இறைவர் திருப்பெயர் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.
இறைவியார் திருப்பெயர் : அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை.
தல மரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : விசுவாமித்திரர், பதஞ்சலி,
வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் ஆகியோர்.
- பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்
- இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
- வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து
- இறைவன் அருள் செய்த பதி இதுவே.
அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று.
பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது .
நினைத்தாலே முக்தி தரும் தலம்,
அடி முடி காணா அண்ணாமலை,
பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலம்,
ஆறு ஆதாரத் தலங்களில் மணிபூராகத் தலம்,
இந்தியாவின் 2-வது பெரிய ராஜகோபுரம்,
பிரம்மா, விஷ்ணுவின் அகந்தையை அடக்க
சிவன் ஜோதி ரூபம் எடுத்த தலம்,
பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனை
வேண்டித் தவமிருந்த தலம்,
அம்மனுக்கு இடபாகத்தை அளித்து
அர்த்தநாரீஸ்வரராக சிவன் காட்சியளித்த தலம்,
அருணகிரிநாதர் முக்தியடைந்த தலம்,
திருப்புகழின் முதல் பாடல் பாடப்பட்ட தலம்
என்று நீளமான பெருமைப் பட்டியலைக் கொண்டு விளங்குகிறது.
பிரம்மாவும், விஷ்ணுவும்
சிவனின் அடி, முடியைக் காணச் செல்லும் போது
அவர் ஜோதி ரூபமாகக் காட்சியளிக்கிறார்.
அப்போது திருவண்ணாமலையில்
லிங்கோத்பவர் உருவானது.
இதனால் சைவத்தின் முதல் தலமாக
திருவண்ணாமலை போற்றப்படுகிறது.
திருவண்ணாமலையை ஆட்சி செய்த
வள்ளால மகாராஜா குழந்தைப் பேறு இல்லாமல்
இறைவனை நோக்கித் தவமிருந்ததால்
இறைவனே அவருக்குக் குழந்தையாகப் பிறந்ததாக
தல வரலாறு கூறுகிறது.
இதனால் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள்,
வேண்டுதல் நிறைவேறிய பிறகு
கார்த்திகை தேர்த் திருவிழா அன்றும்,
5-ம் திருவிழா அன்றும்,
திருவூடல் திருவிழா அன்றும்
கரும்பில் தொட்டில் செய்து,
அத்தொட்டிலில் குழந்தையை வைத்து
கோயிலை வலம் வந்து
பிராத்தனையை நிறைவேற்றுகின்றனர்.
வள்ளால மகாராஜா இறந்த பிறகு
இறைவனே ஈமக்கிரியைகளைச் செய்ததால்
இக்கோயிலில் மோட்ச தீபமிடுவதும்
சிறப்பு வாய்ந்ததாகும்.
அதே போல் இக்கோயிலில் ஸ்ரீ ரமண மகரிஷி
தவமிருந்த பாதாள லிங்கமும் சிறப்பு வாய்ந்தது.
இங்கு இருக்கும் சிவபெருமான்
அருணாச்சலேஸ்வரர் அல்லது
அண்ணாமலையார் என்றும்,
துணைவியார் உண்ணாமலை என்றும்
அழைக்கப்படுகின்றனர்.
மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம்
என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம்
என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும்,
சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும்,
கிளி கோபுரத்தை [கி.பி 1053 ] ராஜேந்திர சோழனும்,
பிரம்ம தீர்த்தத்தை [கி.பி 1230] வேணுதாயனும்,
வள்ளால கோபுரத்தை [கி.பி 1320] வள்ளால மஹாராஜாவும்
கட்டியுள்ளனர்.
இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன்,
கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி,
விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும்
காரணமாக இருந்துள்ளனர்.
சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட
பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.
பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில்
பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு
1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில்
கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும்,
ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.
கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும்,
கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன.
கோவிலின் பிரதான கோபுரமான
கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும்
11 அடுக்குகளையும் கொண்டது.
கிழக்குக் கோபுரம் தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம்,
மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம்,
வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம்
என்றழைக்கப்படுகிறது.
அருணாசலப் பெருமான்,
தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி
நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.
கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
என இரண்டு குளங்களையும் காணலாம்.
![]() |
கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை
இங்கு தரிசிக்கவேண்டும்.
இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள
உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.
அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர்,
ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி,
பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர்,
துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும்
இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம்.
பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.
கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர்,
ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம்,
காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி,
கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும்,
சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்,
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும்
மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.
கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம்,
சக்தி விலாசம், கருணை இல்லம்,
பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம்,
வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம்,
யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார்
ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
ஐந்தாம் பிரகாரம்:
கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம்,
ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி,
அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம்
ஆகியவற்றை காணலாம்.
ஆறாம் பிரகாரம்:
கோவிலின் உள்ளெ நுழைவதற்கான
நான்கு கோபுரங்கள் உள்ளன.
கிரிவலம்:
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது.
மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும்,
சுற்றும் வழியில் இரண்டாகவும்,
மேற்கு திசையில் மூன்றாகவும்,
முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது.
மலையை சுற்றி வருவதால்
நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி
மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது
பட்டு பிரதிபலிக்கும்.
அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள்
நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும்.
எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு.
14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில்
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம்,
நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம்,
குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்
ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன.
மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில்
கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில்
ஒரு கோவிலையும் காணலாம்.
இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக