வெள்ளி, ஜனவரி 06, 2012

ஏகாதசி

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். 


அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து 


வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி 


வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.


 வருடம் முழுதும் ஏகாதசி விரதம் 


அனுஷ்டிக்க இயலாதவர்கள், 


மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில்


 மட்டுமாவது விரதம் மேற்கொள்வது 


சிறப்பான பலன் களைத் தரும். 


முப்பத்து முக்கோடி தேவர்களும் 


விரதம் இருப்பதாலும் 


மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் 


தரக்கூடியது என்பதாலும் வைகுண்ட ஏகாதசி 


"முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.


"ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் 


                                               போஜந த்வயம்! 


சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா: த்ரவணம் தத!!


பொருள் -


" ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் 


செய்ய வேண்டியது இரண்டு;


உபவாசமாக பட்டினி இருப்பது,


இறைவனின் பெருமைகளை கேட்பதாகும்".


ஏகாதசிக்கு முதல் திதியான தசமி அன்று 


விரதம் துவங்க வேண்டும்.


தசமி அன்று ஒரு வேளை உணவும்,


மறுநாள் ஏகாதசி அன்று பூரண விரதம் 


இருக்க வேண்டும்.


துளசி நீர் குடிக்கலாம். 


அன்று ஏழு முறை துளசி இலை 


சாப்பிட வேண்டும் என்றும் கூறுவார்.


மார்கழி குளிருக்கு உடலுக்கு வெப்பம் 


கிடைக்கவே துளசி இலை சாப்பிடுகிறோம்.


ஏகாதசி அன்று துளசி இலை பறிக்கக் கூடாது.


முதல் நாள் பறித்து, பூஜைக்கும், 


தீர்த்தத்திற்கு  பயன் படுத்தலாம்.


ஏகாதசியன்று இரவில் கண் விழித்து 


பெருமாளின் திருநாமங்களை சொல்லியும், 


பஜனை, பாராயணம் செய்ய வேண்டும்.


விழிக்கிறேன் என்று, சினிமா,டி.வி  பார்க்க கூடாது.


மறுநாள் துவாதசி அன்று 


அதிகாலையில் நீராட வேண்டும்.


நெற்றியில் நாமம் அல்லது திருநீறு  இட வேண்டும்.


துளசி தீர்த்தம் அருந்த வேண்டும்.


சூர்ய உதயத்திற்குள் சமையலை முடிக்க வேண்டும்.


அன்றைய உணவிற்கு "பாரணை" என்று சொல்லவர்.


அதில் 21  காய்கறிகள் இருக்க வேண்டும்.


இயலாதவர்கள் அவரவர் வசதிப்படி செய்யலாம்.


அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் 


சமையலில் கட்டாயம் இருக்க வேண்டும்.


துவாதசியன்று அதி காலையில் 


உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக 


நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை 


இவைகளைசேர்த்து பல்லில்படாமல் 


கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்றுமுறைகூறி 


ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு 


விரதத்தை முடிக்கவேண்டும்.


பாரணைக்குப் பின் உறங்க கூடாது.


அடியார்களுக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும்.


முழுவதும் பட்டினி இருக்க முடியாதவர்கள்   
அன்முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள்,  
நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை,நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்


பால், தயிர்போன்றவற்றை இறைவனுக்கு படைத்து 


(பிரசாதமாக)உண்ணலாம்.
னுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.
ஏகாதசி திதி (குறிப்பாக வைகுண்டஏகாதசி) நாட்களில் 

தாய், தந்தைக்கு நினைவுநாள்( சிரார்த்தம்) வந்தால் 

அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்தவேண்டும்.
றுவையற்ற உணவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக