வெள்ளி, ஏப்ரல் 08, 2011

சாணம்,பரங்கிபூ

சாணம் ஒரு விஷ நாசக்கிருமி என்பது நாம் அறிவோம்.

அதனை கரைத்து வீட்டில் பூசும் போதும் - வீட்டின் முன் தெளிக்கும்
பாம்பு, பூராண், பூச்சிகள்  போன்ற விஷ ஜந்துக்கள் வராது இருப்பதுடன்,
காற்றினையும் தூய்மைப் படுத்துகிறது.
நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான, விஞ்ஞான அறிவினைப்
பெற்று இருக்கிறார்கள் என்பதும் - அதனை சமயத்தோடு பூவினுள்
மணம் போல் இணைத்திருப்பதுங் கண்டு வியந்தேன்.
பரங்கி பூவில் ஒரு மருத்துவ குணமுண்டு.
அதனை தூர வைத்து முகர்ந்தால் - அதன் மகரந்தம் கற்றோடு கலந்து
சுவாசிக்கும் போது நம் உடலில் ஓர் ஆண்டுக்கான நோய் எதிர்ப்பு
சக்தி ஏற்படுகிறது.[அதாவது Antibiotic தன்மை]
 விஞ்ஞானம் இப்போதுதான் நோய்த் தடுப்பு மாத்திரைனை கண்டு பிடித்தது.
ஆனால், நமது மெய்ஞானம்எப்போதோ நடைமுறையில் கொண்டுவந்துவிட்டது.
இன்றும் கூட கிராமங்களில் குடிசை மீது பரங்கி கொடியினை பரவ விடுவதை நாம் காணலாம்.
நமது வாழ்க்கை இயற்கையோடு இணைந்த , இயைந்த வாழ்க்கை.
நாம் நமது சமயத்தை, அதன் தத்துவத்தை , உள்ளார்ந்த நோக்கதைபுரிந்துக்கொண்டால் வாழ்க்கை நமக்கு இன்பமும்,
பயனும் அளிக்கும்.
முடிந்தவரை முயற்று பலன் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக