சனி, ஏப்ரல் 09, 2011

ஸ்ரீ ராம நவமி நிவேதனம்





நீர்மோர்

தேவையான பொருள்கள்:
தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை

விரும்பினால்..வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு
செய்முறை:
  • புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து நன்கு டீ வடிகட்டியில் வடிகட்டவும்.
  • வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
  • மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்
பானகம்

தேவையான பொருள்கள்:
வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் – 4 கப்
ஏலப்பொடி – 2 சிட்டிகை
சுக்கு – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
  • வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
  • இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.
  • இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் அற்புதமாக இருக்கும்.
  • வடைப்பருப்பு
  • தேவையான பொருள்கள்:
    வெள்ளரிக் காய் – 2
    பயத்தம் பருப்பு – 1/4 கப்
    மாங்காய் – ஒரு சிறு துண்டு
    கறிவேப்பிலை -  சிறிது
    கொத்தமல்லித் தழை – சிறிது
    உப்பு -  தேவையான அளவு
    பெருங்காயம் – 1 சிட்டிகை
    எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்
செய்முறை:
  • பயத்தம் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிய வைக்கவும்.
  • வெள்ளரிக் காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அத்துடன் ஊறவைத்த பயத்தம் பருப்பு, மிகப் பொடியாகக் கீறிய மாங்காய்த் துண்டுகள், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • விரும்பினால் இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் கலக்கவும்.
  •  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக