புதன், நவம்பர் 02, 2011

ஸ்கந்தசஷ்டி விரதம்







மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே 

ஸ்கந்த சஷ்டி விரதவிழாவாகும். 

முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே 

ஸ்கந்தசஷ்டி விரதம்மிகச் சிறப்பாக 

ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

ஐப்பசி மாதத்தில் வரும்வளர்பிறை சஷ்டி அன்றுதான்

 முருகப் பெருமான் சூரபத்மனை அழித் த நாள்.



சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக 

தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். 

பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில்,

 தனதுசக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். 

அந்த முருகப் பெருமான் இந்தச்சூரபதுமாதி அசுரர்களுடன் 

ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். 

இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து

 இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை

முதல் ஆறு நாட்களையும் 

விரத நாட்களாகக் கொண்டு 

முனிவரும் தேவரும்

நோற்றுவந்தனர். 

இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் 

பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக்கிடைத்தது.

கந்தபுராணத்தில் வரும் 

சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே

 சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் 

ஆணவம், கன்மம், மாயை என்னும் 

மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. 

ஆன்மாவைத் துன்புறுத்தும்

 மலங்களின் கெடுபிடியில் இருந்து 

ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு 

ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து 

அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை 

உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

கந்த சஷ்டி விரதம், 

தீபாவளி அமாவாசை முடிந்து 

முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. 

ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்.


கந்தசஷ்டி விரத அனுட்டானம்

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் 

வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 

ஆறுநாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு 

விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. 

மிளகுகளை விழுங்கி, 

பழம்மட்டும் சாப்பிட்டு, 

தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து 

ஒரு நேர உணவு மட்டும்உண்டு 

அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று 

பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். 

விரதம் ஆரம்பமானதினத்தில் ஆலயம் சென்று 

சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி 

விரதத்தைத்தொடங்குவார்கள் 

முருகனுடைய விரதங்களுள் 

கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் 

ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும்.

 கந்த சஷ்டி விரதம்தொடர்ந்து ஆறு வருடங்களும், 

கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்


வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் 

இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.

 இந்த விரதத்தை மனதில் கொண்டே 

"சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.

 சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் 

என்பது பொருள். 

சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் 

இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் 

அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும்

 இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். 

கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் 

ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு 

நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.


அவ்வாறு இயலாதவர்கள் 

அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் 

ஆறு கை நீரையும் அருந்தலாம். 

உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. 

எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு,

 இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் 

அருந்தக்கூடாது.


விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, 

நாட்கடன்களை முடித்து,

 திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,

 தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, 

தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் 

முருகவேளை வழிபட்டு

 இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை

 நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.


ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் 

கந்தன் அடியார்களுடன் அமர்ந்து

 பாரணை செய்தல் வேண்டும் என்று

கந்த புராணம் விதிக்கின்றது.

கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

 நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும்

காமம் முதலிய சூரபதுமனை

முருகவேளின் ஞான வேலினால் அழித்து,

பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.


அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

 கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில்

 செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம்

செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு

குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும்,

எதிரிகள் தொல்லை நீங்கும்.


நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

 சஷ்டி ஆறு நாட்களும்

கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.

பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள்,

கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும்

 பத்து பாடல்களை அருளியுள்ளார்.

இதனைப் பாராயணம் செய்தால்

முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள்,

அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று

தொடங்குவது சிறப்பு.

அதிகாலையில் எழுந்து நீராடி,

அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ

 அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று,

அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன்

வழிபாடு செய்ய வேண்டும்.

இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.

சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம்,

 சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ்,

கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை

ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.*

புனர் பூஜை 


பூஜை அன்று சாயங்காலமோ அல்லது

 மறுநாள் காலையிலோ 

தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து 

தூப தீபம் கற்பூரம் காட்டி, 

“அஸ்மாத் பிம்பாத் ஸ்ரீ ஸுப்ரமண்ய தேவம் 

யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி” || 

க்ஷேமாய புனராகமனாய ச | என்று கூறி, 

வடக்கு முகமாக ஸ்ரீ ஸுப்ரமண்ய விக்ரஹத்தை 

(படத்தை) நகர்த்தி வைக்கவும்.

 பிறகு அவரவர் வசதிக்கேற்ப பூஜை செய்யும் 

ஒவ்வொரு முறையும் பழையபடி முறைப்ப

டி த்யானம் ஆவாஹனம் செய்து 

மேலே கூறப்பட்டது போல் பூஜை செய்யலாம்.


கந்த சஷ்டி விரத மகிமையும் கதையும் 


அரிச்சந்திரன் மருமகனாக உலகில் உதித்த 

முசுகுந்தன் பெரும் சோழச் சக்ரவர்த்தி. 

சூரியனுடைய ஆட்சிக் காலத்தில் இருந்தவர். அருந்தவர்.

முருகனுக்கும் தெய்வானைக்கும் திருப்பரங்குன்றத்தில்

 திருமணம் நடந்தபோது இந்திரனால் 

அந்தத் திருமணத்திற்கு வரவழைக்கப்பட்டவர் முசுகுந்தன். 

திருமணத்தைத் தரிசித்த முசுகுந்தன் 

கருவூருக்குத் திரும்பியதும், 

வசிஷ்ட முனிவரிடம், ‘கந்த சஷ்டி விரதம்’  உபதேசம் பெற்று 

விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தார்.


விரதப் பலனாக முருகன் அவர் எதிரே நின்று 


தரிசனம் தந்து என்ன வரம் வேண்டுமானாலும் தருவதாகச் சொன்னார். 


முசுகுந்தரும் “உங்களிடம் உள்ள வீரபாகு முதலியவர்களை 


எனக்குத் துணை புரிய அனுமதி தாருங்கள்” எனக் கேட்டார். 


முருகனும் அனுமதி தந்தார். 


ஆனால், வீரபாகு முதலானவர்களோ, 


“கேவலம், ஒரு மானிடனுக்குத் துணையாக 


நாங்கள் போக மாட்டோம்” என்று மறுத்தனர். 


பின்னர் முருகவேள் சாபம் பெற்று, 


வீரபாகு முதலியோர் பூமியில் மனிதராகப் பிறந்தனர். 


இதில், வீரபாகு புஷ்பகந்தி என்பவளைத் 


திருமணம் புரிந்து கொண்டார். 


அவர்களுக்கு பிறந்த சித்ரவல்லி என்னும் தன் பெண்ணை 


முசுகுந்தருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். 


தம்பதிகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார்கள்.




இந்திரன் பூஜை செய்து வந்த தியாகராஜ மூர்த்தியைத் 


திருவாரூரில் பிரதிஷ்டை செய்தவரும் இவரே.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக