செவ்வாய், ஏப்ரல் 12, 2011

ஸ்ரீ ராம நவமி

12-04-2011 செவ்வாய் கிழமை ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது


ராமன் என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று
இருவிதமான பொருள்கள் உண்டு.
மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை
பாதிப்பதில்லை.
கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான
ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார்.
முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல
புன்னகையுடன் கிளம்பினார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை
"சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் என்று குறிப்பிடுகிறார்.
கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும்
என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார்.
எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம் என்று சொன்னதே
இல்லை.
"தர்மம் இப்படி சொல்கிறது "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள் என்று
தான் சொல்வார்.
 தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன்
காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார்.
 எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில்
மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.
காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : 
 கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப்
பெற்றெடுக்கும் பேறு பெற்றது.
அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள்.
எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு
பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால
வழக்கம்.
 ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது.
அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம் என்னும் பணத்தை தந்தார்.
கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள்.
"ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,
கெட்டுப்போகாதது இது என்று ராமனிடம் சொன்னாள்.
""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து
வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன்.
அதை என்றென்றும் பின்பற்று.
அது உன் உடனிருந்து காக்கும், என்று ஆசியளித்தாள்.

பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் :
தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற
மனநிலை வேண்டும்.
தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும்,
விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும்.
ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக்
கைவிடவில்லை.
எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும்.
ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர்
துருவங்கள்.
 ராமனுக்கு ஒரு தலை.
ராவணனுக்கு பத்துத்தலை.
ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது.
பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது.
அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே
இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது.
இதையே "தர்மம் தலை காக்கும் என்று இன்றும் போற்றுகின்றனர்.
இராமாயணத்தில், தர்மத்தை உலகில் நிலைநிறுத்திக் காட்டுவதற்காகவே
ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்தார்.
தனயனாய், சகோதரனாய், கணவனாய், அரசனாய், ஒரு நண்பனாய்,
பலப் பல விதங்களில் தர்மத்தை போதிப்பதே ஸ்ரீ ராமதத்துவமாகும்.
 ராமரின் பெருமையும், பெருந்தன்மையும் போற்றத்தக்கன.
இராவணன் மிகப் பெரிய சிவ பக்தன். மிகப் பெரிய அனுபவசாலி.
அப்படிப்பட்ட இராவணன், சாகும் இறுதித் தறுவாயில் இருந்தபோது,
தன் தம்பி இலக்குவனை அழைத்து அவரிடம் ராஜ தர்மத்தைக் கேட்டு
அறிந்துவருமாறு பணித்தவர் ஸ்ரீராமர்..
இராவணன் இறந்தபிறகு இறுதிக் கடனைச் செய்ய மறுத்த
இராவணனின் தம்பி விபீஷணனிடம், ""இப்படிப்பட்ட வெறுப்புணர்ச்சி, ஒருவர்
இறந்த பிறகும் கூட இருப்பது அதர்மம்.
மரணத்துடன் பகைமை முடிந்துவிட வேண்டும்.
நீயே இறுதிக் கடன்களைச் செய்யவேண்டும்.
நீ மறுத்தால் அந்தக் கடமைகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக''
அறிவுறுத்தினார்..
ராமநாமத்தைப் பற்றி சமய வரலாற்றிலும் ஒரு கதையுண்டு.
சிவபெருமான் நடத்திய திருவிளையாடலில்
சிவன் தனது கணங்களுக்கு
அதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற போட்டியில்
தம்பி முருகனைமுந்திக்கொண்டு, "ராமநாமத்துக்குள்' இந்த பிரபஞ்சமே
அடங்கியுள்ளது என்ற ரகசியத்தை தெரிந்துவைத்துக் கொண்டு தரையில்
"ராமா' என எழுதி அதைச்சுற்றி வந்து விநாயகர்,
கண அதிபதி பட்டம் பெற்றாராம்.
அனுமன் ஸ்ரீராமரின் பிரதம சீடன்.
ஸ்ரீராம நாமத்தை மட்டும் ஜெபிப்பதே இவரது கடன்.
இராமாயணம் ஜெபிக்கும் இடங்களில் இவர் இருப்பதாக ஒரு ஐதீகம்.
ஸ்ரீராம நாமம் அனுமன் பக்தர்களின் தாரகமந்திரம்..
இராமாயணத்தில் ஒரு சம்பவம் :
பட்டாபிஷேக சமயத்தில் அனைவரையும் சீதாராமர் கௌரவித்துவிட்டு,
அனுமனிடம் ஒரு முத்துமாலையை சீதாதேவி அன்பளிப்பு செய்தார்.
அனுமன் அந்த மாலையை ஒடித்து முத்துக்களைக் கடித்து அவற்றை கீழே
வீசி சின்னா பின்னமாக்கினார்.
இதைப்பார்த்த சீதாதேவி, ""ஆஞ்சநேயா என்ன காரியம் இது?'' என்று வினவ,
அதற்கு ஆஞ்சநேயர், ""அம்மா! எந்த முத்திலாவது ஸ்ரீராம நாமம் கேட்கிறதா
என்று சோதித்துப் பார்க்கிறேன். ஆனால் ஸ்ரீராம நாமம் ஒலிக்கவே இல்லை.
எனக்கெதற்கு இந்த மாலை?'' என்றார்.
இறைவனின் நாமத்திற்கு எதிரில் அனைத்தும் தூசு என்பதை விளக்கினார்.
மனிதனின் புகழ், மனித மேம்பாடு, உலக நன்மை என்ற இலட்சியங்களை
இராமாயணம் விவரிக்கின்றது.
காலம், செயல், காரண காரியங்கள், கடமைகளைப் பொறுத்தே ஒவ்வொரு
பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது..
இராமாயணம் இலட்சியங்களை எடுத்துக் காட்டி,
 மனிதத்தன்மையை பேணிக் காத்து,
 ஏகத்துவத்தைப் போதித்து, தெய்வீகத்தை அனுபவிப்பதற்காகவே
தோற்றுவிக்கப்பட்டது

இன்று புனர்பூசம் நட்சத்திரம்.

ஸ்ரீ ராமர் இந்நட்சத்திரத்தில் அவதரித்ததால் இந்நட்சத்திர நான்கு

பாதங்களும் தோஷமற்றது.
\
ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து
மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'
மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "' என்ற
பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.
பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.
 ""ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம'' என்னும் ராமதாரக மந்திர ஜெபம்
 இன்று செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக