ஞாயிறு, டிசம்பர் 16, 2012

வட சாவித்ரி பூஜை

வட சாவித்ரி பூஜை -

இது வைகாசி மாதம், சுக்ல பக்க்ஷ சதுர்த்தி

அன்று வரும்.

பதி விரதை சாவித்ரி, இறந்து  போன

தன்  கணவனின் உயிரை

எமனிடம்  போராடி மீட்டதை

மனதில் நினைத்துக் கொண்டு பூஜிப்பர்.

இதனை 'தேஸஸ்தர்' என்று சொல்லப்படும்

மராட்டியர் விமர்சையாக செய்வர்.

சாவித்ரி, யமனிடம் யாசிப்பதையும்,

அருகில் அரசமரத்தடியில் சடலம் இருப்பதையும்,

அருகில் பார்வதி, பரமசிவன் காட்சி அளிப்பதாகவும்,

உள்ள படத்தை வைத்து பூஜை செய்வர்.

ஆகையால் இந்த பூஜையை

 பார்வதி, பரமசிவனுக்கு செய்யலாம்.

மஞ்சள், குங்குமம், வஸ்த்தரம்,

புஷ்ப மாலையுடன்,பூஜை செய்து 

வெற்றிலை, பாக்குடன்

மாம்பழம்  மட்டும்தான்

நைவைத்யம் செய்ய வேண்டும்.

வேறு பழங்கள் கூடாது.

சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்குடன்

இரண்டு மாம்பழங்களுடன்

தட்சணையுடன் கொடுக்க வேண்டும்.

ஒரே ஒரு சுமங்கலிக்கு கொடுக்க கூடாது.

குறைந்த பட்சம் இரண்டு சுமங்கலிக்கு

கொடுக்க வேண்டும்.

ஒரே ஒரு மாம்பழம்கூடாது.

இரண்டு மாம்பழம் இருக்க வேண்டும்.

சிலர் 5 மாம்பழம் வைத்து தருவர்.


வைகாசி மாதத்தில்

தண்ணீர் தானம் , மற்றும்

தயிர் சாதம் தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

தினசரி முடியாவிட்டால்

முடியும் நாட்களில் தரலாம்.

சிறிய டம்ளரில் தண்ணீரும்,

தொன்னையில் சாதமும்

கொடுத்தால் போதும்.

2 கருத்துகள்:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தம்பி தனபாலன் , வணக்கம். உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. வலை சரத்தில் வெளி யிட்டதற்கு மறுபடியும் நன்றி. உங்களின் வலைதளத்தையும் பார்த்தேன். மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு