சனி, ஏப்ரல் 09, 2011

அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் அமைப்பு




கோயில் அமைப்பு
பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும்.
ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன.
அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன.
இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை.  மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன.
இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.
உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள்ளன.
 இதை 1559ல் சிராமலை செவ் வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார்.
மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது.
 வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட்டது.
பொற்றாமரைக்குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம்.
இத்துடன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக் கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன.



                                                            
                                                கோயில் உட்பிரகாரம்

பொற்றாமரைக்குளம்
நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி சிவன் தமதுசூலத் தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக் குளம்.
கோயி லுக்குரிய தீர்த்தங்களில் இது முதன் மையானது.
இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள்.
தேவேந்திரன் தனது சிவபூஜைக்காக பொற்றாமரையைப் பெற்றதும்,
நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். 
அமாவாசை, கிரகணம், மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் இக்குளத்தில் நீராடி சிவனை பூஜித்து வந்தால் வேண்டியதைப் பெறலாம் என்பது ஐதீகம். 165அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
திருக்குற ளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான்.





ஆயிரங்கால் மண்டபம்
கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது
 நடுவில் பெரிய நடராஜர் திருவுருவத்துடன் கூடிய இந்த மண் டபத்தில் 985 தூண்களும், 15 தூண் கள்இருக்க வேண்டிய இடத்தில் 2 உட்கோயில்களும் உள்ளன.
இங்கு ஏழிசை எழுப்பக்கூடிய 2 தூண்கள் உள்ளன.
வடக்கு ஆடி வீதி கோபுர வாயிலின் அருகே 5 இசைத்தூண்கள் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக் கலையின் சிறப்புக்களை விளக்கும் ஒரு அருங்காட்சி மண்டபமாக திகழ்கிறது.
அஷ்ட சக்தி மண்டபம்
மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது "அஷ்ட சக்தி மண்டபம்'.
18 அடி அகலமும், 25 அடி உயரமும், 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத்தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன் மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக் கின்றனர்.
இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும், அரசிகளான ருத்திரபதியம்மையும், தோளியம்மையும் ஆவர். 
பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும்,
முடிசூட்டிக்கொள்வ தும்,
ஆட்சி நடத்துவதும்,
வீரஉலா செல்வதும்,
இறைவனை காண்பதும்,
சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும்
இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
மீனாட்சி நாயக்கர் மண்டபம்
அஷ்ட சித்தி மண்டபத்தை அடுத்துள் ளது இந்த மண்டபம்.
110 தூண்கள் உள்ள இம்மண்டபத்தை 1707ல் விஜயரங்க சொக்கநாதநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டினார்.
முதலிப்பிள்ளை மண்டபம்
மீனாட்சி நாயக்கர் மண்டபத்தை அடுத்துள்ளது
இந்த மண்டபம். 25 அடி அகலமும், 60அடி நீளமும் கொண்ட இந்த மண்டபம் கடந்தை முதலியாரால் 1613ல் கட்டப்பட்டது.
 இதில் 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சி பிரம்மாண்டமாக அமைக் கப்பட்டுள்ளது.
 இதை அமைத்தவர் மருதுபாண்டியர்.
 இதில் சிவனின் "பிட்சாடனர்' சிலை மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல் மண்டபம்
1563ல் செட்டியப்பநாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது ஊஞ்சல் மண்டபம். வெள்ளிதோறும் இங்கு சுவாமி அம்மன் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
கிளிக்கூட்டு மண்டபம்
ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து கிளிக்கூட்டு மண்டபம் அமைந்துள் ளது. மீனாட்சி தன் கையில் கிளி ஏந்தி யிருப்பதை நினைவுபடுத்தும் வகை யில் அமைக்கப்பட்ட மண்டபம் இது.
1623ல் அபிதாக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது.
ஆறுகால் மண்டபம்
அம்மன் சன்னதியின் முன் ஆறுகால் மண்டபம் உள்ளது.
இதில்தான் குமரகுருபரர் அமர்ந்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற் றினார்.
மீனாட்சி ஒரு குழந்தை வடிவில் வந்து திருமலை மன்னர் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்தில் போட்டு மறைந்தாள் என்பர்.
திருக்கல்யாண மண்டபம்
விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் (1706-1732) இந்த மண்டபம் கட் டப்பட்டது.
இதைகட்டிய நாயக்கர் இந்த மண்டபத்தில் சிலையாக நிற்கிறார்.
இந்த மண்டபத்திற்கு மேற்கட்டு, மரசெதுக்கு வேலையை வயிநாகரம் வேங்கடாசலம் செட்டியாரும், நாகப்ப செட்டியாரும் செய்துள்ளனர்.
இந்த மண்டபத்தில் தான் ஆண்டு தோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
கம்பத்தடி மண்டபம்
சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு எதிரே இம்மண்டபம் உள்ளது.
 இதனை நந்தி மண்டபம் என்பார்கள்.
மண்ட பத்தின் நடுவே தங்க கொடி மரம், நந்தி பலிபீடம் ஆகியவையும் உள்ளது.
இது 1564ல் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
புது மண்டபம்
சொக்கநாதர் கோயிலுக்கு முன்னே தனித்து இருக்கும் பெரும் மண்டபம் புது மண்டபம்.
நாயக்க மன்னர்களின் கலை வண்ணத்தை உணர்த்தும் நீராழி மண்டபமாக திகழ்ந்தது அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக