தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல்,
அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன.
அவற்றை ”அய்யப்பனின் அறுபடை வீடுகள்” என்றே சொல்லலாம்.
சபரிமலை
கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன்
தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி,
எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.
எருமேலி
இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில்
வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.
ஆரியங்காவு
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில்,
கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.
அச்சன்கோவில்
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்
கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது.
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின்
விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.
இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில்
கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும்
ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன்.
இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர்
மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர்.
இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள்
. இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு
அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.
பந்தளம்
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன்
சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார்.
அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது.
இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்
கேரளாவில் அமைந்துள்ளது.
இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால்
'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே
கட்டப்பட்டு உள்ளது.
![]() |
அய் என்ற முதல் நிலையோடு
அப்பன் என்ற இடை நிலையும் இணைந்து
அய்யப்பன் என்றாயிற்று.
அய்யனார் அய்யப்பன், அரிகரபுத்திரன், சாத்தன், சாஸ்தா போன்ற சொற்கள்
எல்லாம் ஒருவரையே குறிக்கும் பல பெயர்களாகும்.
சாஸ்தா என்ற சொல்லானது பிராகிருத மொழிக்குரியதாகும்.
இதற்கு சாத்தன் குதிரை வாகனன் என்று
பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சொல் விளக்க அகராதி நூல்களான
திவாகர நிகண்டு, பிங்கள நிகண்டு ஆகியவைகளில்
பொருள் கூறப்பட்டுள்ளது.
அரனாகிய சிவபெருமானுக்கும், அரியாகிய மகாவிஷ்ணுவிற்கும்
தோன்றிய அவதாரப் புருஷர் அய்யப்பனார் ஸ்வாமி ஆகும்.
அய்யப்பர் பரசுராமர் பூமி என்று கூறப்படும் கேரள மாநிலத்தில்
பல அவதாரப் புருஷராய் விளங்குகின்றார்.
யோக நிலை அய்யப்பன், புலிவாகன அய்யப்பன், தவக்கோல அய்யப்பன்,
பூரணை புஷ்கலா தேவிகள் சமேதரராய் விளங்கும் அய்யப்பன் போன்ற
அவதாரங்களில் இருந்து வருகின்றார்.
குளத்துப்புழையில் பாலகனாய்
காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
பந்தளத்தில் பாலகனாய் நின்ற கோலத்துடன்
காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்.
எருமேலியில் மகிஷியை வதம் செய்யும் கோலத்தில்
காட்சியளித்துக் வருகின்றார்.
ஆரியங்காவில் பூரணை தேவி, புஷ்கலை தேவி சமேதகராய்
குடும்பக் கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்.
சபரிமலையில் சூரியன் தனுர்ராசியில் இருந்து
மகரராசிக்கு மாறும் மகர சங்கிரம வேளையில்
நெய் அபிஷேகம் செய்து கொண்டு
அருட்பாலிக்கும் சாஸ்தாவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
அச்சன்கோயிலில் பூர்ணா புஷ்கலா தேவிகளோடு
தேரோட்டம் திருவிழா காணும் அருளாளராய்
காட்சியளித்து வருகின்றார்.
இவரை பக்தர்கள் நாற்பத்தோறு தினங்கள்
கருப்பு வஸ்திரம் அணிந்து கொண்டு
இருமுடி கட்டி வந்து பதினெட்டுத் திருப்படிகள்
வழியாக ஏறி வந்து விரதமாய் இருந்தே வழிபட்டு
அருள் பெற்றுச் செல்கின்றனர்.
அய்யப்பர் திருக்கோயில்கள் சேரநாட்டுப் பூகோள
நில அமைப்பு மலைப்பகுதிகளாய் உள்ளது.
அடர்ந்த காடுகள், அகலமான பாதையற்ற நடைபாதை,
குன்றுகள் நிறைந்த மலைமீது உள்ளார்.
அங்கு போய் சேர அதிகத் தூரம் பயணம்
செய்ய வேண்டிய அவசியம் உண்டாகின்றது
. இங்கு இருமுடி கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
தேவலோக ரம்பையின் மகளான மகிஷி,
"சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே
எனக்கு மரணம் நேர வேண்டும்.
அது வும் அந்தப் பிள்ளை பன்னிரண்டாண்டு பிரம்மசரியம்
காத்தவனாகவும் இருக்க வேண்டும்' என்று பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தாள்.
எல்லா அசுரர்களையும்போல் மகிஷியும்
தேவர்களுக்குத் தொல்லை தந்தாள்.
தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர்.
விஷ்ணு மோகினியாகி சிவன்முன் வந்தார்!
மோகினியின் அழகில் சிவன் மயங்கினார்.
அப்பொழுது அவரையும் அறியாமல்
அவரிடம் பேரொளி தோன்றியது.
விஷ்ணுவிடமிருந்தும் பேரொளி தோன்றியது.
அந்தப் பேரொளிகளின் சங்கமத்தில் தோன்றியவரே தர்மசாஸ்தா!
அந்தக் குழந்தையை சிவன் பதினான்கு ஆண்டுகள்
கயிலையிலேயே வைத்திருந்தார்.
அவனுக்கு கலையனைத்தும் கற்பித்து
மகிஷியைக் கொல்ல பூவுலகத்திற்கு அனுப்பி வைத்தார் சிவன்.
சாஸ்தா மகிஷியைக் கொன்று அமுதா நதிக்கரையில் வீசினார்.
இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர்.
தர்ம சாஸ்தாவிற்கு பொன்னம்பல மேட்டில் பூசனை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சி யில் ராஜசேகர ரிஷியும் கலந்து கொண்டார்.
அவர் சாஸ்தா தனது மகனாகப் பிறக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.
அவரது ஆசை கலியுகத்தில் நிறைவேறும் என்று கூறி சாஸ்தா மறைந்தார்.
இவ்வாறாக கிருத யுகத்தில் நடந்த அவதாரமே தர்ம சாஸ்தாவாகும்.
திரேதாயுகத்தில் ராம- லட்சுமணர் சபரிபீடத்தில் தவம் புரிந்த
சபரி அன்னை யைத் தரிசித்தனர்.
அங்கு ராம- லட்சுமணர் பூஜை புரிந்தனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு
அவர்கள் அங்கு அமைத்த பர்ணசாலை அப்படியே இருந்தது.
அங்கு பரசுராமர் சாஸ்தாவின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
ரிஷி ராஜசேகர் கலியுகத்தில் தஞ்சையில் ஒரு பிராமணக் குடும்பத்தில்
விஜயன் என்ற பெயரில் பிறந்தார்.
சாஸ்தாவை மிகுந்த பக்தியுடன் வழிபட்டு வந்தார்.
ஆனாலும் அவருக்கு சாஸ்தா மகனாகப் பிறக்கும் ஆசை நிறைவேறவில்லை.
மறுபிறவியில் பந்தள ராஜாவாகப் பிறந்தார்.
இவரது ஆட்சியில் உதயணன் என்ற கொள்ளைக்காரன் இருந்தான்.
அவன் கரிமலை யில் தங்கி பல கொள்ளைகளை நடத்தினான்.
அவனிடமிருந்து நாட்டைக் காக்க ராஜா சாஸ்தாவைச் சரணடைந்தார்.
பந்தள அரண்மனையில் ஜெயந்தன் என்ற பூசாரி பணிபுரிந்தான்.
அவன் சாட்சாத் சிவ பெருமானே.
ராஜாவின் தங்கை மோகினியாக விஷ்ணுவும் வந்து சேர்ந்தார்.
மோகினியை உதயணன் கடத்திச் சென்று விட்டான்.
அவளை மீட்க ஜெயந்தன் சென்றான்.
அப்படிச் சென்றவன் நீண்ட நாட்களாகத் திரும்பவில்லை.
எனவே மோகினி இறந்திருப்பாள் என்று முடிவு செய்தார் பந்தள ராஜன்.
அவளுக்கு கர்மகாரியங்களும் செய்துவிட்டார்.
ஜெயந்தன் மோகினியை மீட்டுவரும் வழியில் ஒரு சாமியாரைச் சந்தித்தான்.
""ராஜா மோகினிக்கு திவசமே செய்துவிட்டார்.
இனி உங்களை அங்கே சேர்க்க மாட்டார்கள்.
எனவே நீங்கள் திருமணம் செய்துகொண்டு
காட்டிலேயே தங்கி விடுங்கள்'' என்று கூறினார்.
அதன்படியே ஜெயந்தனும் மோகினியும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ஐயப்பன்.
இவை கலியுகச் சம்பவங்கள்.
ஒரு நாள் பந்தள ராஜா வேட்டைக்கு வருவதை
அறிந்தனர் ஜெயந்தனும் மோகினியும்.
குழந்தையை பம்பை நதிக்கரையில்
விட்டு விடும்படி கூறினான் ஜெயந்தன்
. தன் கழுத்திலிருந்த மணியைக் குழந்தையின் கழுத்தில் கட்டி விட்டான்.
""குழந்தை அசையும்போது மணி சத்தம் கேட்கும்.
அதைக் கேட்டு பந்தள ராஜன் குழந்தையிடம் வருவான்.
அங்கு யாருமில்லை யென்று அறிந்தால்,
பந்தள ராஜவே குழந்தையைக் கொண்டு செல்வார்'' என்றான் ஜெயந்தன்.
அதன்படியே பந்தள ராஜா எடுத்துச்சென்று
வளர்த்த குழந்தைதான் மணிகண்டன் என்று பெயரிடப்பட்ட ஐயப்பன்.
பந்தள தேசத்தில் வாபர் என்ற இஸ்லாமியக் கொள்ளைக்காரன் இருந்தான்.
அவன் கொள்ளையடிக்கும் பொருட்களை மக்களுக்கே செலவிடுவான்.
உதயணன் தான் செய்த கொலைகளை
வாபர் செய்ததாகப் பழிபோட்டு வந்தான்.
எனவே வாபரை அடக்க மணிகண்டன் படையுடன் வந்தார்.
ஆனால் அங்கு வந்தபின் உண்மை அறிந்த மணிகண்டன்
வாபரை நண்பராக்கிக் கொண்டார்.
பந்தளதேச மந்திரி ராணிக்கு கெட்ட யோசனை கூறி,
அவள் பெற்ற ராஜராஜனுக்கு முடிசூட்ட சூழ்ச்சி செய்தான்.
அவன் சொல் கேட்ட ராணியும் தீராத தலைவலி என்று நடித் தாள்.
அது தீர புலிப்பால் கொண்டு வர மணி கண்டனை
அனுப்பும்படி ராஜாவிடம் கூறினாள்.
மணிகண்டன் காட்டிற்குப் புறப்பட்டார்.
அனுப்பும்படி ராஜாவிடம் கூறினாள்.
மணிகண்டன் காட்டிற்குப் புறப்பட்டார்.
காட்டுவாசிகளான கொச்சு கடுத்தசாமி, கருப்பசாமி
ஆகியோரும் அவருடன் சென்றனர்.
காட்டில் மணிகண்டன் உதயணனைக் கொன்று,
புலிப்பாலுடனும் புலிக்கூட்டத்துடனும் திரும்பினார்
இதனால் மணிகண்டனின் தெய்வீக சக்தி வெளிப்பட்டது.
மக்கள் அச்சப்பட்டதால் புலிகளாய் வந்த
தேவர்களைத் திருப்பி அனுப்பினார் ஐயப்பன்.
ராணியும் ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டாள்.
அனைவரும் ஐயப்பனுக்குச் சரணம் கூறினர்.
சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தா ஆலயத்தைப் புதுப்பித்து
சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தா ஆலயத்தைப் புதுப்பித்து
திருப்பணி செய்யுமாறு பந்தள ராஜனிடம் கூறினார் ஐயப்பன்.
கோவில் திருப்பணிக்குச் சென்றவர்கள்
வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து
தற்காத்துக் கொள்ள ஆயுதங்களுடன் சென்றனர்.
கோவிலை நெருங்கும் முன் ஓரிடத்தில் ஆயுதங்களைக் குவித்து வைத்தனர்.
அவ்விடமே இன்றைய "சரங்குத்தி' என்ற இடமாகும்.
கோவில் புதுப்பிக்கப்பட்டதும் ஐயப்பன்
அங்கிருந்த தர்மசாஸ்தாவுக்குள் ஐக்கியமாகி விட்டார்.
ஐயப்பனுடன் வந்த அனைவரும் வருந்தி நின்றனர்.
ஐயப்பன் அவர்களுக்காகத் தரிசனம் தந்தார்.
அப்பொழுது, ""நான் தர்மசாஸ்தாவின் மறு அவதாரமே'' என்று கூறினார் ஐயப்பன்.
அப்பொழுது, ""நான் தர்மசாஸ்தாவின் மறு அவதாரமே'' என்று கூறினார் ஐயப்பன்.
வாபர் எரிமேலியில் தங்கி தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கும்படி கூறினார்.
கடுத்தசாமியும் கருப்பசாமியும் சந்நிதிக் காவலர்களாய்
இருக்க வேண்டுமென்றும் கூறினார்.
தனது முடிசூட்டு விழாவிற்காகச் செய்யப்பட்ட ஆபரணங்கள்
தனது முடிசூட்டு விழாவிற்காகச் செய்யப்பட்ட ஆபரணங்கள்
பந்தள அரண்மனையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
தை மாத மகர சங்கராந்தியன்று ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டு
தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மணிகண்டனுக்கு குருவாயிருந்தவர்
மணிகண்டனுக்கு குருவாயிருந்தவர்
தன் மகளை ஐயப்பன் மணந்துகொள்ள வேண்டி னார்.
அதனை மறுத்த ஐயப்பன், தன் சந்நிதிக்கு அருகிலே
"மாளிகைப் புரத்தம்மன்' என்ற பெயரில் கோவில் கொள்ளுமாறு அனுமதித்தார்.
அவளே இன்று மக்கள் வணங்கும் "மஞ்ச மாதா'.
ஒரே தெய்வத்தின் இருவேறு அவதாரங்களே சாஸ்தாவும் ஐயப்பனும்.
ஒரே தெய்வத்தின் இருவேறு அவதாரங்களே சாஸ்தாவும் ஐயப்பனும்.
சாஸ்தா முந்தைய அவதாரம்; ஐயப்பன் பிந்தைய அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக