16.5.11 முதல் 15.11.12 வரை:
கர வருடம், வைகாசி மாதம் 2-ஆம் தேதி (16-5-2011) திங்கட்கிழமை, சூரிய
உதயாதி நாழிகை 9- 34 விநாடிக்கு, காலை 9.45 மணி அளவில் தனுசு
ராசியில் இருக்கும் ராகு விருச்சிக ராசிக்கும்;
அதேநாள் அதே நேரத்தில் மிதுன ராசியில் இருக்கும்
கேது பகவான் ரிஷப ராசிக்கும்;பெயர்ச்சியாகின்றனர்.
இவர்கள் இந்த ராசிகளில் ஒன்றரை ஆண்டு சஞ்சரிப்பர்.
ராகு, கேது பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
ராகு, கேது கிரகங்கள் மிக வலிமையான கிரகங்கள்,
வேதியியல்படி பார்த்தால் கிரியா ஊக்கி என்று சொல்வார்கள்.
சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் அவைகள் வராது.
கிரியா ஊக்கிகள் போல்தான் ராகு, கேது.
எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதன் குணத்தைப் பிரதிபலிக்கும்.
நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலன்களும், கெட்ட கிரகங்களுடன்
சேர்ந்தால் கெட்ட பலன்களும் அதாவது மிகப் பயங்கரமான
விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
தற்கொலை செய்து கொள்வது எல்லாம் பார்த்தால் இந்த கேது
புக்தியில்தான்.
அறிவியில் பூர்வமாகப் பார்த்தால் ஆஸ்ட்ரைட்கள் என்று இவைகளைக்
கூறலாம்,
மற்ற கிரகங்களுடன் சுற்றுப் பாதையில் ஏற்படக் கூடிய துகள்களின்
தொகுப்புதான் ராகு, கேது என்றழைக்கப்படும் தூசு மண்டலம்.
குரு என்றால் மின்னணுக் கதிர்களால் ஆனது.
காந்தப் புலன் அதிகம்.
காந்தப் புலன் கொண்ட கோள் சுழலும்போது அதில் இருந்து துகள்கள்
வெளிவரும்.
அவை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கிரகமாக உருவாகிறது.
சூரியனுக்கு சுற்றுப்பாதை உண்டு.
ராகு, கேதுவிற்கு சுற்றுப் பாதை இல்லை.
அதனால்தான் இவற்றை நிழல் கிரகம் என்று சொல்கிறார்கள்.
ராகு, கேது எதிர்திசையில் பயணிக்கும் என்பது?
ராகு, கேது கிரகங்களுக்கென்று தனியாக ஒரு பாதை இல்லை.
இவை ஏதோ ஒரு பாதையில் சுழலும், ஒரு முறை எதிர்படும் இந்த
கிரகங்கள், ஒரு சமயம் ஒரே பாதையிலும் செல்லும்.
இதனைத்தான் எதிர்திசையில் பயணிக்கின்றன என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு சூறாவளி வரும்போது காற்றில் ஏற்படும் தூசுகள் அந்த
சூறாவளியில் சூழல ஆரம்பிக்கும்.
அப்போது பூமியில் ஒரு பகுதி தூசும்,
வானத்தில் ஒரு பகுதி தூசும் சுழன்று கொண்டிருக்கும்.
இதே தான் ராகு, கேது வாகும்.
கிரகணம் -இவைகள் பாம்பாக சித்தரிக்கப்பட்டு சூரியனை விழுங்கி
விட்டது என்று சொல்லப்படுகிறது.
அதாவது ஆதி காலத்தில் கிரகங்கள் தோன்றும்போது பாம்பு வடிவில்
தோன்றியிருக்கின்றன.
கிரகணம் என்பது மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது
பூமியின் நிழல் சந்திரன் மீதோ அல்லது சூரியன் மீதோ விழும்போது
கிரகணம் ஏற்படுகிறது.
வால் நட்சத்திரங்கள் உருவாவதெல்லாமும் தூசுப் படலங்களின்
தொகுப்புதான்.
கார்பன், கார்பன் மோனாக்சைடு போன்றவை இருக்கும்.
அதன் மீது ஒளிக் கற்றைகள் படும்போது அவை மின்னும்.
மின்னுதல் என்பது நிரந்தரமான மின்னுதல் அல்ல.
தோன்றி மறையக் கூடியதுதான்.
எனவே வால் நட்சத்திரங்களும் ராகு, கேது பிரிவைச் சேர்ந்தவைதான்.
குருவிற்கு 19, சனிக்கு 23 துணைக்கோள்கள்.
ராகு, கேதுவிற்கு துணைக் கோள்களாக இந்த வால் நட்சத்திரங்களை
வைத்துக் கொள்ளலாம்.
ராகுவுக்கும், கேதுவுக்கும் இருவேறு குணங்கள்.
ராகு எதுவாக இருந்தாலும் அனுபவிக்கணும்.
இந்த காலத்தில்தான் மது பானம் அருந்துதல், பிறர் மனை நோக்குதல்
போன்றவை இருக்கும்.
வேலை செய்த கம்பெனியையே வாங்குவதும் இந்த காலத்தில்தான்.
நல்ல இடத்தில் எல்லாம் ராகு இருந்துவிட்டால் போதும் ராஜ
யோகம்தான்.
வலிமையான ராகு நல்ல கிரகமாக அமைந்துவிட்டால் சுகபோக
வாழ்க்கை, உயர்தர வாகனம் கிடைக்கும்.
கேது என்று பார்த்தால் அது பெரும்பாலும் கெடுதல் தான் செய்யும்.
குருவுடன், சுக்கிரனுடன், சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டும்
தன்னுடைய தசையில் கெடுதலைக் குறைத்து நல்ல பலன்களை
அளிக்கும்.
பாம்பென்றால் படையும் நடுங்கும். அரவம் ஆடேல் என அவ்வையாரும்
கூறியுள்ளார்.
அதனால்தான் ராகு, கேதுவின் நிழலால் ஏற்படும் சூரிய கிரகணம், சந்திர
கிரகணம் என்றால் அனைவரும் அஞ்சுகின்றனர்.
குரு, சுக்கிரன், சனி உள்ளிட்ட பல பெரிய கோள்களை எல்லாம் ஆட்டிப்
படைப்பவர்கள் இந்த ராகுவும், கேதுவும். வலியவனை எளியவனாக்குவதும்,
நல்லவனை, பொல்லாதவனாக்குவதும், தரமில்லாதவர்களை திறமை
உள்ளவர்களாக்குவதும் இவர்கள் வேலைதான்.
ஷேர், ரேஸ், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது
ராகுவின் வேலையென்றால், பணத்தை பறித்து பரதேசியாக்கி
மெய்ஞானத்தை தருவது, கேதுவின் செயலாகும்.
காலப் பிரகாசிகை, சுக்கிர நீதி போன்ற பழம் பெரும் நூல்கள் ராகுவும்,
கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் என
கூறுகின்றன
ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது
இடம்பெறும்.
மற்ற 7 கிரகங்கள் போல ராகுக்கும், கேதுக்கும் சொந்த வீடு, உச்ச வீடு,
நீச்ச வீடு போன்றவை கிடையாது.
ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை
தருவார்கள்.
மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2
கிரகங்களுக்கும் உண்டு.
பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,
கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,
யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு
செய்வது மிக அவசியம்.
ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது
சேர்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ்,
அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும்
அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கங்கள் இருந்தும் குவியும்.
பரிகார ஸ்தலங்கள்:
ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய
தெய்வங்களை வழிபடலாம்.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகுக்கு கூறிய
ஸ்தலமாகும்.
சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள்
தினமும் நடத்தப்படுகின்றன.
விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.
சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு
'
காலத்திலும்,பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை
புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது மிகவும் நல்லது.
புற்று இருக்கும் அனைத்து அம்மன் மற்றும் காளி கோயில்களிலும் ராகு
பரிகார பூஜைகள் செய்யலாம்.
கேது தலம்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்,கீழ்ப்பெரும்பள்ளம்
தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
புராணம் கூறுவது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது.
அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது.
இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார்
தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச்
செய்தார்.
ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த
மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வந்தது.
அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை
வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம்
என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை
மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி
தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று
தெரிந்துகொண்டார்கள்.
இது மிகப் பெரிய முயற்சி.
மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள்.
மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத்
தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக்
கடைந்தார்கள்.
அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக
இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக
இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை
நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள்.
அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம்
வெளிப்பட்டது.
அதை சர்வேஸ்வரன், அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும்
பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார்.
அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக,
கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி
தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில்
விஷம் தங்கிவிட்டது.
அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது.
அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு.
நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று
ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான
காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும்
ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும்
தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள்.
கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார்.
அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று
அசுரர்கள் தகராறு செய்தார்கள்.
மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி
அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும்
பின் வரிசையில் அசுரர்களயும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால்
பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார்.
தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை
மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு
அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து
அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான்.
இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல;
அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த
மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை
அறுத்துவிட்டார்.
அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை.
தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன்.
விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான
இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான்
இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில்
வந்து விழுந்தது.
அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன்
மனைவியுடன் சென்று கொண்டிருந்தான்.
இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன்
அரண்மனைக்குச் சென்று வளர்த்தான்.
அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது.
தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத்
தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து
ராகு பகவான்
ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று
போற்றுகிறோம்.
இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற
பகுதியில் விழுந்தது.
அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில்
விழுந்தது.
அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி
வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார்.
மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து
தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது
பகவான் என்று பெயர் பெற்றார்.
மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன்,
சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி
அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர்.
இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக்
கூறுவதற்கில்லை.
வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி
வீடுகளும் அமைக்கப்படவில்லை.
சொந்த வீடுகளில்லா கிரகங்கள்!
கரும்பாம்பு என்கிற ஸ்ரீராகு பகவானும்,
செம்பாம்பு என்கிற ஸ்ரீகேது பகவானும் 'சாயா (நிழல்) கிரகங்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
அவர்களுக்கு மற்ற 7 கிரகங்களுக்கு இருப்பது போல் சொந்த வீடுகள்
கிடையாது.
அதே நேரம் அவர்கள் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கின்றார்களோ அந்த
வீட்டையே தங்கள் வீடாக (ராசி) எண்ணிப் பலன் தருவார்கள்.
எந்தக் கிரகத்தால் பார்க்கப்படுகிறார்களோ, எந்தக் கிரகத்துடன் சேர்க்கை
பெற்றிருக்கிறார்களோ, எந்தக் கிரக நட்சத்திர சாரத்தில்
அமர்ந்திருக்கிறார்களோ அவர்களின் பலத்தையே கிரகித்துக் கொண்டு
பலன் தருவார்கள்.
''சனிவத் ராகு, குஜவத் கேது""
ஸ்ரீராகு பகவான் சனி பகவானின் குணத்தையும்,
ஸ்ரீகேது பகவான் ஸ்ரீகுஜன் (செவ்வாய்) பகவானின் குணத்தையும்
பிரதிபலிக்கிறார்கள்.
ஜாதகத்தில் ஸ்ரீசனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானின் சுப அசுப
பலன்களை ஸ்ரீராகு பகவானும் ஸ்ரீகேது பகவானும் அளிக்கவல்லவர்கள்
என்பதை மேற்குறிப்பிட்ட வடமொழி வழக்கு உணர்த்துகிறது.
அனைத்து நாட்களிலும் ஸ்ரீராகு-ஸ்ரீகேது பகவான்கள்
நாட்கள் ---- கிரகங்கள்
ஞாயிறு --- சூரியன்
திங்கள் --- சந்திரன்
செவ்வாய் --- செவ்வாய்
புதன் ------- புதன்
வியாழன் ---- குரு
வெள்ளி ----- சுக்கிரன்
சனி ----------- சனி
ஆகிய 7 நாட்கள் முறையே 7 கிரகங்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது
ராகு-கேது பகவான்கள் பரமேஸ்வரனின் அனுக்கிரகத்தால் நவக்கிரக
அந்தஸ்தை அடைந்தன.
எனவே அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு தினத்தில் இருந்தும் ஒன்றரை
மணிகளாக இரண்டு பாகங்கள் பிரிக்கப்பட்டு,
ராகுவுக்கு ராகு காலமும்.
கேதுவுக்கு எம கண்டமும் வழங்கப்பட்டது.
அதனால் அனைத்து நவக்கிரகங்களுக்கும் 21 மணிகள் என்று ஆயிற்று.
இந்த ராகு காலம் மற்றும் எம கண்ட காலங்களில் சுபங்கள் விலக்கப்பட
வேண்டும்.
ஸ்ரீராகு பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்!
ஒருவருக்கு வைராக்கியம் உண்டாகவும், ஒருவர் நினைத்ததை முடிக்கவும்
ஸ்ரீராகு பகவானே காரணம். உலகம் முழுவதும் சுற்றுவதற்கும், பல
மொழிகளை அறிவற்கும், அரசாங்கத்தில் உயர் பதவியை வகிப்பதற்கும்,
ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரும் பணம் சேர்ப்பதற்கும் இவரே
காரணம் ஆவார்.
ஸ்ரீராகு பகவானை யோககாரகன் மற்றும் பயணகாரகன் என்பார்கள்.
அதே சமயம், கடவுள் நம்பிக்கைக் குறைவு, மத விஷயங்களில்
பற்றில்லாமை, வக்கிர குணங்கள், பாப கர்மாவின் வெளிப்பாடு.
மனோவியாதி போன்றவைகளையும் அசுபத் தன்மை பெற்று அமர்ந்துள்ள
ராகு பகவான் கொடுப்பார்.
ஸ்ரீராகு பகவான், தந்தை வழி பாட்டனாரைக் குறிப்பார்.
ஸ்ரீகேது பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்
ஒருவருக்கு பாபவிமோசனம் கிடைக்கவும்.
மோட்சம் அதாவது வீடு பேறு உண்டாகவும் ஸ்ரீகேது பகவானே காரணம்,
வேத வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் அவர் அறிவை வளர்ப்பார்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் விவேகமான தீர்ப்பை வழங்கும் அறிவைக்
கொடுப்பார்.
அதேநேரம் ராசியில் ஸ்ரீகேது பகவானின் பலம் குறைந்தவர்கள் அடிக்கடி
விபத்துகளைச் சந்திக்க நேரிடும்.
தீயோர்களின் சகவாசத்தையும் உண்டாக்குவார்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குவார்.
மேலும் உடலில் தோன்றும் புண், தீக்காயம் இவைகளுக்கும் கேது
பகவானே காரணமாவார்.
இவர் தாய் வழி பாட்டனாரைக் குறிப்பார்.
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார்
கோவிலும் ஆகும்.
ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ் வரம், பரமக்குடி அருகில்
நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று
பல தலங்கள் உண்டு.
கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி,
திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், திருவானைக் காவல்,
பழூர் போன்ற தலங்கள் உண்டு.
ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளியையும் துர்க்கையையும்;
கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும்
ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக