திங்கள், ஏப்ரல் 04, 2011

உகாதி

உகாதி என்பது தெலுங்கு வருடப் பிறப்பு என்று மட்டுமே தெரியும். அன்று காலையில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வரும்படி அம்மா சொல்வார்கள்.போயிட்டு வருவேன். அம்மா உகாதி பச்சடி செய்து வைத்து இருப்பார்கள். அதன் புளிப்பும், இனிப்பும், கசப்பும் கலந்த சுவை அருமையாக இருக்கும். என்னை பொறுத்தவரையில் இவ்வளவுதான் உகாதி. அது தொடர்புடைய சுவாரசியமான விசியங்கள் கடந்த சில வருடங்களாகத் தான் தெரியும் என்னை போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நான் நினைப்பதால், எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவையும் நான் சில இணைய தளங்களிலிருந்து தான் எடுத்துள்ளேன். அவர்களுக்கு எனது நன்றி. இந்திய கணிதமேதையான பாஸ்கரசார்யா அவர்களின் கணக்குப்படி, உகாதி தினத்தன்றுதான் அந்த வருடத்தின் முதல் நாள், மாதம் தொடங்குவதாக கூறுகிறார். தாவரங்கள் துளிர் விடுவதும், செடிகள் பூத்துக் குழுங்குவதும், கனி மரங்கள் காய்ப்பதும், பூக்கள் மலர்வதும் இதுதான் இயற்கை சொல்லித் தருகின்ற பாடம். இப்படி புது உயிர்களின் தொடக்கத்தை உகாதியின் போதுதான் பார்க்க முடிகிறது. உகாதி காலக்கட்டத்தில் மா காய்த்துக் குலுங்கி தனது இன்பமான மணத்தை பரப்பி நிற்கும். வேப்பமரங்களும் இக்கலாக்கட்டத்தில் பூத்து சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை ஆரோக்கியமாக மாற்றும் பணியைச் செய்கிறது. உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும், தோல் பிரச்னை உடையவர்களுக்கும் நன்மை பயக்கும். வெல்லம் இரத்த விருத்தியை ஏற்படுத்தும். மாங்காய் மற்றும் புளி ஆந்திரகாரர்களின் அனைத்து சமையலிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் உகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அன்று காலை கோவில் தங்க வாசல் அருகில் ஏழுமலையான் முன்பு பஞ்சாங்கம் படிக்கப்படும். அதன் பின் உற்சவருக்கு தங்க, வைர நகைகள் அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ பூபால வாகனத்தில் தங்க வாசல் முன்பாக அழைத்து வரப்படுவார். அத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பிரகார சன்னதி மற்றும் வெளிப்பிரகாரம், கொடி மரம், மகா துவாரம், விமான பிரகாரம், கொடிமரம், பலி பீடம், படிகாவலி மற்றும் பல பகுதிகளில் விலை உயர்ந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். எங்கு பார்த்தாலும் மலர்களால் செய்யப்படும் அலங்காரம் கண்களுக்கு விருந்தளிக்கும். அன்றைய தினம் திருப்பதி உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். மாங்காய்காய்க்கும் சீசன் .வேப்பிலை மரம் பூத்துஇருக்கும்நேரம்; அவற்றின் பலனை பயன்படுத்தி கொள்ள நம் மக்கள் கண்டறிந்த சுவையான பச்சடி . பண்டிகைகளும் ஒரு நோக்கத்துடன் நம் நாட்டில் கொண்டாடப் படுகின்றன; அக்காலங்களில் செய்யப்படும் உணவு வகைகளும் அந்தந்த பருவ நிலை, அப்போது கிடைக்கும் காய்கறிகள், பழங்களை கொண்டு செய்தல், என எவ்வளவு திட்டமிட்ட செயல்பாடுகள் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி யுள்ளார்கள். அவற்றை அதன் பாரம்பரியம் அழியாமல் வழிவழியாய் நாமும் கடை பிடித்து, நம் பிள்ளைகளுக்கும் முறையாய் சொல்லிக் கொடுப்பது நமது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக