![]() |
சுபக்கிரகம் குரு ஆவார்.
தேவர்களுக்கு ஆசான்
இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர்.
தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி .
நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால்
இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி.
அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று
போற்றப்படும் வியாழபகவான்.
குரு சூரியனைச் சுற்றிவர
பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்கள் பல உள்ளன.
இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள
ஆலங்குடி குரு ஸ்தலமாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம்
உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம்.
நவ திருப்பதிகளில் ஒன்றான
ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும்.
அங்கும் வழிபாடு செய்யலாம்.
திருச்செந்தூரில் முருகப் பெருமான்
குரு வடிவாகவே அருள்புரிகிறார்.
குரு, சுக்ரன் இரண்டும் ராஜ கிரகங்கள் என்பர்.
4வேதங்கள்,64கலைகள் அறிந்தவர்கள்.
குருவுக்கு உரிய நிவேதனப் பொருட்கள்
மஞ்சள் வஸ்திரம்
முல்லை மலர்கள்
கொண்டக்கடலை
சர்க்கரைப் பொங்கல்
செல்வம்,புகழ்,
குழந்தைபாக்கியம்,திருமணம்
இந்த நான்கும் கிடைக்கும்.
ஆலங்குடி-
நவகிரகதலங்களில் குருவுக்குரியது
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.
![]() |
![]() |
முதன்மையான குருபரிகாரத் தல ம்
இறைவர்- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி --ஸ்ரீஏலவார் குழலி அம்மை
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்
அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி
சந்நிதிகளும் இருக்கிறது.
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது
வெட்டாற்று வெள்ளப் பெருக்கில்
ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து
கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு.
ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது
காத்தவிநாயகர் “கலங்காமல் காத்த பிள்ளையார்”
என வழங்கப்படுகிறார்.
இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது.
தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து
சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார்.
இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.
இங்குள்ள தட்சினாமூர்த்தி ஞானம் தரும்
குருவாக அருள் பாலிக்கிறார்.
கருநிறமுள்ள பூளைச் செடியைத்
தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால்
“திருஇரும்பூளை” என்றும்,
ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த
பெருமானுக்குரிய தலமாதலாலும்,
திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது
தோன்றிய ஆலத்தை உண்டு
அமரர்களைக் காத்தருளிய
இறைவன் வீற்றிருப்பதாலும்“
ஆலங்குடி” என்று பெயர்.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும்
எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை
என்று சொல்லப்படுகிறது.
விசுவாமித்திரர், அகத்தியர், ஆதி சங்கரர்
வீரபத்திரர் வழிபட்ட திருத் தலம்.
திருநாவுக்கரசராலும்,
திருஞான சம்பந்தராலும் பாடப் பெற்றது,
பஞ்சாரண்ய தலங்களில் ஒன்று.
பார்வதி தேவி, விஷ்ணு,
லட்சுமி, இந்திரன் முதலான தேவர்கள்
வழிபட்ட தலம் இது.
ஆலயம் ஊரின் நடுவே அழகாக,
ஐந்து நிலைகள் கொண்ட
ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது.
உள்ளே நுழைந்ததும் அம்மன் சன்னதி.
அடுத்து சுவாமி சன்னதி.
இதன் பிறகு குரு சன்னதி வரும்.
மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில்
இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர்,
முருகன், லஷ்மி, நால்வர், சூரியேசர்,
சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர்,
சப்தரிஷிநாதர்,விஷ்ணு நாதர்,
பிரமேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு
காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் உள்ளனர்.
ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர்,
பெரிய வடிவோடுகூடிய விநாயகர்,
சுப்பிரமணியர்,சண்டேஸ்வரர்,
கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள்
முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன.
சபாநாதர் சந்நிதியில் திருமுறைக்கோயில் உள்ளது.
உற்சவ தக்ஷிணாமூர்த்தி,
சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர்.
சுவாமி மகாமண்டபத்தில் நந்தி,
பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது.
மகாமண்டப வாயிலில் துவகரபாலகர் உளர்.
ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி.
இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி
தெற்கு கோஷ்டத்திலுள்ளார்.
மேற்கில் இலிங்கோற்பவரும்,
வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர்.
“ஞான கூபம்” என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது.
சுக்கிரவார அம்மன் சந்நிதி,
சனீஸ்வரர் சந்நிதி,
வசந்த மண்டபம்,
சப்தமாதா ஆலயமும் உள்ளன.
இத்தலத்தின் கிழக்கே “பூளைவள ஆறு” பாய்கிறது.
ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து
சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில
பார்வதியின் தந்தையான தட்சன்
சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காணலாம்.
இது மிகவும் சிறிய சிலை.
தற்போது சற்று சேதமடைந்தது போல்
தெளிவற்ற உருவத்துடன் உள்ளது.
திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு,
அங்கிருக்க விரும்பாமல்,
ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும்
ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை
அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது.
தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி,
உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில்இருக்கிறது.
இந்த சிலையை திருவாரூரில் இருந்து
ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர்,
காவலர்களிடம் இருந்து தப்பிக்க,
அம்மை கண்ட தன் குழந்தையை
எடுத்துச் செல்வதாக கூறினார்.
ஆலங்குடி வந்து பார்த்த போது
சிலைக்கே அம்மை போட்டிருந்தது.
இப்போதும் அம்மைத் தழும்புகள்
சிலையில் இருப்பதைக் காணலாம்.
சுக்ரவாரம்” என்றால் வெள்ளிக்கிழமை.
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம்.
அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி,
தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவாக
அம்பிகை அருள்பாலிக்கிறாள்.
இவளது பெயரும்“சுக்ரவார அம்பிகை” என்பதாகும்.
பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள்
சிவ பெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கும்
ஆனால் இங்கு சிவனே
அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி
சந்நிதிகளும் இருக்கிறது.
சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது
வெட்டாற்று வெள்ளப் பெருக்கில்
ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து
கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு.
ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது
காத்தவிநாயகர் “கலங்காமல் காத்த பிள்ளையார்”
என வழங்கப்படுகிறார்.
![]() |
தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து
சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார்.
இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.
இங்குள்ள தட்சினாமூர்த்தி ஞானம் தரும்
குருவாக அருள் பாலிக்கிறார்.
கருநிறமுள்ள பூளைச் செடியைத்
தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால்
“திருஇரும்பூளை” என்றும்,
ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த
பெருமானுக்குரிய தலமாதலாலும்,
திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது
தோன்றிய ஆலத்தை உண்டு
அமரர்களைக் காத்தருளிய
இறைவன் வீற்றிருப்பதாலும்“
ஆலங்குடி” என்று பெயர்.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும்
எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை
என்று சொல்லப்படுகிறது.
விசுவாமித்திரர், அகத்தியர், ஆதி சங்கரர்
வீரபத்திரர் வழிபட்ட திருத் தலம்.
திருநாவுக்கரசராலும்,
திருஞான சம்பந்தராலும் பாடப் பெற்றது,
பஞ்சாரண்ய தலங்களில் ஒன்று.
பார்வதி தேவி, விஷ்ணு,
லட்சுமி, இந்திரன் முதலான தேவர்கள்
வழிபட்ட தலம் இது.
![]() |
| ||||||||||||||||||||||||||||||||
![]() |
ஐந்து நிலைகள் கொண்ட
ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது.
உள்ளே நுழைந்ததும் அம்மன் சன்னதி.
அடுத்து சுவாமி சன்னதி.
இதன் பிறகு குரு சன்னதி வரும்.
மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில்
இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர்,
முருகன், லஷ்மி, நால்வர், சூரியேசர்,
சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர்,
சப்தரிஷிநாதர்,விஷ்ணு நாதர்,
பிரமேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு
காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் உள்ளனர்.
ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர்,
பெரிய வடிவோடுகூடிய விநாயகர்,
சுப்பிரமணியர்,சண்டேஸ்வரர்,
கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள்
முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன.
சபாநாதர் சந்நிதியில் திருமுறைக்கோயில் உள்ளது.
உற்சவ தக்ஷிணாமூர்த்தி,
சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர்.
சுவாமி மகாமண்டபத்தில் நந்தி,
பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது.
மகாமண்டப வாயிலில் துவகரபாலகர் உளர்.
ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி.
இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி
தெற்கு கோஷ்டத்திலுள்ளார்.
மேற்கில் இலிங்கோற்பவரும்,
வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர்.
“ஞான கூபம்” என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது.
சுக்கிரவார அம்மன் சந்நிதி,
சனீஸ்வரர் சந்நிதி,
வசந்த மண்டபம்,
சப்தமாதா ஆலயமும் உள்ளன.
இத்தலத்தின் கிழக்கே “பூளைவள ஆறு” பாய்கிறது.
ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து
சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில
பார்வதியின் தந்தையான தட்சன்
சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காணலாம்.
இது மிகவும் சிறிய சிலை.
தற்போது சற்று சேதமடைந்தது போல்
தெளிவற்ற உருவத்துடன் உள்ளது.
திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு,
அங்கிருக்க விரும்பாமல்,
ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும்
ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை
அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது.
தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி,
உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில்இருக்கிறது.
இந்த சிலையை திருவாரூரில் இருந்து
ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர்,
காவலர்களிடம் இருந்து தப்பிக்க,
அம்மை கண்ட தன் குழந்தையை
எடுத்துச் செல்வதாக கூறினார்.
ஆலங்குடி வந்து பார்த்த போது
சிலைக்கே அம்மை போட்டிருந்தது.
இப்போதும் அம்மைத் தழும்புகள்
சிலையில் இருப்பதைக் காணலாம்.
சுக்ரவாரம்” என்றால் வெள்ளிக்கிழமை.
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம்.
அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி,
தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவாக
அம்பிகை அருள்பாலிக்கிறாள்.
இவளது பெயரும்“சுக்ரவார அம்பிகை” என்பதாகும்.
பிற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்கள்
சிவ பெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கும்
ஆனால் இங்கு சிவனே
தட்சிணாமூர்த்தியாய் அருளுகிறார்.
காசியில் இறக்க நேர்ந்தால்,
காசியில் இறக்க நேர்ந்தால்,
காசி விஸ்வநாதர் இறப்பவரது காதில்
இறக்கும் முன் " ராம நாமம் "
சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம்.
சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம்.
அது போல், இத் தலத்தில் ஈசன் " பஞ்சாட்சிர மந்திரம்
உபதேசிப்பதாக நம்பிக்கை.
உபதேசிப்பதாக நம்பிக்கை.
பஞ்சாட்சிர மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பவர்களை
பூதம், பிரேதம், பைசாச, வேதாளம்
போன்றவை நெருங்குவதில்லை.
எல்லா விதமான நோய்களும்,
துனபங்களும் அகலும் என்கிறது " காசியாரண்ய மகாத்மியம் ".
குரு பகவானின் அருளாசி கிடைக்க
துனபங்களும் அகலும் என்கிறது " காசியாரண்ய மகாத்மியம் ".
குரு பகவானின் அருளாசி கிடைக்க
ஆலங்குடி வந்து அவரை 24 தீபங்கள் ஏற்றி அர்ச்சித்து
24 முறை வலம் வர வேண்டும்.
24 முறை வலம் வர வேண்டும்.
வியாழக் கிழமைகள் தோறும் விரதம் இருப்பதாலும்,
தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும்
தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்வதாலும்
குரு பார்வை கிடைக்கும்.
குருபெயர்ச்சி ஆராதனை,
சித்திரைப் பௌர்ணமி விழா,
தைப்பூசம் பங்குனி உத்திரம்.
தக்ஷிணாமூர்த்திக்கு தேர்விழா நடைபெறுகிறது.
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் வழிபடுவோர்
எல்லா நலன்களும் பெறுவர்.
நாகதோஷ முடையவர்கள்
இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
தெட்சிணாமூர்த்தி உற்சவராக
தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
கோவில் திறப்பு நேரம்-
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆலங்குடி,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
திருவாரூரிலிருந்து 30கி.மி தூரத்திலும்,
கும்பகோணத்தில் இருந்து
மன்னார்குடி செல்லும்
சாலையில் 17கி. மீ தொலைவில் உள்ளது.
போன் -- 0437-4269407
குரு ஸ்லோகம்---
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
வியாழக்கிழமைகளில் இந்த
குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால்
குருவின் அருள் கிடைக்கும்.
நாகதோஷம் நீங்கவும்,
பயம், குழப்பம் நீங்கவும்
இங்குள்ள விநாயகரையும்,
திருமணத்தடை நீங்கவும்,
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும்
இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
ஆலங்குடி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்
மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே
குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட
மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள்.
குரு பலம் இருப்பவர்களுக்கு
மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பு.
குரு பெயர்ச்சி நாளை விட
இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
குருபெயர்ச்சி ஆராதனை,
சித்திரைப் பௌர்ணமி விழா,
தைப்பூசம் பங்குனி உத்திரம்.
தக்ஷிணாமூர்த்திக்கு தேர்விழா நடைபெறுகிறது.
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் வழிபடுவோர்
எல்லா நலன்களும் பெறுவர்.
நாகதோஷ முடையவர்கள்
இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
தெட்சிணாமூர்த்தி உற்சவராக
தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
கோவில் திறப்பு நேரம்-
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆலங்குடி,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
திருவாரூரிலிருந்து 30கி.மி தூரத்திலும்,
கும்பகோணத்தில் இருந்து
மன்னார்குடி செல்லும்
சாலையில் 17கி. மீ தொலைவில் உள்ளது.
போன் -- 0437-4269407
குரு ஸ்லோகம்---
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
வியாழக்கிழமைகளில் இந்த
குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால்
குருவின் அருள் கிடைக்கும்.
நாகதோஷம் நீங்கவும்,
பயம், குழப்பம் நீங்கவும்
இங்குள்ள விநாயகரையும்,
திருமணத்தடை நீங்கவும்,
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும்
இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
ஆலங்குடி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்
மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே
குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட
மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள்.
குரு பலம் இருப்பவர்களுக்கு
மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பு.
குரு பெயர்ச்சி நாளை விட
இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக