சனி, நவம்பர் 19, 2011

சபரி மலை யாத்திரை



வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து 



பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். 


அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி 


தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 


28 கி.மீ தூரத்தில் உள்ளது. 


கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் 


இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.


அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. 


பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் 


தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. 


ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும்


 பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. 


கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து 


அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். 


மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும்.


 ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது


 சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். 


அச்சன்கோவிலில் நடக்கும்விழாவில் 9வதுநாளன்று 


தேரோட்டம் நடத்தப்படும். 


மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. 


இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. 


விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் 


நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள 


சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் 


என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 


இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.


படிப்பு தரும் குட்டி சாஸ்தா


கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது.


 இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். 


கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு 


உயரம் குறைந்து உள்ளது. 


செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. 


விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' 


எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. 


இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் 


குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். 


குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட 


"குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.


குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. 


கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும்ஆறும்ஓடுகிறது. 


குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன் 


சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா 


கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். 


செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.


 இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் 


மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார்.


 சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின்


 இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். 


அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை 


ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். 


மதம் கொண்ட யானையை அடக்கி 


அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால்


 "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. 


இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் 


விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்: 


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள 


சொரிமுத்தய்யனார் கோயிலில், 


தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் 


என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.


 இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. 


பொதிகை மலைக்காடுகளில், 


வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில்


தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது 


 ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் 


லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.


தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் 


எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். 


இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி


ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது .


 புஷ்கலையை   மணம் முடித்த சாஸ்தா 


தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது 

என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். 

இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக

 "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்


சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் 

திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் 

இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம்.

 பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது

.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான 

திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. 

மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் 

தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது

மகர சங்கிரம தினத்தில் 

ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே 

சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், 

அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், 

மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் 

மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். 

தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி 

சபரிபீடம் வந்தடையும்போது, 

வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு,

 திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி 

கண்கொள்ள அதிசய காட்சி.

சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் 

ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.

அப்படி இருந்தும் மகர விளக்கின் போது 

பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் 

வருவதும் அதை அணிவதும் 

அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.

ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் 

பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது 

எல்லாரிடமும் தனித்தனியாக விடைபெற்றுக் கொண்டுவந்தார். 

அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.

அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக 

என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.

குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு 

இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே 

எனக்கு குருதட்சனை என்றார். 

அவருடைய மனைவியோ ஊமையாகவும்,

 குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் 

குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.

குரு பத்தினியின் கோரிக்கைப்படி 

அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன்.

அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து 

நெகிழ்ச்சியுற்ற நிலையில் 

அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க

 மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.

எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு

 ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு 

அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. 

னினும் குருவின் ஆசி ஆசிதானே.

அது பொய்ந்து விடக் கூடாதே 

அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை (மகர விளக்கு விழாவின் போது 

தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை) 

சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் 

ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க, ரத்ன ஆபரணங்களை 

அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.



ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது

காலம் காலமாய் இருந்து வருகிறது. 

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் 

ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. 

ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா,                        

நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய்.

 அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். 

அவை சாதாரண மலையல்ல. 

வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.   

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும்.

 அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு 

வந்து விடலாம் என அருள்பாலித்தார். 

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண 

பந்தளராஜா மலைக்குச் செல்வார்.

மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். 

அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? 

என்ன கொண்டு செல்வது என யோசித்தார். 

நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.  

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். 

மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் 

இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும்.

ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? 

இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! 

எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். 

மலையை அடைய பல நாட்களாகும்.

எனவே கெட்டுப் போகாத நெய்யை 

எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. 

இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். 

அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது 

அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம்

 நாளடைவில் உருவானது. 

அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். 

வயதான அவர் மலை ஏற முடியாமல் 

ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் 

உட்கார்ந்தும் விடுவார். 

இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் 

சொல்லப்படுவதுண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக