திங்கள், ஏப்ரல் 18, 2011

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

சனிக்கிழமை, ஏப்ரல் 16, 2011மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்

முக்கிய ‌நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று

மிக வெகு விமரிசையாக நடந்தது.

காலை 10.30 முதல் 10.56 மணிக்குள் மிதுன லக்னத்தில் இந்தத்

திருக்கல்யாணம் நடந்தது.

மீனாட்சி அம்மன் சார்பில் பிரகாஷ் பட்டர்,

சொக்கநாதர் சார்பில் அசோக் பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் மீனாட்சி அம்மனுக்கு வைர தாலி கட்டப்பட்டது.

திருமணம் முடியும் வரை மணமக்கள் மேடையை விட்டு வெளியே
வரக்கூடாது என்பதற்காக பட்டர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
சுவாமிக்கு தேவஸ்தானம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில்
பரி வட்ட மும், அம்மனுக்கு பட்டு வஸ்திரமும் சாத்தப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் 4 சித்திரை வீதிகளில் சுற்றி

வந்து பின் கோவிலில் உள்ள முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி

ஊஞ்சலாடினர்.

காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும்,

தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

காலை 9.57 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் வடக்கு-மேல


ஆடிவீதியில் அமைக்கப்பட்டிருந்த மண மேடைக்கு வருகை தந்தார்.

பின்னர் மீனாட்சி அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான்

தெய்வானை ஆகியோர் அடுத்தடுத்து மேடைக்கு வந்தனர்.

பின்னர் 10.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர்.


10.35 மணிக்கு விநாயகர் பூஜையும், முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

10.40 மணிக்கு மந்திரங்கள் ஓதி மேடையில் யாகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் பல்வேறு பூஜைகளும், திருப்பாலிகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


சரியாக 10.56 மணிக்கு மங்கல இசை முழங்க வேத மந்திரங்கள் முழங்க

சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுக்கு மங்களநாண் வைர தாலி

அணிவித்தார்.

பன்னீர் தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது

அப்போது ஏராளமான பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டனர்.

மேடையிலேயே சுவாமி, அம்மன் மீது பூக்கள் தூவப்பட்டது.

மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் கட்டப்பட்ட நேரத்தில் கோயிலில்

.பக்தர்கள் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோவிலிலும், கோவில்

வெளியேயும் 19 டி.வி.க்கள் வைக்கப்பட்டிருந்தன.

 பின்னர் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை விருந்து

வழங்கப்பட்டது.

 மேலும் பக்தர்கள் வரிசையாக நின்று திருமண மொய் பணத்தை

செலுத்தினர்.


திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது திருமாங்கல்ய

கயிறுகளை மாற்றிக் கொண்டனர்
.திருமணத்தைத் தொடர்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள
குண்டோதரன் பூத சிற்பத்திற்கு விருந்து படைக்கப்பட்டது.


மாலை 4 மணி வரை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக் கோலத்
தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர்.
நேற்று காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை

மற்றும் பவளக்கனிவாய் பெருமாள், கோவிலுக்கு வந்தனர்.
காலை 7 மணியளவில் சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வ லம்
நடந்தது.
பின், சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் உற்சவர் சன்னிதியில்
சுவாமியும், அம்மனும் அலங்கார மாகி, பழைய திருக்கல்யாண
மண்டபத்தில் எழுந்தருளினர்.
காலை 9.10 மணிக்கு மேற்காடி வீதியாக, பூக்களால் அலங்கரிக் கப்பட்ட
மண மேடையில் இருவரும் எழுந்தருளினர்.
சுவாமி வெண் பட்டும், அம்மன் செந்நிற பட்டும் அணிந்தி ருந் தனர்.
சுவாமிக்கு வைரக் கிரீடமும், அம்மனுக்கு தங்கக் கவசமும்
சாத்தப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தின் போது மட்டுமே தங்கக் கவசம் அணிந்த அம்மனை
தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.

நிகழ்வுகள்-

ஏப்.,16ல் திருக்கல்யாணம் நடப்பதால், முதல் நாள் நள்ளிரவு முதல்

அம்மனுக்கும், சுவாமிக்கும் அலங்காரம் செய்யும் பணி துவங்கிவிடுகிறது.

முகூர்த்த நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பு, கோயிலில் இருந்து புறப்பட்டு, தங்க

சிம்மாசனத்தில் சுவாமி சித்திரை வீதியில் உலா வருவார்.

பின், கோயில் பழைய திருக்கல்யாண மண்டபம் அருகில் உள்ள முத்துராமய்யர்

மண்டபத்தில் ஊஞ்சலாடி விட்டு, மணமேடையில் எழுந்தருளுவர்.

மேலகோபுர வாசலில், பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மனை

சுந்தரேஸ்வருக்கு தாரை வார்த்து கொடுக்கும் கன்னிகாதானம் நடக்கும்.

 பின், அவரது பாதத்தை கழுவி, மணமேடைக்கு அழைத்து வருவார்.

இதற்காக, திருப்பரங்குன்றத்தில் இருந்து தங்க பல்லக்கில் முருகன்,

தெய்வானையுடன் பெருமாள் புறப்பாடாகி, மீனாட்சி அம்மன் கோயில் நால்வர்

சன்னதியில் எழுந்தருளுவார்

திருமணம் முடிந்ததை தொடர்ந்து, ஏப்.,19 காலையில் விடையாத்தி சப்பரத்தில்

சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும், சிம்மாசனத்தில் பவளக்கனிவாய்

பெருமாள், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்கு

ஆவணிமூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வர்.

 மாலையில் சுவாமிகள் பூ பல்லக்கில் எழுந்தருளி, ஆவணி மூல

வீதிகளில்வலம்சென்று திருப்பரங்குன்றம் வந்தடைவர்.


தந்தைக்கு பாடம் உபதேசித்ததால், மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருக்கல்யாணத்தில், சுப்பிரமணிய சுவாமி குரு ரூபத்தில் பங்கேற்பார்

என்பதுஐதீகம்.
முருகன் உக்கிரசேனன் பாண்டியனாக பிறந்து மதுரையை ஆண்டவர்

என்ற ஐதீகம் காரணமாக இவருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலில் '

செங்கோல் வழங்கப்படும்.
தமிழகத்திலேயே இந்த இரு கோயில்களில் மட்டுமே செங்கோல்

வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.




.படங்கள் -நன்றி TamilMedia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக