ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

உகாதி

தெலுங்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உகாதி அல்லது யுகாதி ,தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா, எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல்6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி உகாதி சித்திரைமாதத்தின் முதல் நாள் ஆகும் சித்திரை முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது

த‌மிழ‌ர்க‌ள் த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடுவது போலவே இ‌ன்று ஆ‌ந்‌திர, க‌ர்நாடக ம‌க்களு‌ம் த‌ங்களது பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர். இ‌ன்று அதிகாலையில் எழுந்து வாச‌லி‌ல் வ‌ண்ண‌க் கோல‌மி‌ட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வ‌ழிபடுவா‌ர்க‌ள்.


இ‌தி‌ல் ஒரு ‌சிற‌ப்ப‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி எ‌ன்ற ஒரு உணவை தயா‌ரி‌ப்பா‌ர்க‌ள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக