புதன், ஆகஸ்ட் 17, 2011

பூணூல்


பூணூல் அல்லது முப்புரிநூல்

இருபிறவி கொளவதாக கருதப்படும் சாதிகளில்
இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே
உடலின் குறுக்கே அணியும்
மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும்.
நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். சிறுவர்களுக்குஉபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர்.
பூணூலில் இருக்கும் மூன்று புரிகள்,
காயத்திரி(மனம்),
சரசுவதி(வாக்கு),
சாவித்திரி(செய்கை)
தேவியரைக் குறிக்கும்.
இதன் மூலம் பூணூலை அணிபவர்
மனம்,வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க
எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.


சடங்குகள் செய்யும்போது பூணூல் மூன்று விதமாக அணியப்படுகிறது:

  1. நேர்முறை - வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்....கடவுளருக்கு வழிபாடுகள் செய்யும்போது.
  2. மாலையாக - கழுத்து வழியே நெஞ்சின் மீது மாலையாக அணிதல் - இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது
  3. எதிர்மறையாக - வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல் - இறந்தவர்களுக்கு கருமாதி செய்கையில், திவசம் கொடுக்கையில்

உபநயனம் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது.

பின்னர் திருமணத்தின் போது இரண்டாவதும்

பிள்ளை பிறந்தபின் மூன்றாவதும் அணியப்படுகிறது.

உலகில் தனது கடமைகளை

அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க

இவ்வாறு செய்யப்படுகிறது.

பூணூல் அணிவிக்கப்பட்ட ஒருவர்

அதனை தன் வாழ்நாள் முழுவதும் கழற்றாது அணிந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம்நாளில்

பழையது களைந்து புதியது அணிகிறான். .


பூணூலை "யக்ஞோபவீதம்' என்று அழைப்பர்.

இதற்கு "மிகவும் புனிதமானது' என்று பொருள்.

பூணூலின் மகிமையை விளக்க ஒரு கதை உண்டு.

ஒரு கிராமத்தில் வசித்த பிராமணர் ஒருவர்

பூணூல் தயாரிப்பதைத் தனது பணியாகக் கொண்டிருந்தார்.

பரமபக்தியுடன் இந்தத் தொழிலை அவர் செய்து வந்தார்.

மந்திரங்கள் சொல்லி கயிறு திரித்து,

சுவாமியின் முன்னால் வைத்து பூஜித்து கேட்பவர்களுக்கு கொடுப்பார்.

ஒருநாள் அவரது மனைவி, ""இந்த பூணூல் விற்பனையில் நமக்கு என்ன கிடைத்து விடும். நம் பெண் வயதுக்கு வந்து நிற்பது தங்களுக்கு தெரியவில்லையா? பக்கத்து ஊரில் தானே ராஜா இருக்கிறார். அவர் தர்மவானாம். நீங்களும் போய் ஏதாவது உதவி வாங்கி வாருங்கள்.

குழந்தைக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம்,'' என்றாள்.

பிராமணரும் ராஜாவை சந்தித்தார்.

தன் கையில் இருந்த பூணூலுக்கு சமமாக

தங்கம் கொடுத்தால் போதும் என்று கேட்டார்.

""பூணூலுக்கு சமமாக பொன் கேட்கிறாரே!

இவருக்கு என்ன ஆயிற்று?'' என்று ராஜா மனதுக்குள் நினைத்துக் கொண்டார். இருந்தாலும், தராசு கொண்டு வரப்பட்டது.

தட்டில் பூணூலை வைத்தார் பிராமணர்.

ராஜா ஒரு பொற்காசை தூக்கிப் போட்டார்.

தராசு அசையவில்லை.

இரண்டு, மூன்று, பத்து, அரண்மனையில் இருந்த

அத்தனை காசையும் வைத்தாயிற்று,

தனது கிரீடத்தையும் வைத்தார்.

ஊஹும்... அசையவில்லை தராசு முள்.

அங்குள் ளோர் மட்டுமல்ல,

பிராமணரும் இதைக் கண்டு திகைத்தார்.

மந்திரி இதைக் கவனித்தார்.

ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து,

""பிராமணரே! நீங்கள் நாளை வாருங்கள்.

நாங்கள் பொருள் தருகிறோம்,'' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

பிராமணருக்கு பயம்.

பூணூல் அளவுக்கு தங்கம் கேட்க,

ஏதோ மந்திரஜாலம் செய்து நாம் பொன் கேட்கிறோம் என

ராஜா நினைத்திருப்பாரோ!

நாளை ஒருவேளை நம்மை

இதற்காக சிரச்சேதம் செய்துவிட்டால் என்னாவது?

மறுநாள் அவர் தனது அன்றாட அனுஷ்டானங்களைக் கூட செய்யவில்லை. அரண்மனைக்கு சென்றார்.

பூணூலை தராசில் போட்டார்.

ராஜா ஒரு காசைப் போட்டார்.

தட்டு தாழ்ந்து விட்டது.

எல்லாருக்கும் ஆச்சரியம்..

பிராமணர் கிடைத்த காசுடன் தப்பித்தால்

போதுமென கிளம்பி விட்டார்.

ராஜா மந்திரியிடம் இந்த மாற்றத்திற்கான காரணம் கேட்டார்.

""முதல்நாள் தகுந்த ஆச்சார அனுஷ்டானங்களை முடித்து

பூணூலைத் தொட்டதால் அதற்கு மதிப்பு அதிகமாயிற்று.

மறுநாள் பயத்தில் பிராமணர் அதைச் செய்யாமல்,

பூணூலைத் தொட்டார். அதன் மதிப்பு குறைந்து விட்டது,'' என்றார்.

எனவே, பூணூல் அணிபவர் களும்,

அதனைத் தயாரிப்பவர்களும்

ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது.

ஆவணி அவிட்டத் தன்று பூணூல் அணியும்

இளைய தலைமுறையினரும்

இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக