்
 சுக், சனி, ராகு, கேது
சந்திரன்
சூரி, புத  
செவ், குரு, சுக், சனி
ராகு, கேது
செவ்வாய்
சூரி, சந், குரு
சுக், சனி
புதன், ராகு, கேது
புதன்
சூரி, சுக்
செவ், குரு, சனி, ராகு, கேது
சந்
குரு
 சூரி, சந், செவ்
சனி, ராகு, கேது
புதன், சுக்
சுக்கிரன்
புத, சனி, ராகு, கேது
செவ், குரு
சூரி, சந்
 
சனி
புத, சுக், ராகு, கேது
குரு
சூரி, சந், செவ்
ராகு, கேது
சனி, சுக்
புத, குரு
சூரி, சந், செவ்

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை

 
8. வசியப் பொருத்தம்


பெண் ராசி            பையன் ராசி

மேஷம்               சிம்மம், விருச்சிகம்


ரிஷபம்               கடகம், துலாம்

மிதுனம்              கன்னி
கடகம்                விருச்சிகம், தனுசு

சிம்மம்               மகரம்
கன்னி                ரிஷபம், மீனம்

துலாம்               மகரம்
விருச்சிகம்           கடகம், கன்னி

தனுசு                மீனம்
மகரம்               கும்பம்

கும்பம்               மீனம்

மீனம்                மகரம்

-
வசியம் பொருத்தமுடையவை.

மற்ற ராசிகள் பொருந்தாது.

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது.
2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால்

சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும்.
 இது மிகவும் தீமையாகும்
. இதிலும் சில விதிவிலக்குண்டு.
அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.


அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி                                      பிள்ளை ராசி

  
மேஷம்    ------ ---------------            கன்னி

   
தனுசு    -----------------------              ரிஷபம்


  
துலாம்  ----------------------         மீனம்
கும்பம்    ------------------------          கடகம்

 
சிம்மம்    ----------------------           மகரம்

 
மிதுனம்  ----------------------          விருச்சிகம்

-
ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது

ரஜ்ஜீ பொருத்தம்  (மிக முக்கியமானது


ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.


சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்



கண்ட ரஜ்ஜ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்



உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
- அவரோஹனம்


ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்



பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்



பெண்,பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல்

பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள்

உண்டு.

சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும்,

ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம்

என்கிறார்கள்


10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி - சுவாதி

திருவாதிரை - திருவோணம்

புனர் பூசம் - உத்ராடம்

பூசம் - பூராடம்

ஆயில்யம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்ரட்டாதி

உத்திரம் - உத்ரட்டாதி

அஸ்தம் - சதயம்

11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.


பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம்,

கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி


மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம்,

பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி


சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி,

விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால்

நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.


12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால்

புத்திர பாக்கியம் உண்டு.


பால் இல்லாதது


கார்த்திகை - அத்தி

ரோகிணி - நாவல்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆல்

பூரம் - பலா

உத்தரம் - அலரி

அஸ்தம் - வேலம்

கேட்டை - பிராய்

மூலம் - மா

பூராடம் - வஞ்சி

உத்ராடம் - பலா

திருவோணம் - எருக்கு

 பூரட்டாதி     - தேமா

ரேவதி -இலுப்பை


பால் உள்ளது


அசுவினி - எட்டி

பரணி - நெல்லி

மிருகசீரிஷம் - கருங்காலி

திருவாதிரை - செங்கருங்காலி

புனர்பூசம் - மூங்கில்

சித்திரை - வில்வம்

சுவாதி - மருதம்

விசாகம் - விளா

அனுஷம் - மகிழ்

அவிட்டம் - வன்னி

சதயம் - கடம்பு

உத்ரட்டாதி - வேம்பு



பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது?

மகேந்திரம் இருந்தால் செய்யலாம்.

மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில்

ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து

பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ

இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.



சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில்

பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர். 

சோதிடர்கள் இல்லாமலே, தாங்களே மணமகள், மணமகன்

ஆகியோரின் நட்சத்திரம், ராசி ஆகியவைகளைக் கொண்டு

பத்துப்பொருத்தங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்து

கொள்ளலாம்.


இணையதள முகவரி: http://www.10porutham.c/

நன்றி- முத்துக்கமலம்