திங்கள், ஏப்ரல் 18, 2011

மதுரை மீனாட்சி அம்மன் ------ தேரோட்டம்






உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை

திருவிழா நடந்து வருகிறது.

ஏப்ரல் -16  சனிக்கிழமை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.

இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்,ஏப்ரல் 17

ஞாயிறு காலை நடந்தது.

ஒட்டகம், யானை போன்ற பரிவாரங்கள் முன்செல்ல சுவாமி, பிரியாவிடை

பெரிய தேரிலும்,

மீனாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் காலை 4.30 மணியளவில்

எழுந்தருளினர்.

காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

மதுரை கீழ மாசிவீதியில் தேரடி வீதியில் இருந்து ஆயிரக்கணக்கான

பக்தர்கள் ‘ஹர ஹர சம்போ மகாதேவா’ என கோஷமிட்டபடி தேரை

வடம்பிடித்து இழுத்தனர்.

மேள, தாளங்கள் முழங்க தேர் நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்தது.

தேரில் சுவாமி  சம்ஹார கோலத்தில் இருந்தார்.

4 மாசி வீதிகளையும் இரண்டு தேர்களும் வலம் வந்து காலை 11 மணிக்கு

தேர் நிலைக்கு வந்தடைந்தது.
.
மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்

ஆயிரக்கணக்கான  பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.

. இன்றுடன் மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

 நிறைவு நாளான இன்று உச்சிக்காலத்தில் பொற்றாமரை குளத்தில்

தீர்த்தம், தேவேந்திர பூஜை நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை ரிஷபவாகனத்திலும், மீனாட்சி

அம்மன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள்.

இரவு 9 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த திருப்பரங்குன்றம்

முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம்

புறப்பட்டுச்செல்கிறார்கள்.

தேரோட்டம் நடந்த நான்கு மாசி வீதிகளிலும் அதைச் சுற்றியுள்

வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.

வழிநெடுகிலும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

பக்தர்களுக்காக நீர் மோர், விசிறிகளை பலர் வழங்கினர்.

அன்னதானமும் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

போடப்பட்டிருந்தது.

மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா நாளையுடன் முடிவடைகிறது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நாளை நடக்கிறது.


.


தங்கத்தேர்

அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத்தால் தேர் செய்யப்பட்டது.

இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத்தில் பணம் கட்ட வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர்

இழுக்கலாம். 

இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில்

செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ

வெள்ளியும், 222.400கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக