சனி, செப்டம்பர் 03, 2011

விநாயக சதுர்த்தி

ஆவணி மாதம் வளர்பிறை 4-ம் நாள் 


சதுர்த்தி திதியில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பலத்துடன் இருக்க, 


சந்திரன் தன் சுய நட்சத்திர சாரத்தில் கன்னி ராசியில் இருக்கும்போது 


விநாயகர் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. 


பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலையும் தொடங்குவது 


இந்துக்கள் வழக்கம். 


பிரமாண்டமாக நடக்கும் கல்யாணம், கிரகப் பிரவேசம்,


வீட்டில் நடக்கும் காதுகுத்து, சீமந்தம் போன்ற சுப காரியங்கள், 


கோயில் உற்சவங்கள், கும்பாபிஷேகம் என 


எந்த விழா என்றாலும் முதல் பூஜை, 


ஹோமம் கணேசருக்குத்தான்.


னை முகம், பானை வயிறு, சூரியன் - சந்திரன் - அக்னி 

ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், 

ஐந்தொழில்களை உணர்த்த ஐந்து கரங்கள், 

குட்டைக் கால்கள்... 

மொத்தத்தில் பிரணவ தத்துவத்தை உணர்த்தும் 

ஞான வடிவம்- பிள்ளையார்! 

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் 

ஆதலால் விநாயகன் என்று திருநாமம் அவருக்கு! 

அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான்

 விநாயகர் சதுர்த்தி!''தும்பிக்கையான் துணையிருப்பார்! 


ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும்  


சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். 


அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது


 தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். 


அப்போது ஓர் ஒளி வட்டமும் 


அதிலிருந்து தண்டமும் தோன்றின; 


தண்டம் ஒலியாக தழைத்தது. 


இந்த ஒளி-ஒலி இரண்டிலும் இருந்து 


உதித்த திருவடிவே, வரத கணபதி. 


ஒளி வட்டம்- பிந்து; தண்டம் (ஒலி) - நாதம். 


பிந்து மற்றும் நாதத்தில் இருந்து 


அகர, உகர, மகரம் பிறக்கும். 


இந்த மூன்றும் சேர்ந்து 'ஓம்’ என்று ஒலிக்கும். 


ஆக, 'ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார். 


அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபட,


 அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்''


'மகள் பார்வதிக்கு இமவான் விவரித்ததாக, 


விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து 


விளக்குகின்றன புராணங்கள். 


இந்த நாளில், அதிகாலையில் நீராடி,


நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். 


காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, 


மாவிலை, தோரணம் கட்ட வேண்டும். 


பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, 


மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். 


ஒரு மனையில் (பலகையில்) கோலம் போட வேண்டும்.


அதில் அவரவர் வழக்கத்துக்கு ஏற்ப 


கற்சிலை பிள்ளையார், களிமண் பிள்ளையார் வைக்கலாம். 


மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் 


செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! 


அழகான வண்ண குடை அமைத்து, 


அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, 


 பல வண்ண மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும்.


விநாயகருக்கு பிடித்தமான 


அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி,


 சந்தன-குங்கும திலகமிட்டு  அலங்கரிக்கலாம். 


மோதகம் எனப்படும் கொழுக்கட்டைதான்


 பிள்ளையாருக்கு பிடித்தமான உணவு பண்டம். 


இனிப்பு கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, 


சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழவகைகள்,


 விளாம்பழம், நாகப்பழம், கரும்பு ஆகியவற்றை 


படையலிட்டு சர்வ மங்களம் உண்டாகவும்,


 தடைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கவும் 


மனதார வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். 


விநாயகர் காயத்ரி மந்திரம், 


ஔவையார் அருளிய விநாயகர் அகவல், 


விநாயகர் அஷ்டோத்திரம் சொல்லி 


பூஜைகளை முடிக்கலாம். 


மாலையில் அவரவர் பகுதியில் உள்ள 


பிள்ளையார் கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகள், 


அர்ச்சனை, அபிஷேகங்களில் கலந்து கொள்ளலாம்.


 நம்மிடம் இருக்கும் தீவினைகளை 


சிதறுகாய் சிதறடித்துவிடும் என்பது நம்பிக்கை. 


அதன்படி, விநாயகரை மனதார பிரார்த்தித்து 


சிதறுகாய் உடைப்பது சிறப்பு.




வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில்,


 விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று


 நீர்நிலையில் சேர்க்கலாம். 


விநாயக சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் பூஜையை


 புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை 


கடைப்பிடிப்பவர்களும் உண்டு. 


இப்படி ஒருமாத காலம் வழிபட்டு,  


பிறகு விநாயக விக்கிரகத்தை ஊர்வலமாக 


எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைப்பார்கள். 


மறுநாள் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து 


விரதத்தை நிறைவு செய்வார்கள். 


ஒருமாத காலம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், 


விநாயக சதுர்த்தியன்று ஒருநாள் மட்டுமாவது, 


உளமார்ந்த பக்தியுடன் விநாயகரை வழிபட, 


உன்னத பலன்கள் கிடைக்கும்'' 


''விநாயக சதுர்த்தி திருநாளில் பிள்ளையாரை வீட்டில் வழிபடுவதுடன், 


தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் விசேஷ பலன் தரும்.


ர்க்கரை- கடலை பருப்பால் ஆன பூர்ணத்தை, 


தண்ணீர் கலந்து பிசைந்த அரிசி மாவில் பொதிந்து 


உருண்டையாக்கி வேக வைத்து, மோதகம் செய்வார்கள். 


ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கினால், 


நம்முள்ளே இனிப்புப் பூர்ணமாய் இறைவன் எழுந்தருள்வான் 


எனும் தத்துவத்தை உணர்த்துவதே, 


மோதகம் எனும் கொழுக்கட்டை பிரசாதம். 


பிள்ளையார் பெருமானுக்கு


 முதன் முதலில் மோதகம் படைத்து வழிபட்டது 


வசிஷ்டரின் மனைவி அருந்ததி! 



தேவர்களைக் கொடுமைப்படுத்திய 

அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார் விநாயகர். 

அதனால் ஏற்பட்ட வெம்மையால் 

அவரின் திருமேனி தகித்தது. 

வெப்பத்தின் தாக்கம் உலகையும் வருத்தியது. 

ஆனைமுகனை குளிர்வித்தால்தான் எல்லாம் சரியாகும் 


என முடிவு செய்தனர் தேவர்கள். 


குளிர்ந்த நீராலும், பாலாலும் விநாயகரை அபிஷேகித்தனர்; 


வெப்பம் தணியவில்லை.


 குளிர் சந்திரனையே அவர் திருமுடியில் வைத்தனர்; 


அப்போதும் பலனில்லை. 


பிறகு முனிவர்கள் ஒவ்வொருவரும்


 21 அருகம்புல்லை எடுத்து, 


விநாயகரின் திருமேனியில் சார்த்தினார்கள். 


வெம்மை தணிந்தது. 


விநாயகர் அகமகிழ்ந்தார். 


அன்று முதல் அருகம்புல் அவருக்கு விருப்பமான ஒன்றாயிற்று.  



ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். 


கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், 


புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர்.


 சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், 


தோஷங்களை போக்க கூடியவர். 


சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் 


மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், 


விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் 


அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக