ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

மதுரை மீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மார்ச்7  வியாழன் துவங்கியது வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது
அன்று
அவர்கள் முன்னிலையில் பகல் 12.1 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க, வேதமந்தி
 கோஷங்களுடன் சுந்தரேசுவரர் சன்னதியில் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.

 பின்பு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு
தீபாராதனைகள் நடந்தது.
        
முன்னதாக, காலை 7 மணியளவில் காலை ஆடி வீதிகள் வழியாக சுவாமி சன்னிதி கொடி மரத்திற்கு, யானை மீது கொடி கொண்டு வரப்பட்டது.

காலை 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மீனாட்சியும், சுந்தரேசுவரர் – பிரியாவிடையும் வந்தனர்

பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் வீற்றிருக்க, கணேஷ் பட்டர் தலைமையில் ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

மதியம் 12.05 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
வேத மந்திரங்கள், திருமுறை பாராயணம் பாடப்பட்டது.

பின், கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அம்மனும், சுவாமியும் வலம் வந்து, குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு 7 மணிக்கு மேல் சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வந்தனர்.
ஏப்ரல் 14-ம் தேதி மாலை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும்
16-ம் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.59 மணிக்குள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும்.

திருவிழா தொடங்கிய முதல் நாளான  இரவு 7 மணிக்கு அம்மன், சுவாமி ப்ரியாவிடை ஆகியோர் கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளினர்.

ஒவ்வொரு நாளும் அம்மன்-சுவாமி காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக