செவ்வாய், மே 17, 2011

கேது ஸ்தலம்

 

கேது ஸ்தலம்


அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,    கீழ்ப்பெரும்பள்ளம் -

தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

மயிலாடுதுறை அல்லது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும்

சாலையில் தர்மகுளம் பேருந்துநிலையத்தில் இருந்து 2கி.மீ.,தொலைவில்

இக்கோயில் உள்ளது.

தர்மகுளம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து செல்லலாம்

சிற்றுந்து வசதியும் உண்டு. மயிலடுதுறையில் இருந்து வாணகிரி செல்லும்

நகரப்பேருந்தில் சென்றால் கோயில் அருகிலேயே இறங்கலாம்




புராணம் கூறுவது-

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி

என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர்.

தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது.

ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது.

 பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார்.

தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி

வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன்

தியாக உணர்வை பாராட்டினார்.

அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி

கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது.

அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்'

என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.

 

கேதுபகவான்

இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார்.

பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு

கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

கிரகத்தன்மை-------கேது

1. நிறம்------ சிவப்பு

2. குணம்-----  குரூரம்

3. மலர்-----  செவ்வல்லி

4. ரத்தினம்-----  வைடூரியம்

5. சமித்து-----  தர்ப்பை

6. தேசம்----- அந்தர்வேதி

7. தேவதை----- சித்திரகுப்தன், விநாயகர்

8. ப்ரத்தியதி தேவதை ----- நான்முகன்

9. திசை-----  வடமேற்கு

10. வடிவம்-----  கொடி வடிவம்

11. வாகனம்-----  சிங்கம்

12. தானியம் -----  கொள்ளு

13. உலோகம் ----- துருக்கல்

14. காலம் ----- எமகண்டம்

15. கிழமை-----  செவ்வாய்க்கிழமை

16. பிணி ----- பித்தம்

17. சுவை ----- புளிப்பு

18. நட்பு கிரகங்கள் ----- சனி , சுக்கிரன்

19. பகை கிரகங்கள்-----  சூரியன், சந்திரன், செவ்வாய்
20. சம கிரகங்கள்----- புதன், குரு

21 காரகம் ----- மாதாமகி(பாட்டி)

22. தேக உறுப்பு ----- உள்ளங்கால்

23. நட்சத்திரங்கள்-----  மகம், மூலம் சதயம்

24. தசை வருடம்----- 7 ஆண்டுகள்

25. மனைவி ----- சித்ரலேகா

26. உப கிரகம்-----  தூமகேது

27. உருவம் ----- ஐந்து பாம்புத் தலை, அசுர உடல்

கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகிய

. நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் கேது திசை

தொடங்கும்.

கேதுவிற்கு கதிர்ப்பகை , சிகி, செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உண்ரு.

கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேன்டும்.

இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

 தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார்.

படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம்

வேண்டிக்கொள்ளலாம்.

ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின்

கேதுவையும் வழிபட வேண்டும்.

கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து,

கொள்ளு சாத நைவேத்யம் படைத்து,

ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.

இரட்டை சூரியன்:

கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை.

 கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர்

சிலையும் உள்ளன.

உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும்,

தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு

சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.

 

ராகுகாலம் எமகண்டம் வழிபாடு

இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில்

விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.

அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,

கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும்,

பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்

வழிபடுகிறார்கள்.

கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும்.

வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது.

 இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள்.

இதற்கு ரூ.75 கட்டணம்.

சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது

விசேஷம்.

அபிஷேகத்திற்கு ரூ.450,

தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக

வசூலிக்கின்றனர்

மேலும் சில பரிகாரத் தலங்கள்-

கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி

லுக்குச் சென்று வழிபட வேண்டும்.

அன்று அவருடைய (கேதுவினுடைய)நட்சத்திரங்களான அஸ்வினி, மகம்,

மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்நாட்களில் ஒன்றாக இருந்தால்

நல்லது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்


காளஹஸ்திஎன்கின்ற திருத்தலமும்,

ராமேஸ்வரமும்தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட

வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று

வழிபடுவது அதி முக்கியம்.



கேது ஸ்தோத்திரம்

பலாச புஷப ஸங்காசம்

தாரகா கிரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராத் மகம்

கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்.


கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ: கேது ப்ரசோதயாத்


கேது துதி

பொன்னையன் உரத்திற் கொண்டோன் புலவர் தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற

பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்

என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக