செவ்வாய், மே 03, 2011

சிவன்





சிவன்  மும்மூர்த்திகளில் ஒருவர்.

முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர்

என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது

சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை,


சிவனின் ஐந்து முகங்கள்

சத்யோ ஜாதம்

 வாமதேவம்

அகோரம் 

 தற்புருடம்                                                  

-ஈசானம் -- இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப் பொருளினைக் கேட்டு

அறிந்தனர் அறுபத்தாறு     முனிவர்கள்
.


  

 

சிவனது உருவத் திருமேனி
  1. சந்திரசேகரர்
  2.  உமாமகேஸ்வரர்
  3. ரிஷபாரூடர்
  4.  நடராஜர்  
  5.  கல்யாண சுந்தரர்
  6.  பிச்சாடனர்
  7.  காமதகனார்
  8.  காலசம்ஹார மூர்த்தி
  9. திரிபுராந்தகர்
  10. சலந்தரர்.
  11. கஜாசுர சம்ஹாரர்
  12. தக்க்ஷ யக்ஞவதர்.
  13. ஹரியர்த்தர்.
  14.  அர்த்தனாரீசுவரர்
  15. கிராதகர்.
  16.  கங்காளர்
  17. சண்டேச அநுக்கிரஹர்
  18. நீலகணடர்.
  19. சக்ரப்ரதர்.
  20. விக்னப்ரசாதர்.
  21. சோமாஸ்கந்தர்.
  22. ஏகபாதர்.
  23. சுகாசனர்.
  24. தட்சிணா மூர்த்தி  
  25. லிங்கோத்பவர்.
  26. ரிஷபாந்திகர்.
  27. அகோரவீரபத்ரர்.
  28. அகோராஸ்ரமூர்த்தி.
  29. சக்ரதானஸ்வரூபர்.
  30. சிவலிங்கம்.
  31. முகலிங்கேஸ்வரர்.
  32. சர்வஸம்ஹாரர்
  33. ஏகபாத திரிமூர்த்தி.
  34. திரிபாதமூர்த்தி
  35. ஜ்வரஹரேஸ்வரர்.
  36. ஊர்த்துவதாண்டவர்
  37. வராக் ஸம்காரி .
  38.   கூர்ம ஸம்ஹாரி
  39.  மச்சஸம்ஹாரி
  40. சரபேசர்
  41.  பைரவர்
  42.  சார்த்துலஹரி
  43.  லகுளீசர்
  44. சதாசிவர்
  45.  உமேசர்
  46.  புஜங்கலளிதர்
  47.  புஜங்கத்ராசர்
  48.  கங்காதரர்
  49.  கங்காவிசர்ஜனர்
  50.  யக்ஞேஸ்வரர்  
  51.  உக்ரர்
  52.  ஆபதோத்தாரணார்
  53.  ஷேத்ரபாலர்
  54.  கஜாந்திகர்
  55. அச்வாரூடர்
  56.  கௌரீவரப்ரதர்
  57. கௌரீலீலா சமன்விதர்
  58.  கருடாந்திகர்
  59. பிரம்ம சிரச்சேதர்
  60. ரக்தபிக்க்ஷா ப்ரதானர்
  61. சிஷ்யபாலர்
  62.  ஹரி விரஞ்சதாரணர் 
  63.  சந்தியா நிருத்தர்
சிவனது தனித்துவ அடையாளங்கள்

நெற்றிக்கண் காணப்படல்.

கழுத்து நிலநிறமாக காணப்படல்.

சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.

நீண்ட சுருண்ட சடாமுடி

தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.

உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.

புலித்தோலினை  ஆடையாக அணித்திருத்தல்.

கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.

கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.

நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.


சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்

சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்]  

மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் ( ஆந்திரா)

மகா காளேசுவரர்-உஜ்ஜயினி ( மத்தியப் பிரதேசம் )

ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப் பிரதேசம்)

வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம் )

பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)

இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு )

நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)

விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)

கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்

திருவண்ணாமலை (தமிழ்நாடு ) அருணாச்சலமே மூல சிவதலம்


பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன

ஐம்பூதங்கள்.

இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன.

இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது

பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி

உள்ளனர்.

 அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள்

வடமொழிப்பெயர்)

  1. மண் (பிருத்திவித்தலம்) -காஞ்சி புரம் ,திருவாரூர்
  2. நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கால், திருசிராப்பள்ளி
  3. தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
  4. வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
  5. வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

  1. தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
  2. திருவாரூர் -அசபா தாண்டவம்.
  3. மதுரை -ஞானசுந்தர தாண்டவம்.
  4. அவினாசி -ஊர்த்தவ தாண்டவம்.
  5. திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.
ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

  1. தில்லை(சிதம்பரம் )-பொன் மன்றம் (கனக சபை).
  2. திருவாலங்காடு  -மணி மன்றம் (இரத்தின சபை).
  3. மதுரை -வெள்ளி மன்றம் (இராஜ சபை).
  4. திருநெல்வேலி -செப்பு மன்றம் (தாமிர சபை).
  5. திருக்குற்றாலம் -ஓவிய மன்றம் (சித்திர சபை
சத்த விடங்க சிவத்தலங்கள்
  1.  திருவாரூர்- வீதிவிடங்கர் (அசபா நடனம் ).
  2. திருநள்ளாறு - நகரவிடங்கர் (உன்மத்த நடனம் ).
  3. திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்
  4. திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம் ).
  5. திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம் ).
  6. திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம் திருமறைக்காடு என்கிற
  7. வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

  1. திருவாரூர்- பிறக்க முக்தி தருவது
  2. சிதம்பரம் -தரிசிக்க முக்தி தருவது
  3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
  4. காசி -இறக்க முக்தி தருவது

தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும்

தூத்துக்குடி  மாவட்டத்திலும்

தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என

அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன


  1.  பாபநாசம்
  2.  சேரன்மாதேவி
  3.  கோடக நல்லூர்
  4.  குன்னத்தூர் (திருநெல்வேலி)
  5.  முறப்பநாடு
  6.  திருவைகுண்டம்
  7.  தென்திருப்பேரை
  8.  ராசபதி
  9.  சேர்ந்த பூமங்கலம்

அட்டவீரட்டானக் கோயில்


சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு

கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன.

அவை
  1. திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
  2. திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
  3. திருவதிகை - திரிபுரம் எரித்தது
  4. திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது
  5. வழுவூர் - யானையை உரித்தது
  6. திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது
  7. திருக்குறுக்கை - காமனை எரித்தது.
  8. திருக்கடவூர் - எமனை உதைத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக