![]() |
அருள் பாலிக்கும் தலம் திருகொள்ளிக்காடு.
அக்கினிபுரம், அக்கினிஷேத்திரம் என்றும் கூறுவர்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற
மூன்று அம்சங்களையும் கொண்டது .
சனி தோஷம் போக்குவதில்
திருநள்ளாறையும் விட
இத்தலம் சிறப்பு பெற்றது.
சனி பகவானால் உண்டாகும்
அனைத்து தோஷங்களும்
இத்தலத்திற்கு சென்று வந்தால்
உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
![]() |
காவிரி தென்கரைத்தலங்களில்
இது 115வது தலம்.
சனி பகவானின் தோஷம் நீக்கும்
தலங்கள் வரிசையில் இது தலையாயது.
சுவாமி---அக்னீஸ்வரர், தீவண்ண நாதர்
அம்பாள்--- மிருதுபாத நாயகி ,பஞ்சினும் மெல்லடியம்மை
தல மரம்--வில்வம், வன்னி
தீர்த்தம்--அக்னிதீர்த்தம்,தீர்த்தகுளம்
திருவிழா:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.
மக்கள் வழக்கில் 'கள்ளிக்காடு' என்று வழங்குகிறது.
கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின்
'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.
இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல்
குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில்
இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும்
அழைத்து வந்ததாக தெரிகிறது.
சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர்.
நாம் செய்யும் தவறுகளுக்குத்
தகுந்தபடி தண்டனை கொடுப்பவர்.
அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி
சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால்
அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும்,
சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார்.
ஆனால் தேவர் முதல் மனிதர் வரை
சனிபகவான் செய்யும் நன்மைகளை
கண்டு சந்தோஷப்படாமல்,
அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே
நினைத்து பயப்படுவர்.
இதனால் மனம் வருந்திய சனி,
வசிஷ்டரின் யோசனைப்படி,
அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து
கடும் தவம் செய்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன்,
அக்னி உருவில் தரிசனம் தந்து,
சனியைப், பொங்கு சனியாக மாற்றினார்.
அத்துடன் இத்தலம் வந்து தன்னையும்
பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு
சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும்
என அருள்புரிந்தார்.
சிவன் அருளின்படி சனிபகவான்
இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து,
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு
செல்வங்களை வழங்கி,
மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார்.
நளச்சக்கரவர்த்தி தனக்கு
சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால்
நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து
மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.
சனி தோஷம் விலகிய பின்
இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி
நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.
![]() |
இத்தலத்து ஈசனை வணங்கியதால்
இறைவன் “அக்னீஸ்வரர்”எனப்படுகிறார்.
இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில்
சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது சிறப்பாகும்.
இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை
என 3தலவிருட்சங்கள் உள்ளன.
இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும்,
கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது;
ஊமத்தை மனக்கவலையைப் போக்குகிறது.
இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற
திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த
120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி)
இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.
இங்குள்ள சனிபகவான்
உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில்
கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.
இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி
அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால்
அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
நவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு.
அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது.
சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து,
சனிபகவானை வழிபட்டால்
தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தின் மூர்த்தி, தலம், தீர்த்தம்
மூன்றும் மிகவும் சக்தி வாய்ந்தவை.
சனி கிரகத்தினால் உண்டாகும் பீடைகள்,
தொழில் மந்தம், கொடிய நோய் கள்,
கண் பார்வை மங்குதல்,
சரீரத்தில் தீராத வலி உண்டாதல்,
சரீரத்தில் தீராத வலி உண்டாதல்,
அங்கக் குறைபாடு ஏற்படுதல்,
கல்வியில் தடை,
திருமணத்திற்குப் பின் வரும் சங்க டங்கள்,
ஆசைகள் நிறைவேறாது போதல்,
ஆசைகள் நிறைவேறாது போதல்,
திருடர்களால் பயம், ரத்தம் சிந்துதல்,
மாதவிடாய் கோளாறுகள் போன்றவை
இந்த அக்னீஸ்வரரை நாம் அணுகினால்,
நம்மை விட்டு ஓடிப்போகும்.
நெருப்புக்கு இறைவனாம் அக்னிபகவான்
வந்து தங்கி தவம் செய்த புண்ணியத் தலம்
அக்னி தேவனால் உருவாக்கப்பட்ட
மூர்த்திக்கு அக்னீஸ்வரன் என்று
பிரம்மதேவன் பெயர் சூட்டினார்.
அக்னி தேவன் தவம் செய்த வனம் இது.
எனவே, இத்தலத்திற்கு கொள்ளிக்காடு
என்று பெயர் உண்டாயிற்று.
அக்னீஸ்வரனை தேவர்களும் சித்தர்களும்
‘தீவண்ணநாதா’ என கொண்டாடுகின்றனர்.
எனவே இவருக்கு தீவண்ணநாதர் என்ற
மற்றொரு பெயரும் உண்டு.
இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை.
மேற்கு நோக்கி ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது.
உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது
பலிபீடம் மற்றும் நந்தி.
கொடிமரம் கிடையாது.
பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,
மகாலட்சுமி,சனிபகவான் மற்றும்
பைரவர் சன்னதிகள் உள்ளன.
விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி
வலம் முடித்து உள்ளே சென்றால்
நேரே மூலவர் தரிசனம்.
இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது.
அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால்
திருகொள்ளிக்காடு என்றும்
அக்னிதேவன் வழிபட்ட இறைவன்
அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார்.
இறைவனுக்கு மற்றொரு பெயர் தீவண்ணநாதர்.
பெயருக்கு ஏற்றாற்போல்
இங்குள்ள இறைவன் மேனி
சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது.
குட்டையான சிறிய பாணம்.
சுவர் ஓரத்தில் நால்வர் சன்னதி உள்ளது.
சன்னதிக்கு முன்னால் இடதுபுறம்
அம்பாள் சன்னதி உள்ளது.
சிறிய திருமேனி நின்ற திருக்கோலம்.
கோஷ்ட மூர்த்தங்களாக
பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி,
விநாயகர், முதலிய திருமேனிகள் உள்ளன.
முருகன் கையில் வில்லுடன்
தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார்.
இலிங்கோத்பவருக்கு அருகில்
பிரம்மாவும் விஷ்ணுவும்
நின்று காட்சிதருவது விசேடம்.
நின்று காட்சிதருவது விசேடம்.
வினாயகருக்கு பக்கத்தில் சுவரில்
சிவலிங்கத்தை ரிஷி ஒருவர்
வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது.
இது அகத்தியர் வழிபடும் கோலம் என்கின்றனர்.
மேற்கு வெளிப் பிரகாரத்தின்
வடமேற்கு மூலையில்
கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி
தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது.
திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால்
சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம்.
புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட
சனி தோஷத்தை நீக்கியருளியவர்
சனி பகவான் இங்குஅனுக்கிரக மூர்த்தியாக
பொங்கு சனியாக காட்சி அளிகிறார்.
.
நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில்
ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள்.
ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில்
ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.
நாம் செய்த பாவங்கள் அனைத்தையும்
இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால்
இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.

தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது.
இக்கோயில் 1500ஆண்டுகளுக்கு முன்பு
செங்கற்கோயிலாக இருந்தது.
இதனை முதலாம் இராஜராஜ சோழன்
கற்கோயிலாக எடுப்பித்தான்.
இங்கு முதலாம் இராஜராஜ சோழன் மற்றும்
முதலாம் இராஜேந்திர சோழன்
காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
வேண்டுகோள்நிறைவேறியவர்கள்
இறைவனுக்கும் அம்மனுக்கும்
திருமுழுக்காட்டு செய்து,
புத்தாடைஅணிவித்து,
சிறப்புபூசைகள் செய்து
நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டில்
செப்புத் திருமெனியாக விளங்கும்
அமரசுந்தரப் பெருமான், நம்பிராட்டியார்,
பணபதிப் பிள்ளையார் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன.
மேலும், திருக்கொள்ளிக்காட்டு ஊரார்
கோயிலுக்காக நிலம் அளித்தது.
அதன் வருவாயிலிருந்து தினமும்
6 நாழி அரிசி அமுதுக்காக
அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.
இதற்குத் தடையாக யார் இருந்தாலும்
அவர்களிடமிருந்து 25 கழஞ்சுப்பொன்னை
ஊர் மன்றம் அபராதமாக வசூலிக்கும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில்
பாதசிவன் ஆச்சன் என்பவனும்
அவன் தம்பி ஆச்சன் அடிகள் என்பவனும்
கோயிலில் சங்கு, காளம், சேகண்டிகை
ஆகியவை ஒலிப்பதற்கு
நிலம் அளித்தது குறிக்கப் பெற்றுள்ளது.
இராஜேந்திர சோழனின் கல்வெட்டில்
கொள்ளிக் காட்டைச் சேர்ந்த
மூவேந்த வேளான் என்பவன்
வழிபாட்டிற்காக ஒரு வேலி நிலமும்
200 பொற்காசுகளும், அளித்தாகவும் அ
ந்த நிலம் அருமுளைச் சேரியான
மறையமங்கலத்தில் இருந்ததாகவும் கூறுகிறது.
இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில்
திருக்கொள்ளிக்காட்டுக் கோயில் நிலத்தை
உத்தம சோழனின்
இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு வரை
சிலர் தவறாக அனுபவித்து வந்ததை
திருவெண்டுறை அன்னதான யோகிகள்
மன்னனிடம் முறையிட,
மன்னனும் தன் அதிகாரியை அனுப்பி
விசாரணை செய்து
அந்த நிலங்களை கைப்பற்றியதோடு
400 பொற்காசுகளைத் தண்டமாகப் பெற்றுக்
கோயிலுக்குச் செலுத்திய செய்தி கூறப்பெற்றுள்ளது.
ஏழரை ஆண்டுச் சனித்தோஷம், ஜன்மச் சனி,
சனிபகவானின் கடுமையான பார்வை
ஆகியவை உடையவர்களும்,
மற்றவர்களும் கொள்ளிக்காடு சென்று
வழிபாடு செய்தால் எல்லா நலமும் பெறலாம்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும்,
திருத்துறைப்பூண்டி - திருவாரூர்
ரயில் மார்க்கத்தில் உள்ள
ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து
7 கி.மி. தொலைவிலும் உள்ளது.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில்
நான்கு சாலை நிறுத்தம் வந்து
அங்கிருந்து மேற்கே
திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில்
திரும்பி 4 கி.மி. சென்றால்
முதலில் திருநெல்லிக்காவல் தலமும்
அடுத்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் தலமும்
அதையடுத்து மேலும் 4 கி.மி. சென்றால்
திருகொள்ளிக்காடு தலத்தை அடையலாம்.
இத்தலத்திற்கு கச்சனத்திலிருந்து
மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
அதாவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில்,
'நெல்லிக்கா ' என்று கைகாட்டி உள்ள திசையில் சென்று;
'திருநெல்லிக்கா ' - 'தெங்கூர் ' அடைந்து,
அங்கிருந்து 'கொள்ளிக்காடு' செல்லும் பாதையில்
5 கி. மீ. சென்று,
கீராலத்தூர் கிராமத்தை அடைந்து
சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள
தாமரைக்குளமும்
கோயிலை அடையலாம்.
நல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.
பஸ், கார், வேன் கோயிலுக்குச்
செல்ல வசதியுள்ளது.
கோயில் வரை மினிபஸ் போகிறது.
கோயிலைச் சுற்றிச் சில வீடுகளே உள்ளன.
தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில்,
'நெல்லிக்கா ' என்று கைகாட்டி உள்ள திசையில் சென்று;
'திருநெல்லிக்கா ' - 'தெங்கூர் ' அடைந்து,
அங்கிருந்து 'கொள்ளிக்காடு' செல்லும் பாதையில்
5 கி. மீ. சென்று,
கீராலத்தூர் கிராமத்தை அடைந்து
சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள
தாமரைக்குளமும்
கோயிலை அடையலாம்.
நல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.
பஸ், கார், வேன் கோயிலுக்குச்
செல்ல வசதியுள்ளது.
கோயில் வரை மினிபஸ் போகிறது.
கோயிலைச் சுற்றிச் சில வீடுகளே உள்ளன.
தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக