புதன், ஏப்ரல் 20, 2011

‘சித்ர குப்த விரதம்’.

சித்ரா பௌர்ணமியன்று சித்திர புத்திரனார் விரதமும் வருகின்றது.
சித்திரகுப்தனை வழிபடுவது யமபயம் போக்கும் என்பது ஐதிகம்.
ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய,பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை.
 நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் நமது இறப்பின் பின் கணிக்கப்பட்டு அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ மறுபிறப்பில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது நம்பிக்கை.
இதன்மூலம் நாம் தீயனவற்றைத் தவிர்க்க வழியேற்படுகின்றது. சித்திரகுப்தன் என்றால் எமது மறைக்கப்பட்ட சித்திரம் என்று வடமொழியில் பொருள் வரும்.
உண்மையில் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ஓடும் இக்குறுகிய காலத்தில் எமது ஒவ்வொரு செய்கைகளும் எம் மனத்தில் அழியாத தடங்களை விட்டுச் செல்கின்றன.
இவற்றை நாம் மீட்டு எம் மனதைத் தூய்மையாக்கி மோட்சத்தை நோக்கி செல்லும் ஒரு வழியாக (சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்மவினைகள் தொடரும் என்பதால் அவரின் கருணையை வேண்டி) விரதமிருப்பதைக் கருதலாம்.
நோன்பு முறை-1
ஒரு வாழை இலையின்மீது அரிசியைப் பரப்பி, அதில் ஐந்து கலசங்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அங்கே எட்டு திசைக்குரிய இந்திரன் முதலான தெய்வங்களை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
கலசத்துக்கு நடுவில்எமதர்மராஜனையும், அவருக்கு வலது பக்கத்தில் சித்ரகுப்தரையும், இடது பக்கத்தில் சூரியனையும் ஆவாஹணம் செய்ய வேண்டும்.

சித்ரகுப்தனின் அருகில் வெள்ளியினாலான ஓலை, தங்கத்தாலான எழுத்தாணி வைப்பது உண்டு.
அவரவர் சக்திக்கு ஏற்ப ஓலையும், எழுத்தாணியும் வைக்கலாம். தங்கத்தில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மூன்று மரக்கால் நெல்லை ஒரு கூடையில் போட்டு, அந்தக் கூடையின்மீது புத்தாடைகளை விரிக்க வேண்டும்.
எமன், சித்ரகுப்தன், சூரிய நாராயணன் உருவங்களை கோல மாவினால் வரைந்து, நான்கு கால பூஜை செய்ய வேண்டும்.

இந்த பூஜையை அவரவர் வசதிப்படி செய்து கொள்ளலாம்.
 சித்ரா பௌர்ணமி அன்று ஒரே ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவுப் பொருளை உண்டு விரதம் இருந்து, பகலும் இரவும் சித்ரகுப்தனையும், எமனையும், சூரியனையும் பூஜிப்பதுதான் முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமாகும்.
கோலமாவில் சித்ரகுப்தனின் உருவத்தை எழுதி, கலசம் ஒன்றில் அவரை ஆவாஹணம் செய்து பூஜை செய்யும் வழக்கமும் உண்டு.
சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் அன்று பசுவின்பால், தயிர், நெய் சேர்க்காமல் இருந்தால் நல்லது.
சாதாரணமாக பூஜைகளில் பெரும்பாலும் பசும் பாலையே பயன்படுத்து-வோம். ஆனால் சித்ரகுப்த பூஜையில், எருமைப்பாலை அபிஷேகத்துக்கும் பாயசத்துக்கும் பயன்படுத்த வேண்டும்.
எமதர்மராஜனுடைய வாகனம் எருமை என்பதால், இந்த பூஜையில் எருமைப்பால் விசேஷம்.
எமதர்மராஜன் தென்திசைக்கு அதிபதி என்பதால், இந்நாளில் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்கள் தென்புறவாசலை அடைப்பதுபோல் போடும் வழக்கம் இன்றும் உள்ளது.
விரிவாக விரதம் இருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், எளிமையாக சித்ரகுப்தனின் படத்தை அலங்கரித்து,
‘சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகளீ புத்ர தாரிணம் சித்ரா ரத்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி,
இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்தருளும்படியும், இனிமேல் தவறு ஏதும் செய்யாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
நோன்பு முறை-2
சித்திரை பௌர்ணமியன்று அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடைகள் அணிந்து நீறு (விபூதி) அணிந்து வீட்டின் பூஜை அறையிலோ அல்லது தனியான இடத்திலோ நோன்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடத்தில் மாக்கோலம் போட வேண்டும்.
அம் மாக்கோலத்தில் தெற்கு நோக்கிய தேரில் எழுத்தாணி ஓலை இவற்றைக் கையில் கொண்ட சித்திரகுப்தர் திருவுருவம் வரைந்து
 கொள்ள வேண்டும்.
அதன் முன் ஒரு சிறு பித்தளை அல்லது வெள்ளி அல்லது தங்கக் குடத்தில் நூல் சுற்றி
குடத்தின் வாயில் மாவிலை வைத்து அதில் தேங்காய் வைத்து
 குடத்திற்கு வண்ண ஆடை உடுத்தி கூர்ச்சம் சார்த்தி
அக்கும்பத்தில் சித்திரகுப்தரை ஆவாகனம் செய்ய  வேண்டும். பின்பு ஓர்
காகிதத்தில்,கத்துநீர்க் கடற்பரப்பில் காண்எழில் நீலா தேவிப்
பத்தினிப் பெண்முயங்கப் பரிதியின் சேயாய்த் தோன்றும்
சித்திரகுப்தர் பேரின் தேவுஉனை நோற்பார்க் கென்றும்
நத்துநற் பேறது அனைத்தும் நயந்தருள் புரிவாய் போற்றி
எனும் பாடலை எழுதி அதற்கு மஞ்சள் காப்பிட்டு சுருட்டி

கும்பத்தின் முன் வைக்க வேண்டும்.
விதைநெல், எழுத்தாணி(பேனா), மாங்காய், பழங்கள், பானகம், பட்சணங்கள்

முதலியன வைத்து தாமரை முதலிய பூக்களால் சித்திரகுப்தரை அர்ச்சிக்க

வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம்எள்ளினால் செய்த உணவுப் பண்டங்கள்

ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.


பின்புதூப தீபம் கற்பூரம் காண்பித்து சித்திரகுப்தர் நோன்புக் கதை வாசித்து

தோத்திரப் பாடல்களைப் பாடி காகிதத்தில் எழுதி சுருட்டி வைத்த பாடலையும்

வாசித்து விதைநெல், எழுத்தாணி, ஆடை இவற்றோடு அன்னத்தையும் தானம்

செய்து உண்டு முடிக்க வேண்டும்

முடிவில் பாயசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் தானமாகக் கொடுப்பது

வழக்கம்

முதல் முறை விரதம் தொடங்கும் போது 5 அல்லது 9 கலசங்கள் வைத்து

அவைகளில் சித்திரகுப்தரையும் எட்டு திக்கு பாலகர்களையும் அல்லது

4திக்கு பாலகர்களையும் ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.
அன்று முழுதும் உப்பிடாத உணவு உண்ண வேண்டும்.

பால், தயிர், நெய், மோர் இவற்றை உண்ணக் கூடாது

நெல்லைச்சொக்கர்
நோன்பு முறை-3

பூஜையறையில் சித்திரகுப்தன் உருவத்தை மாக்கோலத்தால் வரைந்து

அவர்கையில் பென்சில், பேனா, காகிதம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

மாக்கோலம் போடும்போது தெற்குப் பக்கத்தை மூடிவிட்டு மற்ற

இடங்களில் கோலமிட வேண்டும்.
உப்பு, மோர், பால் சேர்க்காமல் பகலில் மட்டும் உணவருந்தி விரதமிருந்து

சித்திரகுப்தனை வழிபட்டு பூஜை செய்ய வேண்டும்.
வழிபட்டு முடிந்ததும் சித்திரகுப்தன் கையிலுள்ள பேனா, பென்சில், காகிதம்

போன்றவைகளை தானமாகத் தந்துவிட வேண்டும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமய சடங்கினால் தேவதைகள்

திருப்தியடைவதோடு மனிதர்களின் செயல்கள் மிகுந்த பரிவுடன்

தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் நம்பிக்கையாக உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக