சனி, டிசம்பர் 03, 2011

திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் திருவண்ணாமலை


கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். 

அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, 

அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். 

அதையே மலை உச்சியிலோ, 

தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் 

அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். 

மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி 

பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். 

அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் 

உடலில் கூட அதன் பிரகாசம் படும்

. மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இ

ந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி,

 திருப்பரங்குன்றம் இன்னும்பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், 

மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். 

இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். 

பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக 

ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். 

அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். 

அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி 

ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். 

விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும்

 பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். 

முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை 

உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். 

அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். 

இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். 

அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். 

பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர்.

 இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். 

உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே

. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் 

என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். 

மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், 

அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர்.

 இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.

அண்ணாமலை தீபம்: 

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் 

அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. 

மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து 

கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். 

கொப்பரையில் 3500 கிலோ  நெய் வார்த்து இ

ந்த சுடர் எரிக்கப்படுகிறது. 

இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும்

. 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. 

 தீபம் குளிர்ந்த பின்னர், 

மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு

 தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். 

பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, 

மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில்

, கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, 

அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, 

நடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடைபெறும். 

பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். 

அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து 

நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்;

 நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.

பார்வதிதேவியை சிவபெருமான், தன் இடப்பாகத்தில் ஏற்று 

அர்த்தநாரீஸ்வரர் ஆனதைக் குறிக்கும் வகையில், 

கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் 

அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். 

இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் 

பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொடிமரத்தின் அருகே பரணிதீபங்கள் ஒன்று சேர்ந்ததும்,

 தீ பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். 

அதற்கு ஜலால் என்று பெயர். 

உடனே, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்படும்.

 மலைதீபத்தை ஏற்றும் உரிமை 

பர்வதராஜ குலமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் 

தங்கள் குலதெய்வமாகிய பார்வதி தேவிக்கு 

பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்வழிபாட்டைச் செய்கின்றனர். 

இவர்கள், காலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் 

தீபம் ஏற்றும் மடக்கு, நெய், திரி 

ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மலையேறுவர். 

முற்காலத்தில் வெண்கலப்பாத்திரத்தில் 

கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டு வந்தது. 

1991ல் இரும்புக் கொப்பரையாக மாற்றப்பட்டது

. 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புக் கொப்பரையில்,

 மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

 சுற்றியுள்ள ஊர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தீபத்தை வழிபடுவர்.

கார்த்திகையன்று கோயில்களில் 


சொக்கப் பனை என்னும் தீபவிழா கொண்டாடப்படும்.

 இதுவே உலக வழக்கில் சொக்கப் பானை என்றாகிவிட்டது.

கார்த்திகை தீபத்தன்று சொக்கப் பனையாக நட வேண்டிய மரம், 

தென்னை மரம் என்பது ஆகமவிதி. 

தென்னை இல்லையென்றால் பனை மரம் சேர்க்கலாம்; 

இது மத்திமம். 

கமுகு மரம் அதமம் என்பர். 

சொக்கப் பனைக்கு மற்றைய மர வகைகளை 

உபயோகிக்கக் கூடாது என்பது


 மூன்று ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது. 

ஒரு கோயிலின் கர்ப்பகிரக உயர அளவுக்கு 

கொளுத்தப்படுகின்ற மரம் இருக்க வேண்டும். 

தில் பனை ஓலைகள் சூழ்ந்து கட்டப்பட வேண்டும். 

காய்ந்த தென்னை ஓலை, கமுகு ஓலை, 

வாழைச் சருகுகள் மற்றும் காய்ந்த 

இதர சருகுகளையும் சூழக் கட்டலாம்.

 இதனை ஒளிமரம் என்றும் சொல்வார்கள். 

நாள்தோறும் ஆலயங்களுக்குச் சென்று 

ஆண்டவனைத் தொழுது தூப தீபம் பார்த்துப் பரவசமடைகிறோம். 

ஆனால் திருக்கார்த்திகையன்று கோயில் விமானம்


, கோபுரம், மதிற்சுவர், மலையுச்சி, பிராகாரங்கள் 


மற்றும் ஊர் முழுமையும் 

ஒளி வெள்ளத்தில் இருக்கும் அற்புத நிகழ்ச்சியை 


அனுபவித்து பக்தியைப் பாராட்டுவது திருக்கார்த்திகை தான். 

சொக்கப் பனையும் ஒரு ஜோதி தரிசனம்தான்.

கார்த்திகை தீபம் பார்த்தால் பாவம் நீங்கும். 

பாவம் நீங்கினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

 சொர்க்கப்பனை என்பதே திரிந்து சொக்கப்பனை ஆனது. 

மற்றொரு காரணமும் உண்டு. 

சொக்கு என்றால் அறியாமை. 

இந்த உலக வாழ்வு நிலையானது என்ற அறியாமையில் 

மனிதர்கள் வாழ்கிறார்கள். 

அதன் காரணமாக பல பாவச்செயல்களைச் செய்து 

சொத்து சுகம் சேர்க்கிறார்கள். 

அந்த அறியாமையை நீக்கும் தீபப்பனையே

 சொக்கப்பனை என்னும் பெயர் பெற்றது.


சொக்கப்பனை ஏற்றுவது 

பனை மரம் ஒன்றை நட்டு, சுற்றிலும் ஓலைகளைக் கட்டி விட வேண்டும்.

 சொக்கப்பனை முன்பு சுவாமி சப்பரத்தில் ஊர்வலமாக வருவார்.

 சுவாமிக்கு தீபாராதனை முடிந்ததும், 

அந்த கற்பூரத்தைக் கொண்டே அர்ச்சகர் 

சொக்கப்பனையில் தீ மூட்டுவார். 

மக்கள் சிவாயநம, நமசிவாய, சரவணபவாய நம, 

சுப்ரமண்யாய நமஹ, அண்ணாமலைக்கு அரோகரா 

என்ற மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக