செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

திருநல்லூர் திருத்தலம்



திருநல்லூர் திருத்தலத்தில் அருள் பாலிக்கும் 

ஈஸ்வரர் பஞ்சவர்ணேஸ்வரர்.

இது தஞ்சாவூர்மாவட்டத்தில் அமைந்துள் ள து.

இவருக்கு கல்யாண சுந்தரனார், பெரியாண்டேசுவரர்

என்ற திருநாமங்களும் உண்டு.

அம்பிகை ,கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி, பர்வதசுந்தரி

எனும் திருநாமங்களுடன்அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற 

காவிரி தென்கரைத்தலங்களில் இது 20வது தலம்.

 திருவிழா:மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தலமரம்- வில்வம்

தீர்த்தம்- சாகர தீர்த்தம்

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோவில். 

இறைவன் சந்நிதி மலைமேல் அமைந்துள்ளது.

ஐந்து நிலையுடன்  அழகான ராஜ கோபுரம் உள்ளது. 

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தால் 

ஒரு விசாலமான இடத்தில்  கவசமிட்ட கொடிமரமும், 

அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். 

இதையடுத்து வடதுபுறம் வசந்த மண்டபமும், 

தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி 

அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. 

அம்பாள் கிரிசுந்தரி தனி சந்நிதியில் 

தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். 

அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர், 

காசி விநாயகர், பாணலிங்கம், விஸ்வநாதர், 

முருகன், நால்வர், குந்திதேவி, தெட்சிணாமூர்த்தி, 

லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, 

சண்டிகேஸ்வரர், 8 கரங்களுடன் ஆடும்நடராஜர் 

ஆகியோரை மண்டபங்களிலும்,

 பிரகாரத்திலும் தரிசிக்கலாம்.

 அஷ்டபுஜ மாகாளி: 

எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.

சோமாஸ்கந்த மூர்த்தி:

 இங்கு உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி 

திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. 

மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். 

மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது 

அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். 

ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் 

வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம்.

கணநாதர்: 

 மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், 

பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். 

இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், 

காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். 

ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் 

கணநாதர் பூஜை சிறப்பானது. 

அன்றைய தினம் இந்த ஊரிலும், 

பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, 

 ஒரு வேளை கறக்கும் பாலை 

அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

 இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது.


தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது. 

இதை "ஆதிமரம்' என அழைக்கின்றனர். 

63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் 

தனது மனைவி மற்றும் மகனுடன் 

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு 

முக்தி பெற்ற தலம் திருநல்லூர். 

இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், 

அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் 

உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.

ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும்

தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. 

ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் 

இறுகப்பற்றிக் கொள்ள, 

வாயுதேவன் சண்டமாருதமாக மலையை 

அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார்.

 இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். 

தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி 

ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். 

இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு 

இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து 

தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், 

மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தான். 

நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே

 இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் 

எழுந்தருளியுள்ள மலையாகும். 

தென் கயிலாயம் என்று 

இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் 

திருமணம் செய்யும் காட்சியைக் காண 

உலகத்திலுள்ள அனைத்து 

ஜீவகோடிகளும் திரண்டு சென்றனர்.

 இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்து 

தென்திசை உயர்ந்தது. 

உலகை சமப்படுத்த அகத்தியரை 

தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். 

தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு 

இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம்,

"நீ வேண்டும் போது நான் 

உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்'என்றார் சிவன். 

அதன்படி அகத்தியர் சிவனின் 

திருமணக்கோலம் கண்ட பல தலங்களில் 

திருநல்லூர் தலமும் ஒன்றாகும். 

இந்த திருமண கோலத்தை 

மூல லிங்கத்தின் பின்புறம் காணலாம்.

இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் 

இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் 

மற்றொரு லிங்கத்தை வைத்து 

பூஜித்து பேறுபெற்றார். 

அன்று அவர் தரிசித்த திருமணக்கோலமூர்த்தியை

மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.



திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,

சுந்தரர், மாணிக்கவாசகர் 

நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்,  

அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், 

ராமலிங்க அடிகள் ஆகியோரால் 

பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.

Colour Changing Lingam at Kalyanasundareswarar Temple, Thirunallur

 இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் 

இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை 

தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். 

இன்றும் இங்குள்ள இறைவன் தினமும்

5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.

ஆறுநாழிகைக்கு ஒருமுறை 

நிறம்மாறி காட்சி அளிக்கிறார்.

[தாமிர நிறம், இளம் சிவப்பு, 

தங்க நிறம், நவரத்தின பச்சை, 

இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்].

ஐந்து வகை நிறத்துடன் இறைவன் 

தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்' என்றும், 

அமர்நீதியார், அப்பர் ஆகியோரை 

ஆட்கொண்டமையால் `ஆண்டார்' எனவும், 

அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி 

அருளியமையால் `கல்யாண சுந்தரர்' என்றும், 

மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் 

`சுந்தரநாதன்', `சவுந்தரநாயகர்' என்றும்

பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.

பிருங்கிமுனிவர் வண்டு உருவம் கொண்டு

வணங்கிய தலம்ஆதலால்

மூலவர் திருமேனியில் வண்டு

துளைத்த அடையாளங்கள் இருக்கிறதாம்.


திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் 

திருமணத் தடை உள்ளவர்கள்,வந்து 

இங்குள்ள இறைவனையும், இறைவியையும் 

திருமண பாக்கியம் வேண்டி

2 மலர் மாலைகளை சூட வேண்டும்.

பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் 

எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 

இங்கு வழிபாடு செய்தால் 

வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக

 வளைகாப்பு நடத்தியும், 

நினைத்த காரியம் நிறைவேறவும் 

இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.


பிரார்த்தனைநிறைவேறியதும் சந்தனக்காப்பு, 

முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

இத்தலத்தில் சிவபெருமான் 

நாவுக்கரசருக்குபாத தரிசனம் தந்தார். 

திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் 

இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் 

தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று 

இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். 

அவரின் வேண்டுகோளை திருநல்லூர் தலத்தில் 

இறைவன் நிறைவேற்றுகிறார்.

 தம் திருவடிகளை அப்பரின் தலைமீது 

இத்தலத்தில் சூட்டி அருளினார்.

 அப்பேறு பெற்ற திருநாவுக்கரசர்

 இறைவனை பதிகம் பாடி தொழுதார். 

இதன் காரணமாக பெருமாள் கோயிலைப்போல 

சிவன் பாதம் பொறித்த சடாரியை 

இத்தலத்தில் பக்தர்களுக்கு அன்று முதல்

 இங்கு பெருமாள் கோயிலைப்போல 

சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது









பாண்டவர்களின் தாய் குந்திதேவி, 

பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் 

என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. 

இந்த தோஷம் நீங்க குந்தி தேவி 

நாரதரிடம் யோசனை கேட்கிறாள். 

ஏழு கடல்களில் நீராடினால் 

தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார்.

நான் பெண், 

என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். 

எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும், என்கிறாள் குந்தி.

அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள 

நல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. 

அதற்குள் நான் வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். 

குந்தி வழிபாடு செய்து வருவதற்குள்

நல்லூர் தலத்திலுள்ள குளத்தில்

ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, 

தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள்.

மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், 

இக்குளத்தில் நீராடினால் 

கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய

பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதை மெய்ப்பிக்கும் வகையில் 

குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.

Kunti Devi Performing the Shiva Pooja


Saptha Sagara Theertham, Thirunallur

சப்தசாகர தீர்த்தம் 

தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,

 மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


Thirunallur location map

தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள  

பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற 

ஊரில் இருந்து பிரியும் சாலையில்

 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

 தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவிலும்,

 கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும் உள்ளது. 

பாபாநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக 

கோவிந்தக்குடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.



பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்,

 பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் 

சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

பாபநாசம், கும்பகோணம் செல்ல 

சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

திருநல்லூர் கிராமம்

திருநல்லூர் அஞ்சல்

(வழி) சுந்தரப்பெருமாள் கோயில்

வலங்கைமான் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 614208.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக