
ஆண்டாளின் கரத்தில் அமர்ந்துள்ள கிளி 'சுகப்பிரம்மர்' ஆவார். ரங்க நாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில் தூது அனுப்பினாளாம் ஆண்டாள். தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றாராம். அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி.
இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள்.
இந்தக் கிளி தினமும் ஸ்ரீவில்லிப்புத்தூர்கோவிலில் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு- மாதுளம் பூ;
மரவல்லி இலை- கிளியின் உடல்;
இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;
கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்;
கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி.
இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக