ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற
இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.
லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி,
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி,
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.
ஐந்தெழுத்து மந்திரம் - பஞ்சாட்சரம் -நமசிவாய
இதனை ஓதும் முறை ஐந்து வகைப்படும்.
தூல பஞ்சாட்சரம் ---------- நமசிவாய
சூட்சம பஞ்சாட்சரம் -------- சிவாய நாம
காரண பஞ்சாட்சரம் --------- சிவாய சிவ
மஹா காரண பஞ்சாட்சரம் ------ சிவ
மஹா மனு ---------------------------- சி
சிவன் பஞ்ச முகங்கள்-
தற்புருடம் [மகேஸ்வரன்]
அகோரம் [ருத்ரா]
வாமதேவம் [விஷ்ணு]
சத்யோசாதம் [பிரம்மா]
சதாசிவ மூர்த்தம், ஐந்து முகங்கள்,
பத்து கரங்களுடன் அருள் பாலிப்பார்.
இவ்வைந்து வடிவங்களும் "நமசிவாய"
எனும் ஐந்தெழுத்தின் வடிவாக உள்ளனர்.
சத்யோசாதம்-
பஞ்சாட்சரத்தின் முதல் எழுத்தான
"ந"வடிவாக விளங்குகிறார்.
தங்க நிறத்துடன், குண்டலம் அணிந்து இருப்பார்.
பஞ்சபூதங்களில் நிலம் முழுவதும் நிறைந்து இருப்பார்.
உயிர்களின் வினைகளை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
வாம தேவம்-
பஞ்சாட்சரத்தின் இரண்டாவது எழுத்தான
"ம" வடிவாக விளங்குகிறார்.
குங்குமம் போன்ற செம்மை நிறத்திலிருப்பார்.
பஞ்சபூதங்களில் நீரின் மத்தியில் இருப்பார்.
பதிமூன்று கலைகளுடன்
உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் பாவங்களை நீக்கி,
அருள் புரிகிறார்.
அகோரம்-
பஞ்சாட்சரத்தின் மூன்றாவது எழுத்தான
"சி " வடிவாக விளங்குகிறார்.
கருத்த பெரிய வடிவுடையவர்.
பஞ்சபூதங்களில் அக்கினியின் மத்தியில் இருப்பார்.
எட்டு கலைகளுடன்
அகோரேசி என்று பெயருடைய
உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் பாவங்களை சுட்டெரிக்கிறார்.
தற்புருடம் -
பஞ்சாட்சரத்தின் நான்காவது எழுத்தான
"வ" வடிவாக விளங்குகிறார்.
பால சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.
பஞ்சபூதங்களில் வாயுவின் மத்தியில் இருப்பார்.
நான்கு கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் மனமயக்கத்தை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
"வ" வடிவாக விளங்குகிறார்.
பால சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.
பஞ்சபூதங்களில் வாயுவின் மத்தியில் இருப்பார்.
நான்கு கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் மனமயக்கத்தை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
ஈசானம்-
பஞ்சாட்சரத்தின் ஐந்தாவது எழுத்தான
"ய" வடிவாக விளங்குகிறார்.
கோடி சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.
பஞ்சபூதங்களில்ஆகாயத்தின் மத்தியில் இருப்பார்.
ஐந்து கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் பாவங்களை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
பஞ்ச கிருத்தியம்-
சிருஷ்டி [படைத்தல்]
திதி [காத்தல்]
சம்ஹாரம் [அழித்தல்]
திரோபவம் [மறைத்தல்]
அனுகிரகம்[அருளல்]
பஞ்ச சபைகள்-
இரத்தின சபை [திருவலங்காடு]
பொற்சபை [சிதம்பரம்]
வெள்ளி சபை [மதுரை]
தாமிரசபை [திருநெல்வேலி]
சித்திரசபை [குற்றாலம்]
![]() |
பஞ்சபூத தலங்கள்-
திருவாரூர் [நிலம்]
திருவானைக்காவல் [நீர்]
திருவண்ணாமலை [அக்கினி]
திருக்காளத்தி [வாயு]
சிதம்பரம் [ஆகாயம்]
நந்திகள்-
இந்திர நந்தி
வேத நந்தி
ஆன்ம நந்தி
மால்விடை நந்தி
தரும நந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக