புதன், ஏப்ரல் 20, 2011

சித்திரகுப்தர்



சித்ரகுப்தர்

மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்க பரமசிவனால்

பொற்பலகையில் ஓவியமாக வரையப்பட்டு அம்பாளின் அருட்பார்-

வையால் உயிர் பெற்றவர் சித்ரகுப்தர்.

ஓவியத்தில் இருந்து பிறந்ததால் இவருக்கு சித்ரபுத்ரன், சித்ரகுப்தன் என்ற

திருநாமங்கள் ஏற்பட்டன.

சித்ரகுப்தன் என்பதற்கு இன்னொரு வகையான அர்த்தமும் சொல்வதுண்டு.

‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு வியப்பூட்டுவது என்று பொருள். ‘

குப்தம்’ என்பது மந்தணம் என்று பொருள்படும்.

இவர் ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக்

காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார்.

சித்’ என்றால் மனம், ‘அப்தம்’ என்றால் மறைவு என்றும் பொருள்.

மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின்

அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர்

 உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம் தலைமைக் கணக்கராக

இருப்பவர்.

அவரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா பௌர்ணமி என்றும்

கூறுவர்.

இந்தியாவில் பதினொரு இடங்களில்

சித்ரகுப்தருக்கு  கோயில் இருந்தாலும்,

தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் தனிக்

கோயில் உள்ளது.

பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள நெல்லுக்கார

வீதியில் உள்ள கோயிலில், மனைவி

சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார்.

இவளைப் பிரபாவதி என்றும், கர்ணிகை என்றும்

சொல்கிறார்கள்.

இக்கோயிலில் மூலவராக அமர்ந்த நிலையிலும், உத்ஸவராக நின்ற

நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார்.
.
இந்தக் கோயில், கருணீகர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக

ஐதீகம்.

அன்று காலையில் சித்ரகுப்தருக்கு மகாபிஷேகமும், மாலையில்

திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

. நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக

சித்ரகுப்தனைக் கூறுவர்.

சித்ரா பௌர்ணமி நாளன்று செய்யும் சித்ரகுப்த பூஜை, சித்ரகுப்தரின்

அருளைப் பெற்றுத் தரக்கூடியதாகும்.

அந்த நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், கேது கிரகத்தால்

விளையும் தீமைகள் ஒடுங்கும்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு வகையான விசேஷ பூஜை முறையை

காரணாகமம் சொல்லி இருக்கிறது.

சித்ரா பௌர்ணமி அன்று மேற்கொள்ளும் ஒரு விசேஷ விரதம் ‘சித்ர


குப்த விரதம்’.


கயிலாயத்தில் ஒருநாள் பரமேஸ்வரன் உமையம்மையோடும் வீற்றிருந்தார்.

திருமால், பிரமன், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்

பெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் தர்மத்தின் பாதுகாவலனான கூற்றுவன் எனும் யமன் சுவாமியைத்

தரிசிக்க வந்தான்.


சிவபிரானார் அவனை நோக்கி புன்னகைத்து தர்மனே! உன் முகம் வாட்டம்

அடைந்துள்ளதன் காரணம் என்ன?” என்று கேட்டார்.


யமனும் சுவாமி! நாளுக்கு நாள் எனது பணியின் பாரம் கூடிக் கொண்டே

இருக்கிறது. உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை நான் ஒருவனே

கணக்கிட வேண்டியதிருக்கிறது.

அக்கணக்குகளை ரகசியமாகவும் முறையாகவும் பார்க்கத் தெரிந்த ஓர்

உத்தமன் எனக்குத் துணையாய் இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன்

என்றான்.


பெருமானும் பிரமனை நோக்கி அயனே! இவன் கோரிக்கையை நேரம் வரும்

போது நிறைவேற்ற ஆவன செய்வாயாகஎன்றருளினார்

பிரமனும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டான்.


சித்திரகுப்தர் அவதாரம்


இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை
ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு
அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல்
ஏற்பட்டது.
அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட
வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக
உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன்
வாழ்ந்து வந்தார்
.அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த
புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர்.
அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக
தோன்றினார்.
வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும்
பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாற்றுவார்கள்.

கயிலாயத்தில் ஒருநாள் சிவபிரான் ஒரு பொன்னாலான பலகையில் ஓர்

உருவத்தை வரைந்தார் என்றும், அச்சித்திரம் உயிர்பெற்றது என்றும்

அவரே சித்திரகுப்தர் என்றும் மற்றுமொரு புராணம் சொல்லும்

யமன் பிரமனிடம் வேண்ட அவர் பல்லாயிரக்கணக்கான வருடங்கள்

தவமிருந்து தனது உடலிலிருந்து சித்திரகுப்தரைத் தோற்றுவித்தார் எனவும்,

பிரமனின் காயத்திலிருந்து (உடலில் இருந்து) தோன்றியதால்

சித்திரகுப்தருக்கு காயஸ்தர் என ஒரு பெயர் உண்டு எனவும் வட

இந்தியாவில் சொல்லப்படுகிறது.


தமிழக கிராமங்களில் இந்திரன் இந்திராணி வளத்த பசுவுக்குப் பிறந்தவர்

சித்திரகுப்தர் எனக் கூறப்படுகிறது

சித்திரகுப்தர் படைப்புத் தொழில் நடத்தல்


குழந்தைக்கு செய்யவேண்டிய சடங்குகளை சூரியன் செய்வித்தான்.

சித்திரகுப்தர் கற்க வேண்டிய அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

தன் தந்தையின் அறிவுரைப் படி சிவபிரானை நோக்கித் தவமிருந்தார்.

இவரின் தவத்திற்கு மனம் மகிழ்ந்த சிவனார் தோன்றி சித்திரகுப்தா! நீ

நினைத்த எல்லாம் நடக்கும்என வரமருளி மறைந்தார்.

சிவனார் கொடுத்த வரத்தை சோதனை செய்வதற்காக சித்திரகுப்தர் படைப்புத்

தொழிலை நடத்த ஆரம்பித்தார்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவர்கள் சூரியனுக்கு இத்தகவலை

சொன்னார்கள்.
சூரியனும் தன் மகனை அழைத்து மகனே! படைப்புத் தொழில் என்பது

பிரமா செய்யவேண்டிய தொழிலாகும் என்பது சிவபிரான் விதித்த

நியதியாகும்.
அதை நீ மாற்றுவது முறையாகாது. உனக்குரிய பணி காத்திருக்கின்றது.

நேரம் வரும்போது நீ அதை ஏற்றுத் திறம்பட நடத்துவாயாகஎன்று

அறிவுரை கூறினான்.
சித்திரகுப்தரும் அதை ஏற்றுக் கொண்டு படைப்புத் தொழிலை கைவிட்டார்
திருமணம்



இவருக்கு மணம் செய்விக்க வேண்டிய காலம் வந்ததும்

 சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான

மயன்பிரம்மாவின் மகள் பிரபாவதி,

மனுபிரம்மாவின் மகள் நீலாவதி,

விசுவபிரம்மன் மகள் கர்ணிகி

ஆகிய மூன்று பெண்களை சூரியன்

சித்திரகுப்தருக்கு மணம் செய்வித்தான்
சித்திரகுப்தர் கணக்கராதல்


சிறிது காலம் கழித்து தேவர்கள் சித்திரகுப்தரிடம் வந்து தாங்கள்

யமதர்மராஜாவிடம் கணக்கராக அமர்ந்து உயிர்களின்

பாவபுண்ணியங்களை எழுதித் தரவேண்டும்எனக் கேட்டுக் கொண்டனர்.

சித்திரகுப்தரும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்...
யமனின் பட்டணமான வைவச்சுத நகரம் விசுவகர்மாவால் நிர்மாணிக்கப்

பட்டதாகும்.
இந்நகரம் வானில் விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்ல வல்லது.

இந்நகரத்தின் மையத்தில் யமன் தர்பார் இருக்கும்.
இதில் முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் இருப்பர்.

இத்தகைய செழிப்புள்ள நகரத்திற்குச் சென்று சித்திரகுப்தர் யமனைக்

கண்டு நடந்ததைக் கூறி கணக்கராகப் பணியாற்ற வந்திருப்பதைச்

சொன்னார்.
யமனும் மிக மகிழ்ந்து சிவபிரானைப் போற்றி வழிபட்டு இவருக்கு

கணக்கர் பதவியை வழங்கினான்.

சித்திரகுப்தர் பிரமனின் புத்திரர்களான சாரணர்கள் என்பவர்கள் மூலமாக

உயிர்களின் பாவ புண்ணியங்களை அறிந்து ரகசியமாக எழுதிக் கொள்வார்.

யமன் சித்திரகுப்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

கணக்குகளை ரகசியமாக வைத்துக் கொள்வதால் இவர்சித்திரகுப்தர்என

அழைக்கப்படுகிறார்.
சிவபிரான் பொன் பலகையில் வரைந்தபோது பிறந்ததால் இப்பெயர்

பெற்றார் என்றும் புராணங்கள் கூறும்.
சித்திரகுப்தர் திருவுருவம்

சூரியனுக்கும் நீலாதேவிக்கும் பிறந்த இவர் யம தர்ம ராஜனுக்கு

உதவியாக இருந்து உயிர்களின் பாவ புண்ணியக் கணக்குகளையும்

ஆயுளையும் கணித்துக் கணக்கெழுதி வருகிறார்.
இவர் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஏடும் வைத்துக்

கொண்டு வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்துக் கொண்டு சுகாசன

நிலையில் வீற்றிருப்பார்.
அக்ர சந்தானி என்பது இவர் வைத்துள்ள கணக்குப் புத்த்கத்தின் பெயர்.

நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதி இவரே.

(சித்திரகுப்த) நயினார் நோன்புக் கதை

பண்டைத் தமிழகத்தில் சித்திரகுப்த நயினார் நோன்பும் மிகப்

பிரசித்தமானது
முத்திபுரியில் கலாவதி என்றொரு இளவரசி இருந்தாள்.

 ஒரு சித்திரை பௌர்ணமியன்று அவள் தன் தோழிகளோடு கங்கையில்

நீராடச் சென்றாள்.

அப்போது வழியில் இருந்த ஒரு சோலையில் பெண்கள் சிலர் பூஜை

செய்யும் ஒலி கேட்டது.

கலாவதி விரைந்து அச்சோலைக்குள் சென்று பார்த்தாள்.

அங்கே தேவ கன்னியர்கள் சிலர் பூஜையில் ஈடுபட்டிருந்தனர்.

அவளைக் கண்ட தேவ கன்னி ஒருத்தி அவளருகே வந்தாள்.

கலாவதி அவளிடம் நீங்கள் யார்? இங்கே என்ன பூஜை செய்கிறீர்கள்?”

என்று வினவினாள்
 அவளும் நாங்கள் தேவலோகத்துப் பெண்கள்.

இந்தப் பூஜைக்கு சித்திரகுப்தர் நோன்பு என்று பெயர்.

இதைக் கடைப்பிடித்தால் நாம் சகல செல்வங்களும் பெறலாம்.

 மனம் நிறைந்த கணவர் கிடைப்பார்என்றாள்.

கலாவதியும் அந்த தேவ கன்னியிடம் பூஜையின் முறைகளைக் கேட்டுக்

கொண்டு கடைபிடித்தாள்.

அதன் பயனாக ஆகமபுரியின் அரசனான வீரசேனன் கலாவதியின் அழகைக்

கேள்விப்பட்டு அவளை மணம் புரிந்து கொண்டான்


 

‘சித்ர குப்த விரதம்’.

சித்ரா பௌர்ணமியன்று சித்திர புத்திரனார் விரதமும் வருகின்றது.
சித்திரகுப்தனை வழிபடுவது யமபயம் போக்கும் என்பது ஐதிகம்.
ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய,பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை.
 நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் நமது இறப்பின் பின் கணிக்கப்பட்டு அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ மறுபிறப்பில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது நம்பிக்கை.
இதன்மூலம் நாம் தீயனவற்றைத் தவிர்க்க வழியேற்படுகின்றது. சித்திரகுப்தன் என்றால் எமது மறைக்கப்பட்ட சித்திரம் என்று வடமொழியில் பொருள் வரும்.
உண்மையில் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ஓடும் இக்குறுகிய காலத்தில் எமது ஒவ்வொரு செய்கைகளும் எம் மனத்தில் அழியாத தடங்களை விட்டுச் செல்கின்றன.
இவற்றை நாம் மீட்டு எம் மனதைத் தூய்மையாக்கி மோட்சத்தை நோக்கி செல்லும் ஒரு வழியாக (சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்மவினைகள் தொடரும் என்பதால் அவரின் கருணையை வேண்டி) விரதமிருப்பதைக் கருதலாம்.
நோன்பு முறை-1
ஒரு வாழை இலையின்மீது அரிசியைப் பரப்பி, அதில் ஐந்து கலசங்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அங்கே எட்டு திசைக்குரிய இந்திரன் முதலான தெய்வங்களை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
கலசத்துக்கு நடுவில்எமதர்மராஜனையும், அவருக்கு வலது பக்கத்தில் சித்ரகுப்தரையும், இடது பக்கத்தில் சூரியனையும் ஆவாஹணம் செய்ய வேண்டும்.

சித்ரகுப்தனின் அருகில் வெள்ளியினாலான ஓலை, தங்கத்தாலான எழுத்தாணி வைப்பது உண்டு.
அவரவர் சக்திக்கு ஏற்ப ஓலையும், எழுத்தாணியும் வைக்கலாம். தங்கத்தில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மூன்று மரக்கால் நெல்லை ஒரு கூடையில் போட்டு, அந்தக் கூடையின்மீது புத்தாடைகளை விரிக்க வேண்டும்.
எமன், சித்ரகுப்தன், சூரிய நாராயணன் உருவங்களை கோல மாவினால் வரைந்து, நான்கு கால பூஜை செய்ய வேண்டும்.

இந்த பூஜையை அவரவர் வசதிப்படி செய்து கொள்ளலாம்.
 சித்ரா பௌர்ணமி அன்று ஒரே ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவுப் பொருளை உண்டு விரதம் இருந்து, பகலும் இரவும் சித்ரகுப்தனையும், எமனையும், சூரியனையும் பூஜிப்பதுதான் முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமாகும்.
கோலமாவில் சித்ரகுப்தனின் உருவத்தை எழுதி, கலசம் ஒன்றில் அவரை ஆவாஹணம் செய்து பூஜை செய்யும் வழக்கமும் உண்டு.
சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் அன்று பசுவின்பால், தயிர், நெய் சேர்க்காமல் இருந்தால் நல்லது.
சாதாரணமாக பூஜைகளில் பெரும்பாலும் பசும் பாலையே பயன்படுத்து-வோம். ஆனால் சித்ரகுப்த பூஜையில், எருமைப்பாலை அபிஷேகத்துக்கும் பாயசத்துக்கும் பயன்படுத்த வேண்டும்.
எமதர்மராஜனுடைய வாகனம் எருமை என்பதால், இந்த பூஜையில் எருமைப்பால் விசேஷம்.
எமதர்மராஜன் தென்திசைக்கு அதிபதி என்பதால், இந்நாளில் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்கள் தென்புறவாசலை அடைப்பதுபோல் போடும் வழக்கம் இன்றும் உள்ளது.
விரிவாக விரதம் இருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், எளிமையாக சித்ரகுப்தனின் படத்தை அலங்கரித்து,
‘சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகளீ புத்ர தாரிணம் சித்ரா ரத்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி,
இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்தருளும்படியும், இனிமேல் தவறு ஏதும் செய்யாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
நோன்பு முறை-2
சித்திரை பௌர்ணமியன்று அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடைகள் அணிந்து நீறு (விபூதி) அணிந்து வீட்டின் பூஜை அறையிலோ அல்லது தனியான இடத்திலோ நோன்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடத்தில் மாக்கோலம் போட வேண்டும்.
அம் மாக்கோலத்தில் தெற்கு நோக்கிய தேரில் எழுத்தாணி ஓலை இவற்றைக் கையில் கொண்ட சித்திரகுப்தர் திருவுருவம் வரைந்து
 கொள்ள வேண்டும்.
அதன் முன் ஒரு சிறு பித்தளை அல்லது வெள்ளி அல்லது தங்கக் குடத்தில் நூல் சுற்றி
குடத்தின் வாயில் மாவிலை வைத்து அதில் தேங்காய் வைத்து
 குடத்திற்கு வண்ண ஆடை உடுத்தி கூர்ச்சம் சார்த்தி
அக்கும்பத்தில் சித்திரகுப்தரை ஆவாகனம் செய்ய  வேண்டும். பின்பு ஓர்
காகிதத்தில்,கத்துநீர்க் கடற்பரப்பில் காண்எழில் நீலா தேவிப்
பத்தினிப் பெண்முயங்கப் பரிதியின் சேயாய்த் தோன்றும்
சித்திரகுப்தர் பேரின் தேவுஉனை நோற்பார்க் கென்றும்
நத்துநற் பேறது அனைத்தும் நயந்தருள் புரிவாய் போற்றி
எனும் பாடலை எழுதி அதற்கு மஞ்சள் காப்பிட்டு சுருட்டி

கும்பத்தின் முன் வைக்க வேண்டும்.
விதைநெல், எழுத்தாணி(பேனா), மாங்காய், பழங்கள், பானகம், பட்சணங்கள்

முதலியன வைத்து தாமரை முதலிய பூக்களால் சித்திரகுப்தரை அர்ச்சிக்க

வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம்எள்ளினால் செய்த உணவுப் பண்டங்கள்

ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.


பின்புதூப தீபம் கற்பூரம் காண்பித்து சித்திரகுப்தர் நோன்புக் கதை வாசித்து

தோத்திரப் பாடல்களைப் பாடி காகிதத்தில் எழுதி சுருட்டி வைத்த பாடலையும்

வாசித்து விதைநெல், எழுத்தாணி, ஆடை இவற்றோடு அன்னத்தையும் தானம்

செய்து உண்டு முடிக்க வேண்டும்

முடிவில் பாயசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் தானமாகக் கொடுப்பது

வழக்கம்

முதல் முறை விரதம் தொடங்கும் போது 5 அல்லது 9 கலசங்கள் வைத்து

அவைகளில் சித்திரகுப்தரையும் எட்டு திக்கு பாலகர்களையும் அல்லது

4திக்கு பாலகர்களையும் ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.
அன்று முழுதும் உப்பிடாத உணவு உண்ண வேண்டும்.

பால், தயிர், நெய், மோர் இவற்றை உண்ணக் கூடாது

நெல்லைச்சொக்கர்
நோன்பு முறை-3

பூஜையறையில் சித்திரகுப்தன் உருவத்தை மாக்கோலத்தால் வரைந்து

அவர்கையில் பென்சில், பேனா, காகிதம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

மாக்கோலம் போடும்போது தெற்குப் பக்கத்தை மூடிவிட்டு மற்ற

இடங்களில் கோலமிட வேண்டும்.
உப்பு, மோர், பால் சேர்க்காமல் பகலில் மட்டும் உணவருந்தி விரதமிருந்து

சித்திரகுப்தனை வழிபட்டு பூஜை செய்ய வேண்டும்.
வழிபட்டு முடிந்ததும் சித்திரகுப்தன் கையிலுள்ள பேனா, பென்சில், காகிதம்

போன்றவைகளை தானமாகத் தந்துவிட வேண்டும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமய சடங்கினால் தேவதைகள்

திருப்தியடைவதோடு மனிதர்களின் செயல்கள் மிகுந்த பரிவுடன்

தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் நம்பிக்கையாக உள்ளது.