
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில்
சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும்
சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும்
முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலும் அமைந்திருக்கிறது.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_705.jpg)
சனீஸ்வர பகவான் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்.
அரூபி வடிவ லிங்கம், பூமியில் இருந்து
வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இதை கட்டுப் படுத்த மஞ்சன காப்பு பூசப் பட்டுள்ளது.
![]() |
தினகரன் என்னும் மன்னன் குழந்தை பாக்கியம்
பெற இறைவனிடம் வேண்டினான்.
"உன்னிடம் வரும் ஒரு பிராமண சிறுவனை மகனாக
ஏற்று கொள்; பின் உனக்கும் குழந்தை பிறக்கும்"
என்ற அசிரீரி வாக்குப்படி,
அவனிடம் வந்த அந்தண சிறுவனை
'சந்திர வதனன்' என பெயரிட்டு வளர்த்தான்.
அரசிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
உரிய வயதில் சந்திர வதனன் ஆட்சி பொறுப்பை ஏற்றான்.
மன்னன் தினகரனை ஏழரை சனி பிடித்தது.
சந்திர வதனன் சுரபி நதிகரையில்
இரும்பால் சனியின் வடிவத்தை
செய்து வணங்கி வந்தான்.
'வளர்ப்பு பிள்ளை என்னை மன்னன் ஆக்கிய
என் தந்தைக்கு துன்பத்தை தராமல்
எனக்கு அத்துன்பத்தை தா' என்று
சனிபகவானை வணங்கி நின்றான்.
அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து
சனீஸ்வரனும் அதை ஏற்றுக் கொண்டார்.
ஏழரை நாழிகை மட்டும் பிடித்து
பல துன்பங்களை தந்தார்.
" உன் போன்ற நியாஸ்தர்களை பிடிக்க மாட்டேன்;
உன் முன் வினைப் பயனாலே இப்போது பிடித்தேன்"
எனக் கூறி மறைந்தார்.
இங்கு சந்திர வதனன் குச்சிப் புல்லால்
கூரை வேய்ந்த கோயில் கட்டினான்;
அதுவே இவ்வூரின் பெயராயிற்று என்பர்.
சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
![]() |
எள் விளக்கு போடுவது,
காக்கைக்கு அன்னமிடுவது,
பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது
போன்ற பரிகாரங்கள் செய்யப்படுகிறது.
சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.
முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர்
இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால்
(ஐக்கியமாகி இருப்பதால்)
மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.
சனீஸ்வர பகவானுக்கு பிரம்மகதி தோசம் பிடித்து
நீங்கிய வரலாற்றுத் தலம்.

முக்கிய திருவிழாக்கள்
5 வார ஆடிப் பெருந்திருவிழா.
2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா
ஊர்களிலிருந்து தூரம்:
தேனி 30 கி.மீ.
மதுரை 100 கி.மீ.
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள்
தேனி நகரில் தங்கிக் கொண்டு
கோயிலுக்கு சென்று வரலாம்.
தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
கட்டணம்: ரூ.200 லிருந்து ரூ.500 வரை.
போக்குவரத்து வசதி:
தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம்:
தேனி,திண்டுக்கல்,மதுரை
அருகில் உள்ள விமான நிலையம்:
மதுரை ஏர்ப்போர்ட்.
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8.30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக