![]() |
காசியஸ் எனும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த போது
கங்கை கரையில் தங்கியதால் காசி எனப்பட்டதாம்.
காசா எனும் மன்னன் ஆண்டதாலும் பெயர் வந்ததாம்.
இரண்டாயரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானது.
காசி பல முறை தாக்கப் பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் ஆலயம் முகமதிய மன்னர்களால்
இடிக்கப் பட்டு
அங்கு மசூதிகளும் கட்டப்பட்டது.
ஆனாலும் மீண்டும், மீண்டும் ஆலயம் கட்டப்பட்டது.
கஜனி முகமது, குத்புதின்,ஓளரங்கசீப்,
காசியை கைப்பற்றி அழித்தனர்,
[1759 ] ஓளரங்கசீப்யால் தூக்கி எறிய பட்டு
கங்கை நதியிலிருந்து எடுக்கப்பட்ட
சிவலிங்கமே இப்போது ஆலயத்தில் உள்ளது.
அர்சகரின் கனவில் தோன்றிய இறைவன்
"கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன்;
என்னை எடுத்து, ராணி அகல்யா பாய்
மூலம் கோவில் கட்டவும்" எனப் பணித்தாராம்.
அதுவே இப்போது இருக்கும் கோவில்.
ராணி கட்டிய கோவில். விமானத்திற்கு,
ரஞ்சித் சிங் எனும் பஞ்சாப் அரசன்
பொன் தகடு வேய்ந்து கொடுத்தாராம்.
இந்துக்களின் புனிதத்தலம் காசி.
வாழ்நாளில் ஒரு முறையாவது காசி சென்று வருவது
இந்துக்களின் முக்கிய கடமை ஆகும்.
கிருத்துவர்களுக்கு ஜெருசலம்
முகமதியர்க்கு மெக்கா
இந்துக்களுக்கு காசி யாத்திரை.
புத்த மதத்தினருக்கும் காசி சிறப்புத் தலம்.
ஞானம் பெற்ற புத்தர் முதல் போதனையை
இங்கே தான் துவக்கினார்.
மகாவீரருக்கு முன்னோடியான
தீர்த்தங்கர பரஸ்வநாதர் அவதரித்த இடம்
ஆதலால் ஜெயினர்களுக்கு புண்ணிய இடம்.
ஆதிசங்கரர் இந்து மதத்தை பரப்பவும்,
துளசிதாசர் இறை பக்தியைப் பரப்பவும்,
கபீர் தாசரும், குருநானக்கும்
மத ஒற்றுமையை நிலை நிறுத்தவும்
தேர்ந்து எடுத்த இடம் காசி.
சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள
நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகிறார்கள்.
இதற்கான சமஸ்கிருத பல்கலைக் கழகம் உள்ளது.
காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.
துவாரகை, மதுராபுரி, காஞ்சிபுரம்,
அயோத்தி, ஹரித்துவார், அவந்திகா,காசி
இந்த ஏழு தலங்களில் முக்தி அடைந்தால்
மீண்டும் மனித பிறப்பு இல்லையாம்.
முக்தி தரும் ஏழு தலங்களில் இது முதன்மையானது.
முதன்மையான ஜோதிர் லிங்க தலம்.
உத்தரபிரதேசத்தில் மாநிலத்தில்,
காசி மாவட்டத்தில்,காசி நகர்
புனிதமான கங்கை கரையின்
மேற்குக் கரையில் அமைந்துள்ளது
காசிக்கு வடக்கிலிருந்து வாரணா நதியும்,
காசிக்கு தெற்கிலிருந்து ஆசி நதியும்,
கங்கையுடன் சங்கமம் ஆவதால்
காசியை , வாரணாசி என்பர்.
பனாரஸ் என்றும் கூறுவார்.
காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை
கங்கைநதி ஓடுகிறது.
இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால்
உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.
சிவபெருமானின் அடியையும் முடியையும் காண
பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது,
அவர்களை எரித்து அழித்த இடம்
இவ்வூரே என்று கூறுவதுண்டு.
எனவே, இவ்வூருக்கு மகாமயானம்
என பெயர் வந்தது.
இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார்.
எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர்.
பொருள் இல்லாதவர்களால் முடியாது.
பொருள் இருந்தும் பிராப்தி இருந்தால் தான்
காசி பயணம் செல்ல முடியும்.
![]() |
கால பைரவரின் காவலில் விளங்கும் தலம்.
இந்தியாவிலேயே அதிகமான அளவு கோயில்கள்
உள்ள நகரம் காசிதான் என்கிறார்கள் .
சுமார் 1800 கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
வருணை நதியும், அஸி நதியும்
இரண்டு எல்லைகளுகுள்ளாக
சுமார் இருபது நீராடும் கட்டங்கள் உள்ளது.
இவற்றின் வழியாக செல்லும் கங்கா நதியை
மாதாவாக பெண்கள் மலரில் விளக்கு வைத்து
பூஜை செய்கிறார்கள்.
![]() |
உள்ள நகரம் காசிதான் என்கிறார்கள் .
சுமார் 1800 கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
வருணை நதியும், அஸி நதியும்
இரண்டு எல்லைகளுகுள்ளாக
சுமார் இருபது நீராடும் கட்டங்கள் உள்ளது.
இவற்றின் வழியாக செல்லும் கங்கா நதியை
மாதாவாக பெண்கள் மலரில் விளக்கு வைத்து
பூஜை செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக