புதன், ஆகஸ்ட் 10, 2011

வரலட்சுமி விரதம்

வெள்ளி 12 ஆகஸ்ட் 2011


காலெக்ஷ்மி பாற்கடலில் உதித்த தினம்.

சுமங்கலிகள் மட்டும் அனுஷ்டிப்பது

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில்,

பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில்

வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக்

குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.

லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க,

உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி

அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் நாளைவரலட்சுமி விரதம்

அனுஷ்டிக்கின்றனர்.

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள்.

இவள் விஷ்ணுவை மணந்து,

அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில்

அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து

அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள்.

தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து

கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்.

இதுபோலவே பெண்கள் அனைவரும்

தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்,

தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும்

வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை ,தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி,

வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என

அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

லட்சுமிதேவி பொறுமை மிக்கவள்.

அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என

அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால்

அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது.

அவள் நித்திய சுமங்கலி.

மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம்,

அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

ஆடி அல்லது ஆவணி மாதத்தில்,

பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில்

வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள்தான்

வரலக்ஷ்மி பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

புகுந்த வீட்டில் வரலக்ஷ்மி பூஜையைச்

செய்தால் தான் பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும்

. பிறந்த வீட்டில் இந்தப் பூஜையைச் செய்யும் வழக்கம் இருந்தாலும்

புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான்

எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாமியார் வீட்டில் பூஜையை எடுத்துக் கொள்ளும் போது

தங்கள் வீட்டுப் பெண்களுக்கு

பிறந்த வீட்டினர் சீர்வரிசைகளைச் செய்ய வேண்டும்.

தாமிரச் செம்போ, வெள்ளிச் செம்போ வாங்கித் தர வேண்டும்.

வெள்ளியில் லக்ஷ்மிமுகம்,

குங்குமக் கிண்ணம், சந்தனக் கிண்ணம்,

தட்டு,பூக்கள், பழங்கள்,

குங்குமம், மஞ்சள், தேங்காய் என்று வாங்கித் தர வேண்டும்.

சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது

. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்;

குடும்ப நலன் பெருகும்.

கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம்

சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்

முன்பே தயார் செய்து கொள்ள வேண்டியவை:
மஞ்சள்
கும்குமம்
சந்தனம்
அக்ஷதை
வெற்றிலை பாக்கு
வாழைப்பழம் - 12
தேங்காய் - 6
மாவிலை, தோரணம்
வாழை கன்று - 2
அம்மனுக்கு பஞ்சு மாலை
தாமரை - 6
தாழம்பூ - 2
உதிரிப்பூ - கொஞ்சம்
பூமாலை - 2
தொடுத்த சரம் - 3 முழம்
பச்சரிசி - 4 கப்
தாம்பாளம்
அம்மன் முகம்
கலச சொம்பு
பஞ்சபாத்திரம் உத்தரணி
பூஜை மணி
கற்பூரத் தட்டு
தூபக்கால்
தீபக்கால்
பித்தளை கிண்ணங்கள்
பித்தளை தட்டுக்கள்
ஆரத்தி தட்டு
ஊதுவத்தி
சாம்பிராணி
அட்சதை
கற்பூரம்
பலகை
மஞ்சள் வண்ண பட்டு துணி
முழு பாக்கு
மஞ்சள் கிழங்கு
வெள்ளி காசுகள்
எலுமிச்சை
கருகமணி காதோலை
மஞ்சள் சரடுகள்

நைவேத்யம்
குறைந்தது ஐந்து முதல் ஒன்பது எண்ணிக்கையில்
பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
உளுந்து வடை
பச்சரிசி இட்லி
வெல்ல பாயசம்
ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்)
அப்பம்
சர்க்கரை பொங்கல்
வடை
தயிர்
பசும்பால்
நெய்
தேன்
கற்கண்டு.
வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள்


பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி,

மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும்.

வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து

அலங்கரிக்க வேண்டும்.

நோம்புக்கு முதல் நாள்,

எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்
,
பச்சரிசியை ஊறவைத்து நிழல் உலர்த்தளாக உலர்த்தி,

ஈர அரிசியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதே மாவில் இரண்டு கரண்டி எடுத்துக் கொண்டு,

ஒரு கரண்டி உளுந்து அரைத்து சேர்த்து

பச்சரிசி இட்லிக்கும் வைத்துக் கொள்ளலாம்.

கிழக்கு திசை நோக்கி பூஜை மண்டபம் அமைக்க வேண்டும்.

பூஜை மண்டபத்தில் மாக்கோலம் போட்டு,

கலசம் வைத்து அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

முதல் நாள் இரவு கலசம் அமைக்க:

அம்மன் முகத்தையும், விளக்குகள் மற்றும்

பூஜை பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து

அலம்பி வைத்துக் கொள்ளுங்கள்.

அம்மனை அழைக்க வாசல் படியருகில்

செம்மண் இட்ட கோலம் போட்டு

அதன் மேல் பலகை வைத்து,

பலகையில் கோலம் போட்டு மண்டபத்தில் வைத்து,

அதன் மேல் தாம்பாளத்தை வைத்து,

தாம்பாளத்தில் கொஞ்சம் பச்சரிசியை பரத்தி வையுங்கள்.

கலச சொம்புக்கு சந்தன குங்குமம் இட்டு,

பாதிக்கும் மேல் பச்சரிசி நிரப்பி,

அதற்குள் இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு,

இரண்டு மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசு,

ஒரு எலுமிச்சை, கருகமணி காதோலை

ஆகியவற்றை இட்டு வையுங்கள்.

தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து,

மாவிலையை கலச சொம்பில் அமைத்து

சொம்பின் மேல் குடுமி மேல் பக்கம் இருக்குமாறு தேங்காயை வையுங்கள்.

அம்மன் முகத்தை அலங்காரம் செய்து

கலசத் தேங்காய் மேல் பொருத்துங்கள்.

அம்மனுக்கு விதவிதமாய் அலங்கார பொருட்கள்

, நகைகள் ரெடிமேடாக கிடைகின்றன.

அவரவர் ஆசைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பட்டுத் துணி சாற்றி வையுங்கள்.

இந்த சொம்பை அரிசி பரத்திய தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும்.

தாமரை / பூமாலை / தாழம்பூவையும்

அம்மனுக்கு இருபுறமும் சாற்றி வைக்க வேண்டும்.

விளக்கேற்றி வைக்க வேண்டும்.

இது வாசல் படியருகில் அமைத்திருக்க வேண்டும்.

அன்றிரவு வெண்பொங்கல், சாம்பார் மற்றும்

பாயசம் சமைத்து நெய்வேத்தியம் செய்து உண்ண வேண்டும்.

மறுநாள் காலை (விரதத்தன்று):

மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்


வாசல்படியருகில் அமர்த்தி இருக்கும் அம்மனை

சுலோகங்கள் சொல்லி,

வெற்றிலை பாக்கு பழம் நெய்வேத்தியங்கள் செய்து,

தேங்காய் உடைத்து,

தீப, தூப கற்பூர நீராஞ்சனம் செய்து

"வரலக்ஷ்மி ராவே மா இன்டிக்கி" "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா"

பாட்டை பாடி அழைத்து வந்து மண்டபத்தில் அமர்த்த வேண்டும்.

இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில்

தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும்


. அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின்
முகத்தை வைக்க வேண்டும்

வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம்.

சிலையை தாழம்பூவால் அலங்கரித்து

அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல்

தலைவாழை இலை வைத்து,

அதில் சிறிது அரிசியைப் பரப்பி,

அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள்.

சிலை முன் வாழை இலை போட்டு

அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும்.

அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை,

பொன்,பழங்கள் ஆகியவற்றை வைத்து

சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து,

சந்தனம் குங்குமம் வைத்து,

மாவிலையுடன் தேங்காய் வைத்து

அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து

ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன,

ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை)

பூஜையில் வைக்க வேண்டும்.

சரட்டில் புஷ்பம் கட்டி கலசத்துக்கு அருகில் வைக்கவும்.


ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான

மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர்,

அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.

ஐந்து வகை ஆரத்தி

(மங்கள ஆரத்தி (மஞ்சள்),

ஸ்ருங்கார ஆரத்தி (அலங்காரம்),

ராஜபோக ஆரத்தி (நிவேதனங்கள்),

சந்த்யா (சாயங்கால ஆரத்தி),

சயனம் (தாலாட்டு) ஆகிய பூஜைகள் செய்ய வேண்டும்.


கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான

அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.

பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,

கனகதாரா ஸ்தோத்திரம்,

மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம்.

வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு

தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.

நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம்.


உபாயன தானம்:

பூஜையை நடத்தி வைக்கும் சாஸ்திரிகளுக்கு

தகுந்த மரியாதையோடு தாம்பூலம், பிரசாதம்,

தக்ஷிணை ஆகியவை செய்து தர வேண்டும்.

ஒரு வேளை சாஸ்திரிகளை அழைக்காமல்

நீங்களே பூஜை செய்து கொண்டால்,

இதை வசதி குறைந்த வயதானவர்களுக்கு மரியாதை செய்து கொடுக்கலாம்.

மறுநாள் காலை புனர்பூஜை செய்ய வேண்டும்

தூபம் தீபம்,:தாம்பூல பழ நைவேத்யம்,நீராஜனம்:செய்து

கலசத்தை வடக்கே நகர்த்தி:வைத்துவிட வேண்டும்

பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும்.

இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை

மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.

இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும்.

கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக