செவ்வாய், மே 17, 2011

ராகு ஸ்தலம்-






ராகு ஸ்தலம்-

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம்

தஞ்சாவூர் மாவட்டம்.


கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம்

இருக்கிறது.

கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன்

கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.

இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.

நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர்

பெற்றது

ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர்,

நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்


காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம்,


 நண்பகலில் திருநாகேச்சுரம்,

மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம்

என்பர்


புராண கூறுவது

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர்.

 இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம்

வேண்டி கடும் தவம் புரிந்தாள்.

பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி

கொடுத்து உமையொருவரானார்.

அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும்

என வேண்டினாள்.

அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி

காட்சியளிக்கின்றனர்.

மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 அம்மன் பிறையணி வானுதலாள்.



சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின்

வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு

தீண்டியது.

இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார்.

 தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார்.

சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை

கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து

வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர்.

அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான்.

 சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

இவரே இத்தலத்தில் அருளுகிறார்.

நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர்

பெற்றார்


  1. நிறம்----- கருப்பு
2. குணம்----- குரூரம்

3. மலர்----- மந்தாரை

4. ரத்தினம்----- கோமேதகம்
5. சமித்து----- அறுகு

6. தேசம்----- பர்ப்பரா தேசம்

7. தேவதை----- பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,

8. ப்ரத்தியதி தேவதை----- ஸர்பம்
9. திசை----- தென்மேற்கு

10. வடிவம்----- முச்சில் (முறம்)

11. வாகனம்----- ஆடு
12. தானியம்----- உளுந்து
13. உலோகம்---- கருங்கல்
14. காலம்----- ராகுகாலம்
15. கிழமை----- சனிக்கிழமை
16. பிணி----- பித்தம்

17. சுவை----- புளிப்பு

18. நட்பு கிரகங்கள்----- சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் ----- சூரியன், சந்திரன்,  செவ்வாய்
20. சம கிரகங்கள்----- புதன், குரு

21 காரகம்----- பிதாமகன் (பாட்டனார்)

22. தேக உறுப்பு----- முழங்கால்

23. நட்சத்திரங்கள்----- திருவாதிரை, சுவாதி, அசுவதி

24. தசை வருடம்----- 18 ஆண்டுகள்
25. மனைவி----- சிம்ஹிகை

26. உப கிரகம்----- வியதீபாதன்

27. உருவம்----- அசுரத்தலை, பாம்பு உடல்

 28.  வஸ்திரம் - நீலம்

 29.  நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம்

 30.   நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம்

  31. பகைவீடு - கடகம், சிம்மம்

 ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்

இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி

ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது.

இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான

சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல

நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.

 நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில்

ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார்.

தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி

விட்டார்.

பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.

 இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து

பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம்.

பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார்.

ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.

 ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம்



ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க

இறைவனை பிரார்த்திக்கலாம்.

 இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.

நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்

கொள்கிறார்கள்.

 இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது


ராகு ஸ்தோத்திரம்


அர்த்தகாயம் மகாவீர்யம்
.
 .சந்த்ராதித்ய விமர்தனம்

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம் யஹம்.




ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ: ராகு ப்ரசோதயாத்.



ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப்

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக