செவ்வாய், ஜனவரி 04, 2011

திருவெம்பாவை

மணிக்கவாசகப் பெருமானால் பாடப்பட்ட திருவெம்பாவைப் பாடல்கள், தோழியர் ஒருவரை ஒருவர் துயில் நீங்கி எழுமாறு அழைக்கும் பாடல்கள் ஆகும். மார்கழித் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவைக் காலமாகும்.இக்காலத்தில் அதிகாலையிலே எல்லாக் கோயில்களிலும் அபிஷேகம், பூஜை என்பன நடைபெறுகின்றன. அதன் பின்னர் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்பட்டு ஒவ்வொரு பாடல் முடிவிலும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து கற்பூர ஆராத்தி காண்பிக்கப்படுகின்றது.திருவெம்பாவையின் கடைசித் தினம் திருவாதிரையாகும்.
திருவெம்பாவை என்பது திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவாசகத்தில் நடுநாயகமாகத் திகழும் ஒரு பகுதியாகும்.ஒவ்வொரு பாடலும் ஏலோரெம்பாவாய் என முடியும் இருபது பாடல்கள் கொண்டது. சைவ மரபினர் அனைவர் வீடுகளிலும் ஒவ்வோர் ஆண்டிலும் மார்கழி வைகறைப் பொழுதில் பக்தியுடன் ஓதப்பெறுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக