புதன், ஆகஸ்ட் 24, 2011

கிருஷ்ண ஜெயந்தி,

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்'
'ந‌ல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்
அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகந்தோறும் பிறக்கிறேன்'

கிருஷ்ண‌ ப‌ர‌மாத்மா

கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று இந்தியர்களால்
பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை,
ஆவணி (ஷ்ராவண) மாசத்தின் அஷ்டமியில்
ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்திற்கு எட்டாம் நாள்

ரோகினி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி திதியில் கண்ணன் பிறந்தான் என்பதை நினைவூட்டும் வகையில் வீட்டின் நுழைவாயிலில்

குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை

மாவால் பதியச் செய்யப்படுகின்றமை
இன்றைய நாளின் சிறப்பம்சமாகும்.

இதனால் கிருஷ்ணன் தம் வீட்டிற்கு வந்ததைப் போன்ற

ஓர் இனிய உணர்வு ஏற்படுகின்றது.

இவ்விரதம் தம்பதிகளாகவே அனுஷ்டிக்கப்பட வேண்டும் எனவும்

பகலில் விரதம் இருந்து

இரவில் வசுதேவ தேவகியுடன் ஸ்ரீ கிருஷ்ணனை பூஜித்து

கண் விழித்திருந்து அவரது சரிதத்தைக் கேட்பதன் ஊடாக

பகவானின் அனுக்கிரகத்தை அடைய முடியும் என நம்பப்படுகிறது.

விரதகாரர்கள் மறுநாள் பூஜை செய்து

அன்னதானம் செய்வதன் ஊடாக

விரதத்தை பூர்த்திசெய்கின்றமை வழமையாகும்.


உன்னதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில்
பாகவத்தில் அவதார கட்டத்தைப் பாராயணம் செய்வதும்
பாகவதம் கேட்பதும் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.

நிவேதனங்கள்


பிரப்பம் பழம், நாவல் பழம்
அவல்
வெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று
பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி
துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்

நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்
அப்பம்

தட்டை
வெல்லச் சீடை
உப்புச் சீடை
முள்ளு முறுக்கு
முறுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக